ஜூன் 17 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
பருந்துப் பார்வை
உ. சில புதிர்கள்
பெண்ணோவியம்
வானவில்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    தராசு : காவிரியும் கர்நாடகாவும்
    - மீனா
    | Printable version |

    மத்தியிலும் கர்நாடகத்திலும் புதிய காங்கிரஸ் தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்க காவிரி தமிழ்நாட்டிற்கு வந்த வழியாக இல்லை. தங்களுக்கு ஓட்டு போட்டால் காவிரியைக் கொண்டுவந்துவிட்டுதான் மறுவேலைப் பார்ப்போம் என்ற ரீதியில் முழங்கிய அனைத்துக் கட்சிகளும், ஒப்புக்கு ஒரு கூட்டம் நடத்திவிட்டு தங்களுக்குக் கிடைத்த மந்திரிப் பதவிச் சுகங்களை அனுபவித்துக்கொண்டு அருமையாக அமர்ந்திருக்கிறார்கள். எல்லோரும் கூட்டமாகப் போய் பிரதமரைப் பார்த்து ஒரு மனு கொடுத்ததுடன் தங்கள் கடமை முடிந்ததென்ற நிம்மதி உணர்வு அவர்களுக்கு.

    தண்ணீர் கேட்டு தமிழக தலைவர்கள் பிரதமரைப் பார்க்கப் போனால் - தண்ணீர் விடவே மாட்டோ ம் என்று கர்நாடகத் தலைவர்கள் போய் பிரதமரைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். மத்திய காங்கிரஸ் தலைமையோ மாநிலத்தை அதட்டி ஒரு வார்த்தைக் கூட பேசமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. எந்த ராஜா எந்தப் பட்டணம் போனால் என்ன கதையாக கர்நாடக அரசு, முன்னாள் - இன்னாள் என எல்லாப் பிரதமர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் கூட தண்ணீர் திறந்துவிட மறுத்துக் கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் கடவுள் புண்ணியத்தில் கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகள் எல்லாம் நிரம்பி, வேறு வழியின்றி கர்நாடகா கபிணி அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை ஒரு நாளிதழில், கருணாநிதிக்குக் கிடைத்த வெற்றி என்று கொட்டை எழுத்தில் போட்டிருக்கிறார்கள். மக்களை இன்றைய அரசியல்வாதிகள் எவ்வளவு மடையர்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இதைத் தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.

    கருணாநிதிஇதே கர்நாடக அரசு ஒரு மாதத்திற்கு முன்பு, இந்தத் தண்ணீரைத் தமிழகத்திற்குத் தர முன்வந்திருந்தால் அதைக் கருணாநிதியின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் மழைபெய்து - அதனால் தண்ணீர் வரத்து அதிகமாகி - அதனால் திறந்துவிடப்பட்ட தண்னீருக்குத் தான் தான் காரணகர்த்தா என்று முழங்குபவர்களை என்னவென்று சொல்ல?

    தமிழக மக்களுக்கு நமது ஆலோசனை இதுதான் - கர்நாடகா மனமறிந்து ஒரு போதும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடச் சம்மதிக்காது. இயற்கை அன்னையைத் தவிர வேறு யாராலும் காவிரியைத் தமிழகத்திற்குக் கொண்டுவர முடியாது. மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆண்டாலும் முடிவு என்னவோ இதுதான். இந்நிலை ஒருநாளும் மாறப்போவதில்லை.

    முடிந்தால் காவிரி டெல்லாப் பகுதி விவசாயிகள் பருவமழைத் தவறாமல் பெய்யவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளலாம். அல்லது ஆக்கப்பூர்வமாக நிலத்தடி நீரை அதிகரிக்கும் வழிகளைப் பார்க்கலாம். மழைநீரை சேமித்துவைக்கும் வழிவகைகளை விஞ்ஞானிகளுடன் கலந்து ஆலோசனை செய்யலாம். அல்லது குறைந்த நீர்வளத்தைக் கொண்டு விவசாயம் செய்யும் முறைக்களை மேற்கொள்ளலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு இனியும் "வானத்தை வில்லாக வளைப்பேன்.. மணலைக் கயிறாகத் திரிப்பேன்.." என்றெல்லாம் வீண்பேச்சு பேசிக்கொண்டுத் திரியும் அரசியல்வாதிகளை நம்பிக்கொண்டிருந்தால் - கதி அதோ கதிதான்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |