ஜூன் 09 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
மஜுலா சிங்கப்புரா
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
நையாண்டி
கவிதை
ஆன்மீகக் கதைகள்
சிறுகதை
அடடே !!
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : அதிர்ச்சி
- ஆர். பி. சாரதி [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

பூஜையை முடித்துக் கொண்டு பூசனிக்காய் வயிறு தெரிய வெளியே வந்தார் புண்ணியக்கோட்டி.  வந்தவரை பிரம்பு நாற்காலியில் உட்காரக்கூட அனுமதிக்கவில்லை.  அனுசுயா அப்படியே அவர் கால்களில் விழுந்தாள். புண்ணியக்கோட்டி இதை எதிர்ப்பார்க்கவில்லை.  "எழுந்திரும்மா . .. எழுந்திரு. நீ யாரு ? என்ன வேணும். ? "

"என் புருசனை நீங்கதான் காப்பாத்தணும்," அவள் இன்னும் எழுந்திருக்கவில்லை.

"எழுந்திரும்மா.. . யாரு உன் புருசன் ? "

"கார் டைவர். .. பாண்டி. .. . "

"அவனா? அவனை இனிமே திருத்தவே முடியாதும்மா. "

"இல்லே, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது "

"பொல்லாத ஆளும்மா அவன் . ..சீட்டைக் கிழிக்கச் சொல்லிட்டேன். "

"சீட்டைக் கிழிச்சா அவரு சோத்துக்கு என்ன செய்வாரு ? "

"அந்தக் கவலை இருந்தா வண்டிக்குப் பெட்ரோல். .. வண்டிக்குப் பெட்ரோல்-னு காசு வாங்கி சீட்டு ஆடுவானா ? "

"இந்த சீட்டுப் பழக்கம் தான் அவர் குடியைக் கெடுக்குது. "

"சீட்டு மட்டுமா ? குடிச்சுட்டு காரை ஓட்டி வாராவதியிலே மோதி வண்டியை ஓர்க் ஷாப்புக்கு அனுப்பிச் சிட்டான். "

"ஐயா நீங்கதான் புண்ணியவான். .. இதோடு ஏழெட்டு கம்பெனி ஏறி ஏறங்கியாச்சு.. . ஒங்க பிள்ளை மாதிரி பார்த்துக்கற உங்ககிட்ட வேலை செய்யலைன்னா வேறே எங்கேயும் செய்ய முடியாது. "

"வண்டிப் பெட்ரோலை வாயாலே உறிஞ்சி எடுத்து வெளியே விக்கிறானாம். "

"செய்வாருங்க.. . அவரு நல்லவர், அவரை வேலையிலே விட்டு எடுத்தது தப்புன்னு சொல்லலை.. . வயிறு பொழைக்க வழியில்லே. மன்னிச்சுடுங்கன்னுதான் கேக்குறேன். "

"நாய் வாலும்மா.. . நிமித்த முடியாது.  வெட்டத்தான் வேணும் ! "

"இந்த ஒரு தபா எனக்காக அவரை எச்சரிச்சு விட்டுடுங்க. .. அவரு எவ்வளவு ரூவா தரோணுமோ அதை மாசா மாசம் பிடிச்சுக்குங்க. .. முதுகிலே அடிங்க. .. வயித்திலே அடிச்சிடாதீங்க. "

"இவ்வளவு நல்ல பொண்ணா இருக்குறே.. . உங்கிட்ட நல்லபடியா நடந்துக்குவானா ?"

"பெரியவங்க உங்ககிட்டே பொய் சொல்லக்கூடாது. அடி, உதை. .. வீட்டுக்கு காலணா கண்ணுலே காட்ட மாட்டாரு. "

"வீட்டுக்கு ரெகுலரா வருவானா ? "

"எப்பவாவது கையிலே காசில்லேன்னா. . வயித்துக்கு சோறில் லேன்னா. .. "

"அப்படிப்பட்ட பாவிக்கு நீ ஏன் பரிஞ்சு பேசறே ? அவன் வேலை பார்த்தா என்ன, நடுத்தெருவிலே நின்னா என்ன ? "

"அப்படி இல்லீங்க.. . அவரை ஒரேயடியா தலைமுழுகப் போறேன். "

"அதிர்ந்து போனார் புண்ணியகோட்டி, என்னம்மா சொல்றே நீ ? அவனுக்காக எங்கிட்டே பரிஞ்சு பேசறே. . ஆனா நீ அவனை ஒரேயடியா விட்டுப் போகப் போறேங்கிறே ? "

"ஆமாங்க.. . அவருக்கு வேலையில்லாதபோது விட்டுட்டுப் போனான புருஷன் சம்பாரிச்ச வரை கூட இருந்தா. .. காசு இல்லேன்னு ஆனவுடனே கட்டின புருசனை உட்டுட்டுப் பூட்டான்னு சொல்வாங்க. . "

"அப்ப நீ. ..? "

"கையிலே சித்தாள் வேலையிருக்கு. . மனசிலே தைரியமிருக்கு..  தனிமையிலே பழக்கமிருக்கு. "

புண்ணியகோட்டிக்கு அதிர்ச்சியிலிருந்து மீளவே நெடு நேரமாயிற்று.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com - Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |