Tamiloviam
ஜூன் 14 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : அடுத்த ஜனாதிபதி ?
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

Prathiba Patilஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் ஷெகாவத் - பிரதிபா பாட்டீல் இருவருக்கிடையே தான் போட்டி என்ற நிலை¨யை "கலாமைத் தான் ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கிறோம்" என்று கூறி மிகவும் சாமர்த்தியமாக திசை திருப்பி விட்டார்கள் ஜெயலலிதா உள்ளிட மூன்றாவது அணித் தலைவர்கள். கலாம் மீண்டும் ஜனாதிபதியாக சம்மதித்தால் நான் போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டு ஏற்கனவே எழுந்த பரபரப்பை அதிகமாக்கியுள்ளார் ஷெகாவத். இந்த நிலையில் இந்திய நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதீபாவை நாங்கள் தேர்ந்தெடுத்தது பிடிக்காமல் தான் மூன்றாவது அணியினர் கலாமை மீண்டும் வேட்பாளராக நிறுத்தி இப்படி ரகளை செய்கிறார்கள் என்று அவர்கள் மீது வசைபாடியுள்ளனர் கருணாநிதி உள்ளிட்ட ஆளும் கட்சியினர்.

உண்மையாகவே ஒரு பெண்ணை ஜனாதிபதியாக்க நினைத்திருந்தால் எடுத்த எடுப்பிலேயே அவர் பெயரைச் சொல்லியிருக்கலாமே... சோம்நாத் சட்டர்ஜி அல்லது பிரணாப் முகர்ஜி இருவரில் ஒருவர் தான் ஜனாதிபதி என்று இடதுசாரிகள் முழங்க - அந்த இருவரையும் பிடிக்காத காங்கிரஸ் அரசு சிவராஜ் பாட்டீலை நிறுத்த - அதற்கு இடதுசாரிகள் ஆட்சேபம் தெரிவிக்க - ஒரு வழியாகப் பிடித்தார்கள் பிரதீபாவை. நடந்த கதை இப்படி இருக்க இந்திய ஜனநாயக வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு பெண்மணியை ஜனாதிபதி ஆக்குவதற்கு தாங்கள் பிள்ளையார் சுழி போட்டு விட்டதாக ஆளும் கட்சியினர் தம்பட்டம் அடித்துக் கொள்வது கொஞ்சமும் சரியில்லை.

உண்மையிலேயே பெண்களுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் ஆளும் கட்சியினர் முதலில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை கொண்டு வரட்டும். அதற்கு அவர்கள் கூட்டணியில் உள்ளவர்கள் ஏகோபித்த ஆதரவு தந்து சட்டமாக்கட்டும். அதை விட்டுவிட்டு வேறு வழியில்லாமல் தாங்கள் எடுத்த முடிவுகளை மாபெரும் சாதனைகளாக்க முற்படவேண்டாம்..

| | |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |