ஜூன் 17 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
பருந்துப் பார்வை
உ. சில புதிர்கள்
பெண்ணோவியம்
வானவில்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    பெண்ணோவியம் : சமையல்
    - மீனா
    | Printable version |

    பீஸ் ஸ்டஃப்டு சப்பாத்தி

    தேவையானவை

    கோதுமை மாவு - 2 கப்
    பட்டாணி - 1 கப்
    கொத்தமல்லி - அரைக்கட்டு
    பச்சைமிளகாய் - 4
    இஞ்சி - 1 துண்டு
    நெய் அல்லது எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கோதுமை மாவை சிறிதளவு உப்பு, எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பட்டாணியை நன்கு வேகவைத்து நீரை வடித்துவிட்டு அத்துடன் கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து கெட்டியாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து சின்னச் சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு சப்பாத்தி மாவை சிறிதளவு எடுத்து கிண்ணம் போல நன்கு குழிவாகச் செய்து அதனுள் பட்டாணி விழுதை வைத்து நன்றாக மூடி சப்பாத்தி இடவும். உள்ளே இருக்கும் பட்டாணி விழுது வெளியே வந்துவிடாதபடி சப்பாத்திகளை இட்டு சூடான தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் நெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு நன்கு வெந்தவுடன் எடுக்கவும். எப்போதும் ஆலு பரோட்டா தானா என்று கேட்பவர்களுக்கு இந்தப் புதிய பீஸ் சப்பாத்தி சுவையான மாறுதலாக இருக்கும். பைங்கன் பர்த்தாவோடு சுவைக்க, இன்னும் 2 சப்பாத்தி நிச்சயம் உள்ளே போகும்.


    பைங்கன் பர்த்தா

    தேவையானவை

    பெரிய கத்திரிக்காய் - 2
    தக்காளி - 2
    வெங்காயம் (பெரியது) - 1
    இஞ்சி - சிறு துண்டு
    பூண்டு - 4 பற்கள்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா - 2 டீஸ்பூன்
    மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
    மிளகாய் பொடி - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    கத்திரிக்காயில் நிறைய எண்ணெய் தடவி அடுப்பில் சுட்டு தோலுரித்துக் கொள்ளவும். பின்னர் தோலுரித்த கத்திரிக்காயை மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடி அகன்ற - கனமான வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டை நன்றாக அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். அரைத்த விழுதினை வெங்காயத்தோடு சேர்த்து அதில் தக்காளி,  உப்பு, மஞ்சள்பொடி, கரம் மசாலாபொடி சேர்த்து சுருள வதக்கவும். பிறகு இதில் மசித்து வைத்த
    கத்திரிக்காயைச் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கத்தரிக்காய் கலவை சற்று கெட்டியாக வந்ததும் இறக்கவும். இதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கவும். சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள இந்த சைட் டிஷ் மிக அருமையாக இருக்கும்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |