ஜூன் 3 2004
தராசு
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
உங்களுக்குள்ளே சில புதிர்கள்
சுய சாசனம்
கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்
வானவில்
மேட்ச் பிக்சிங்
பெண்ணோவியம்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
பருந்துப் பார்வை
கோடிட்ட இடங்கள்
களம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    பெண்ணோவியம் : சமையல் ஸ்பெஷல்
    - மீனா
    | Printable version |

    பட்டாணி பீட்ரூட் கட்லெட்

    தேவையானவை

    ஊறவைத்த பட்டாணி - 1 கப்
    துருவிய பீட்ரூட் - 1/2 கப்
    உருளைகிழங்கு - 3
    பெரிய வெங்காயம் - 2
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
    மிளகாய்பொடி - 1 டீஸ்பூன்
    மைதா - கால் கப்
    ப்ரெட் க்ரெம்ஸ் - 1/4 கப்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கு, பீட்ரூட், பட்டாணியை நன்றாக வேக வைத்து மசித்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கவும். பிறகு வேகவைத்து மசித்த பீட்ரூட் - பட்டாணி - உருளைக்கிழங்கில் நறுக்கிய வெங்காயம் - கொத்தமல்லி, கரம் மசாலா, மிளகாய் பொடி, உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். மைதாமாவில் ஒரு சிட்டிகை உப்பு, கரம் மசாலா சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். உருளைக் கிழங்கு கலவையை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் கையினால் தட்டி, அதை கரைத்து வைத்துள்ள மைதாவில் முக்கி,  பிரெட் தூளில் புரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொன்நிறமாக பொரித்து எடுக்கவும். எண்ணெய் மிதமான தீயில் இருக்கட்டும். இல்லையென்றால் கட்லெட் வெளிப்புறம் சிவந்து இருந்தாலும் உள்ளே சரியான பதத்தில் இருக்காது. தக்காளி சாஸுடன் சுடச் சுட சாப்பிட சுவையாக இருக்கும். பீட்ரூட் சேர்ப்பதால் இளம் சிவப்பில் கட்லெட் கலர் அட்டகாசமாய் இருக்கும். காய்கறிகள் சாப்பிடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட கப்சிப்பென்று இதை சந்தோஷமாய் சாப்பிடுவார்கள்.


    ஆலூ சாட்

    தேவையானவை

    உருளைக்கிழங்கு - 4 (பெரிதாக இருக்கவேண்டும்)
    க்ரீன் சட்னி - கால் கப்
    ஸ்வீட் சட்னி - கால் கப்
    கார சட்னி - கால் கப்
    ஓமப்பொடி - கால் கப்
    முளை கட்டிய பாசிப்பயறு - கால் கப்
    புளிக்காத கெட்டித் தயிர் - 1 கப்
    சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
    மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து, மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு வில்லையின் மேல் ஸ்வீட் சட்னி ஒரு ஸ்பூன் ஊற்றி அதன் மேல் ஒரு வில்லையை வைத்து ஒரு ஸ்பூன் கார சட்னியை வைத்து அதன் மேல் மற்றொரு வில்லையை வைத்து பச்சை சட்னியைத் தடவி கடைசியாக ஒரு உருளை வில்லையை வைத்து மூடி அதன் மேல் தயிர் ஊற்றி ஓமப்பொடி, முளைவிட்ட பாசிப்பயறு, சிரகப் பொடி, மிளகாய் பொடி தூவி பரிமாறவும். செய்வதற்கு மிகவும் எளிமையான ஆனால் சாப்பிட வெகு சுவையான டிஷ் இது. உப்பு, உறைப்பு, காரம், இனிப்பு என எல்லாவித சுவைகளும் அடங்கிய கலவைதான் ஆலுசாட்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |