ஜூன் 10 2004
தராசு
பெண்ணோவியம்
உங்க...சில புதிர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
க. கண்டுக்கொண்டேன்
முத்தொள்ளாயிரம்
என்னை எழுதியவர்கள்
சுய சாசனம்
களம்
கோடிட்ட இடங்கள்
காந்தீய விழுமியங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    பெண்ணோவியம் : ஓமம்
    - மீனா
    | Printable version |

    ஓமம்

    அஜீரணமா? வயிறு உப்புசமா? வயிற்று வலியா? உடனே ஓமத்தைத் தேடிப் போங்க!!  கொஞ்சம் ஓமம், கொஞ்சம் இந்துப்பு சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கவும். அரை மணிக்குள் வயிற்று வலி, உப்புசம் எல்லாம் போயே போச்சு!

    அஞ்சறைப் பெட்டியில் ஒரு அயிட்டமாகத் தினசரி சமையலில் இடம் பெறாவிட்டாலும், ஓமத்துக்கு ஒரு இடமுண்டு. ஓமத்தை அரைத்து சாறு பிழிந்து கடலை மாவில் கலந்து எண்ணெயில் பிழிய (ஓமப்பொடி) வாசனை மூக்கைத் துளைக்கும். தவிர, கடலைமாவும் எண்ணெயும் தரும் அஜீரணத்துக்கு முறிவு ஓமம்.

    ஓமத்தை வெறும் வாணலியில் கொஞ்சம் புரட்டி எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சம் வாயில் போட்டுமென்றால் எப்படிப்பட்ட உணவும் செரிக்கும்.

    தினமும் சாப்பிட்டவுடன் ஒரு சிட்டிகை தனியாகவோ பாக்குடனோ சேர்த்து ஓமத்தை மெல்லலாம்.

    ஓமத்தையும் சுக்கையும் இரண்டு பங்கு எலுமிச்சை ஜூஸில் ஊறவைத்து உலர்த்தி சிறிது இந்துப்பு சேர்த்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். வயிறு உப்புசமாக இருக்கும்போது ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் வாயுத்தொல்லை ஓடிவிடும்.

    ஓமம், உப்பு, கிராம்பு சேர்த்து மென்று நீரை விழுங்கினால் சளி, கபம், இருமல் கரையும்.

    சமையலில் பகோடா, பஜ்ஜி, பூரி செய்ய மாவுடன் ஓமத்தை சேர்த்துப் பிசைந்தால் மணமே அலாதி. ஜீரணமும் தரும். பூரிக்குத் தொட்டுக்கொள்ளகூட ஒன்றும் வேண்டாம்.

    உருளைக்கிழங்கு கறி செய்யும் போது சீரகத்துடன் கொஞ்சம் ஓமத்தை யும் சேர்த்து தாளிதம் செய்தால் வீடே மணக்கும். எளிதில் செரிக்கும்.

    எலுமிச்சை ஊறுகாய் செய்யும்போது 3 ஸ்பூன் ஓமத்தை இந்துப்பு, மிளகாய் பொடி, சர்க்கரை எல்லாம் சேர்த்து குலுக்கி வெயிலில் காய வைத்து பிறகு சாப்பிடவும்.



    காய்கறி பக்கோடா

    தேவையானவை

    கோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
    கேரட் - 1
    பீன்ஸ் - 10
    வெங்காயம் - 1
    வெங்காயத் தாள் - 2
    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - 1 டேபிள் ஸ்பூன்
    மைதா - 2 டேபிள் ஸ்பூன்
    சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    அஜினோ மோட்டோ  - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - தேவைக்கேற்ப

    செய்முறை

    காய்கறிகளைப் பொடியாக நறுக்கி, அதில் அரைத்த விழுது, மைதா, சோள மாவு, அஜினோ மோட்டோ , உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து, பக்கோடா மாவு பதத்தில் பிசிறி வைத்துக் கொள்ளவும். எண்ணெய் காய வைத்து, பிசைந்ததை சிறியதாக உருட்டிப் போட்டுப் பொறித்தெடுக்கவும். தீ நிதானமாக எரிய வேண்டும். தக்காளி சாஸுடன் இதை மாலை நேர சிற்றுண்டியாகச் சாப்பிடலாம்.



    சேனைக் கிழங்கு சாப்ஸ்

    தேவையானவை

    சேனைக்கிழங்கு - அரை கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 4
     
    அரைக்க
    தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1 துண்டு
    பூண்டு -5 பல்
    மிளகு -1 டீஸ்பூன்
    சீரகம் -1 டீஸ்பூன்
    சோம்பு - அரை டீஸ்பூன்பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1
    மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
    தனியா பொடி - 1 டீஸ்பூன்
    புளி - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
     
    செய்முறை

    வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். சேனைக் கிழங்கை சதுரமாக, கனமான துண்டங்களாக வெட்டவும். தண்ணீரில் மஞ்சள் பொடியும், புளியும் சேர்த்துக் கொதிக்க விடவும். கொதித்ததும், கிழங்கை அதில் போட்டு வேகவிடவும். வெந்ததும் வடித்து எண்ணெயைக் காய வைத்து அதில் கிழங்கைப் பத்து நிமிடங்களுக்குப் பொறித்தெடுக்கவும். எண்ணெயை வடிக்கவும். 3 டேபிள் ஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து வெங்காயம், தக்காளி வதக்கி, அரைத்த விழுது போட்டு பச்சை வாசனை போகிற வரை வதக்கவும். எண்ணெய் கக்கும் போது, அதில் கிழங்கைப் போட்டு, உப்பையும் போட்டுக் கிளறி, மூடி வைக்கவும். இருபது நிமிடங்கள் கழித்து இறக்கி, கறிவேப்பிலை தூவிப் பா஢மாறவும். சாதம் உட்பட எல்லாவற்றுக்கும் ஏற்ற அருமையான சைட் டிஷ்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |