ஜூன் 16 2005
தராசு
வ..வ..வம்பு
உள்ளங்கையில் உலகம்
டெலிவுட்
முச்சந்தி
திரைவிமர்சனம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
அடடே !!
டிவி உலகம்
அமெரிக்க மேட்டர்ஸ்
சிறுகதை
ஆன்மீகக் கதைகள்
கவிதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : குயிலே ! குயிலே ! கானம் பாடு
- சத்தி சக்திதாசன் [sathnel.sakthithasan@bt.com]
| Printable version | URL |


கானகத்தே மட்டும்தான் நீ கனமிசைப்பதுவோ கவிக்குயிலே !
      கவி ரசிக்கு மென்தோட்டம் உனக்கேற்ற சபையன்றோ ?
காதலோ அன்றி உறவின் மோதலோ ஏய் குயிலே ! உனக்கு
     கவி யுணர்வை கருவாக்கும் சூழ்நிலைகள் தேவையோ ?
கடனாக அவைகளை யானுனக்கு தருமாறு சோகமென்னிடம் ஏராளம்
     கட்டாய மென்முற்றத்தே நீ கானமிசைக்கத்தான் வேண்டுமென்பேன்
கவியரசர் கண்ணதாசன் முன்னாலே நீ கவி பாடமாட்டாய் அறிவேன் நான்
      கவிப்பேரரசு வைரமுத்துவின் முன்னால் நீயா ? நாணம் முறைதான்
கவிக்குருடன் என் காதில் குரலமுதம் கொடுக்க மறுக்கும் உன்கொள்கை
     கவிக்குயிலே கடைசிவரை அறியேன் யான் , கானமொன்று தொடுத்து விடு
காலங்கள் பலகடந்து கருத்துக்களைச் சுமந்து காததூரம் வந்தவன் நான்
     காதினோரத்திலே தேன்சிந்துமுன் கானம் கேட்க விழைகின்றேன் பாடாயோ ?
கனவுகளில் மிதந்தேன் ; நினைவுகளில் தவழ்ந்தேன் பச்சை நிலம் பார்க்கவேயில்லை
     கடமைகளின் ஒலியடங்கியோ ரமைதி அதனூடு எதிர்பார்ப்பு உன் கானம்
கரைசேர்ந்த பெற்றோர் ; கரைசேர்க்க என் தளிர்கள் கடமைகள் முடிய ; என் காலக்கரைவு
     கானமிசைப்பாய் அதைக் கொண்டு என் பயணத்தை நான் முடித்து விடுகிறேன்.

   
 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |