ஜூன் 02 2005
தராசு
கார்ட்டூன்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
டெலிவுட்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
உள்ளங்கையில் உலகம்
கவிதை
கார் ஓட்டலாம் வாங்க
ஆன்மீகக் கதைகள்
நையாண்டி
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : புகைக்குத் தடை
- மீனா [meena@tamiloviam.com]
| Printable version | URL |

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம் பெறுவதற்கு மத்திய அரசு விதித்துள்ள திடீர் தடை சிலரால் ஆதரிக்கப்பட்டாலும் பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. சினிமா சம்மந்தப்பட்ட பிரமுகர்கள் மட்டுமல்லாமல் செய்தி ஒலிபரப்புத் துறை அதிகாரிகளே இந்த தடை சட்டத்தை விமர்சித்து வருகிறார்கள். சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாளை முன்னிட்டு திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் வருவதற்கு அரசு தடை விதித்துள்ளது என்றாலும் உண்மையில் யாருக்காக? யாரைத்திருப்திபடுத்த? எதற்காக? இயற்றப்பட்டது இச்சட்டம் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக ஆகியிருக்கிறது.

சினிமாவில் நடிக்கும் கலைஞர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் எவ்வளவோ விஷயங்களைச் சொல்கிறார்கள். அதில் நல்லதும் இருக்கும். கெட்டது இருக்கும். நடிகர்கள் புகைப் பிடிக்கும் காட்சிகள் ஆண்டாண்டு காலமாக சினிமாவில் காட்டப்பட்டு தான் வந்திருக்கிறது. இது தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது அனைத்து மொழிப் படங்களிலும் நடக்கும் நிகழ்சிதான். சினிமாக்களில் புகை பிடிப்பது மட்டுமல்லாமல் வேறு பல விஷயங்களையும் காண்பித்து வருகிறார்கள். இதற்கெல்லாம் தடைபோட மத்திய அரசு முயலுமா? அப்படியென்றால் போக்கிரிகளாகவும், கடைந்தெடுத்த அயோக்கியர்களாகவும் அரசியல்வாதிகளை காட்டுவதற்கல்லவா முதலில் தடை செய்திருக்க வேண்டும்? பொது இடத்தில் புகை பிடிக்கக்கூடாது என்ற சட்டமே கேட்பாரற்று வீதியில் கிடக்கிறது. இந்த நிலையில் இப்படி ஒரு புதுச்சட்டம் தேவைதானா?

நடிகர் ஷாருக் கான் தனக்கு ஒரு எட்டாவது படிக்கும் மாணவி எழுதிய உருக்கமான கடித்தத்தின் விளைவாக இனி தன்னுடைய படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்வதாக கூறியதாக செய்திகள் உலவுகின்றன. தமிழகத்தைப் பொறுத்த மட்டில் தன்னுடைய உதடு அறுவை சிகிச்சை காரணமாகவே ரஜினி தன்னுடைய சமீபத்தைய படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் ஏதும் இல்லாதவாறு பார்த்துக்கொண்டார். ஆக நடிகர்களோ திரையுலகைச் சேர்ந்தவர்களோ இச்சட்டத்திற்கு பயந்து தங்களது பழக்கங்களை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பது நிச்சயம். தணிக்கைக் குழு தலைவர் சர்மிளா தாகூர் வெளியிட்டிருக்கும் அறிக்கையே இதற்கு தகுந்த சாட்சி.

இந்தத் தடையின் முக்கிய நோக்கமாகக் கூறப்படும் புகை பிடிப்பதை தடை செய்யவேண்டும் என்ற முழக்கம் சரியானதாக இருந்தாலும் இந்தச் சட்டத்தை நடைமுறையில் செயல்படுத்துவதில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் சம்மந்தப்பட்ட கலைத்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து தீர ஆலோசித்த பிறகே மத்திய அரசு இத்தகைய சட்டத்தை இயற்றியிருக்க வேண்டுமே தவிர எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரீதியில் செயல்பட்டிருப்பது வருந்தத்தக்க விஷயமாகும். ஏற்கனவே திரையுலகினர் மீது மக்களும் அரசியல்வாதிகளும் தங்களது சொந்த லாபத்திற்காக ஏகப்பட்ட வழக்குகளையும் போராட்டங்களையும் நடத்திவரும் வேளையில் மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் நிச்சயம் தேவையில்லாத ஒன்றே தவிர வேறு ஒன்றும் இல்லை.

 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |