Tamiloviam
ஜூன் 21 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : கவிஞர் மதுமிதா அவர்களின் பேட்டி
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
| | Printable version | URL |

மொழிபெயர்ப்பு என்பது சிரமமான விஷயம். ஈஸியா அது மொழி பெயர்ப்புநூல்தான்னு சொல்லிடுவாங்க.

காற்றடிக்கையில்
கடல்நீர் அலைந்தது
குழந்தையின் குதூகலத்தோடு

காற்றடிக்கவில்லை
கிணற்று நீரசைந்தது
சிறுமீனின் துள்ளலோடு

காற்றடிக்கையில்
மலர் தலையசைத்தது
அன்று மலர்ந்த மகிழ்வினில்

காற்றடிக்கவில்லை
தென்னங் கீற்றசைந்தது
அணில் பிள்ளை ஏறி ஓடியதும்

இந்த அழகான கவிதைக்கு சொந்தக்காரர் கவிஞர் மதுமிதா. நிறைகுடம் தளும்பாது என்கிற  தமிழ்  பழமொழிக்கு எடுத்துக்காட்டாக இவரைப் பார்க்கத் தோன்றுகிறது. ஆங்கில இலக்கியத்தில் எம். ஏ. முதுகலைப் பட்டம் பெற்ற இவர் சிறந்த கவிதாயினி, கட்டுரையாளர், மொழி பெயர்ப்பாளர், திறனாய்வாளர். நான்காவது தூண் என்ற நூலின் வழியாக 18 தமிழ் பத்தி¡¢க்கை ஆசி¡¢யர்களை நேர்காணல் கண்டு அதனை நூலாக வெளியிட்டு ஒரு சிறந்த பத்தி¡¢க்கையாளர் என்ற முத்திரையையும் சமீபத்தில் படைத்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் புலமை வாய்ந்த திருமதி. மதுமிதா தான் இன்னும் படிக்க, கற்க வேண்டியவைகள் அதிகமாக இருக்கிறது என்கிறார் தன்னடக்கத்தோடு.

Madhumitha2000ம் ஆண்டில் மஹாகவி பர்த்ருஹா¢ சமஸ்கிருதத்தில் எழுதிய சுபாஷிதம் நீதி சதகம் நூலை சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தும்இ 2003ம் ஆண்டு மெளனமாய் உன் முன்னே என்ற கவிதை தொகுப்பையும்இ 2005ம் ஆண்டு பர்த்ருஹா¢ எழுதிய 300 பாடல்கள் அடங்கிய சுபாஷிதம் நூலை சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தும், 2006ம் ஆண்டு நான்காவது தூண் என்ற நேர்காணல்கள் அடங்கிய நூலையும் வெளியிட்டுள்ளார். இவை தவிர இவா¢ன் கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் இணையதளங்களிலும் கல்கி, மங்கையர்மலர், அமுதசுரபி போன்ற இதழ்களிலும் வெளிவந்துள்ளன. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்டது இவரது குடும்பம். அந்நகா¢ல் முக்கியத்துவம் நிறைந்த சில குடும்பங்களில், இவரது குடும்பமும் ஒன்று. மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட் அம்மையார் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளோடு நெருங்கி பழகிய, அவர்களின் போராட்டங்களை  வழி நடத்திய சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமி ராஜாவின் பேத்தி என்ற சிறப்பும் இவருக்குண்டு. சென்னையில் இருக்கும் இவர் ராஜபாளையத்திற்கு வந்திருந்த பொழுது நேர்காணலுக்கு சம்மதம் அளித்து நேரம் ஒதுக்கித் தந்தார். யதார்த்தமான பேச்சில் தொடங்கிய இந்த நேர்காணல் சுமார் இரண்டு மணிக்கும் மேலாக சென்றது. இனி............


தமிழோவியம் :-  திருமதி. மஞ்சு ரெங்கனாதன் என்ற அருமையான பெயர் இருக்கும் பொழுது மதுமிதா என்ற புனைப் பெயா¢ல் எழுதுவதற்கு ஏதாவது விசேஷ காரணங்கள் இருக்கிறதா?

பதில் :- விசேஷ காரணங்கள் என்று எதுவும் கிடையாது. முதலில் மஞ்சு ரெங்கனாதன் என்ற பெயா¢ல் தான் மஹாகவி பர்த்ருஹரி  சமஸ்கிருதத்தில் எழுதிய நீதி சதகம் தமிழாக்க நூல் வெளிவந்தது. அதற்கு முன்பு என்னுடைய கவிதைகள் எல்லாமே சமூகப் பார்வையும் தேசத்தின் பிரச்சினைகளையும் நாட்டுப் பற்றுகளையும் கொண்டதாக இருக்கும். அவை புதுக்கவிதைகளாக இருக்காது. வசன நடையாகவும்
பாடல்கள் போலவும் இருக்கும். இந்தப் பெயரில் தான் எழுதிக் கொண்டிருந்தேன். பர்த்ருஹா¢யின் சிருங்கார சதகம் எழுத ஆரம்பித்த பிறகு அகவயப் பாடல்களை தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். அவற்றை எழுத ஆரம்பித்த பொழுது இந்தப் பெயரில் எழுதாமல் யாருக்கும் எழுதுவது யாரெனத் தெரியாதபடிக்கு வேறு பெயரில் எழுதலாம் என நினைத்து மது என்ற பெயரைத் தேர்வு செய்தேன். அது  பொதுவான பெயராக இருக்குமென்று. அதாவது எழுதுவது ஆணா, பெண்ணாணு தெரியாது.

முதலில் எனது கணவரின் நண்பன் மகள் தான் எனக்கு மதுமிதா என்ற பெயரில் இ-மெயில் முகவரி கிரியேட் பண்ணிக் கொடுத்தார். அந்த சமயத்தில் திசைகள் மின்னிதழ் மாலனின் திசைகளில் என்னுடைய கட்டுரை ஒன்று வெளி வந்தது. அது இளம்பிறையின் நூல்வெளியீட்டுவிழா நிகழ்வு குறித்தது. அப்பொழுது அவர் தான் மது என்று எதற்கு எழுதுகிறீர்கள் என்று கேட்டு எனது இ-மெயில் முகவரியில் உள்ள மதுமிதா என்ற பெயரையே போட்டாங்க. திசைகள் மின்னிதழில் தான் முதலில் மதுமிதா என்று வந்தது. அது அப்படியே தொடர்ந்து விட்டது. இல்லை என்றால் மது என்று தான் இருந்திருக்கும். அதில் மதுமிதா என்று போட்டவுடன் கவிதை எழுதும் பொழுதெல்லாம் மதுமிதா என்ற பெயா¢ல் எழுதினேன். எந்தப் பெயரின் மூலம் எழுதுவது யாரெனத் தெரியக் கூடாது என்று நினைத்தேனோ அந்தப் பெயா¢லேயே தெரிய வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது. அது எனக்கு பிடித்திருந்ததால் நான் ஏற்றுக் கொண்டேன்.

தமிழோவியம் :- ஒரு முக்கியமான குடும்பத்தின் பெண் நீங்கள். உங்களின் சிறு வயது முதல் இன்று வரை உங்களின் அறுபடாத மண்ணிண் வேர்களைப் பற்றி சொல்லுங்களேன்?

பதில் :- நான் எட்டாம் வகுப்பு வரை படித்தது எல்லாமே தென்காசியில் தான். பாட்டி வீட்டில். அதாவது எனது அம்மாவின் அம்மா வீட்டில். பள்ளி விடுமுறையில் தான் அப்பா அம்மாவைப் பார்க்க வருவேன். தென்காசியில் இருக்கும் பொழுது பிரச்சினைகளே இல்லாதது தான் உலகம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிரச்சினைகள் என்றால் என்னவென்று எதுவுமே தெரியாது. தாத்தா பாட்டியிடம் வளரும் குழந்தை எப்படி இருக்குமோ அப்படி ஒரு செல்லமாக வளர்க்கப்பட்டேன். தாத்தாவின் கடையில் வேலை பார்ப்பவர்களுக்கும் ஒரு செல்லக் குழந்தையாகத் தான் நான் இருந்தேன். ஆறாம் வகுப்புக்கு மேல் வர்றப்ப ஒரு மூன்று வருடங்களில் வித்தியாசம் என்பது எனக்கு தெரிய ஆரம்பித்தது. நமக்கு வேலை பார்க்கும் பொழுது ஒரு வித்தியாசமா பார்க்குறாங்க. வேலைக்காரர்களைப் பார்க்கும் பொழுது வேறு மாதிரி பார்க்குறாங்க என்பதை உணர்ந்தேன். அப்ப அது என்ன வேறுபாடு என்று தெரியவில்லை. வர்க்க வேறுபாடா? பொருளாதார வேறுபாடா? என்று தொ¢யவில்லை. மனுஷனுக்கும் மனுஷனுக்கும் சமநிலை இல்லை. எட்டாம் வகுப்பு வரும் வரை ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக உணர்ந்தேன். அந்த வித்தியாசத்தை முழுமையாக அறிவதற்கு முன்னால் நான் என்னுடைய பெற்றோ¡¢டம் வந்து சேர்ந்து விட்டேன். 9,10,11,12 வகுப்புகள் மட்டும்தான் பெற்றோரிடம் வந்து படித்தேன். அந்தச் சமயத்தில் நேரே பள்ளிக் கூடம் போவோம். வருவோம் அவ்வளவு தான். இப்ப எங்கள் குழந்தைகள் வெளியே போறாங்க, வர்றாங்க. அவர்களாகவே பள்ளிக்கு போகிறார்கள். வருகிறார்கள். அப்ப அது எல்லாம் கிடையாது. எங்களுடைய சிறு வயதில் பருவத்திற்கு வந்த ஒரு பெண் பொ¢யவள் ஆகி வயதிற்கு வந்து விட்டால் வெளியே செல்ல முடியாது. நூலகம் போய் படிக்க போக முடியாது. எனது அப்பா அது எல்லாத்தையும் உடைத்து விட்டு எங்களைக் கொண்டு வந்தார். முதன் முதலில் எங்களை பரதநாட்டிய வகுப்பிற்கு அனுப்பியது எனது தந்தை தான். ஒன்பதாம் வகுப்பு பள்ளி முடிந்தவுடன் நேராக பரத நாட்டிய வகுப்பிற்கு போய்விட்டுத் தான் நானும் தங்கையும் வீட்டிற்கு வருவோம். வெளி உலகம் என்றால்  என்னவென்று எனக்கு தெரியாது. அப்படி வளர்ந்த பெண் நான். வெளி உலகம் எவ்வளவு சந்தோஷமயமானது அதே சமயம் எவ்வளவு குரூரமயமானது என்பது பல வருஷங்கள் கழித்து தான் எனக்கு தொ¢ந்தது. சிறுவயது எனக்கு ஆனந்தமயமான உலகம் அது என்ன வரம் என்று தொ¢யவில்லை நான் பிறந்ததில் இருந்து நேசிக்கக் கூடிய மனிதர்களின் மத்தியிலேயேதான் நான் வளர்ந்தேன். 1984க்குப் பிறகே எனக்கு வெளி உலகம் குறித்து தெரிய ஆரம்பித்தது. பின் நான் வெளி உலகம் பார்க்க பார்க்க சில பல பாதிப்புகள் உண்டானது.
புத்தகம் வாசிப்பில் மட்டுமே என்னுடைய உலகம் இருந்தது. வெளி உலகம் என்பது புத்தகத்தை பார்த்து தொ¢ந்து கொள்வதாக இருந்தது 12ம் வகுப்பு வரை. பின் அதுவே சா¢யாகிவிட்டது. வீட்டைவிட்டு வெளியே வர ஆரம்பித்ததும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். மனிதர்களை நேசித்து வந்தவள் மனிதர்களை வாசிக்க ஆரம்பித்தேன். என்னுடைய பள்ளித் தோழிகள் வெளி ஊர்களில் இருந்து வந்தவர்கள் அவர்கள் மூலம் வெளி உலகத்தை பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு வந்தது. சுதா திருச்சியில் இருந்து வந்தவள். ஜெயகாந்தனை 11 ஆம் வகுப்பில் அவள்தான் வாசிக்கக் கற்றுத் தந்தாள். பள்ளிக் கூடம் போகும் பொழுது மூடு ரிக்க்ஷா வண்டியில் தான் போவோம். மூடு ரிக்க்ஷா என்பது ரிக்க்ஷா வண்டியில் திரை போட்டு இருக்கும். நாங்க உள்ளே இருந்து வெளியே பார்க்கணும் என்றால் திரையை லேசாக ஒதுக்கி விட்டுத்தான் பார்க்கணும். அந்த அளவுக்கு கட்டுப்பாடு அப்பொழுது இருந்தது. இப்ப அது இல்ல. அந்த மனநிலையில் இருந்து நான் வெளியே வந்து விட்டேனா என்று எனக்குத் தெரியவில்லை. இன்னும் இருப்பதாக நான் நினைக்கிறேன். எப்போதும் குடும்பத்தையும் ஊரையும் தலையில் சுமந்துகொண்டே வந்திருக்கிறேன்.  2000க்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக மனத் தடைகள் விலக ஆரம்பித்தது. நான் சென்னையில சில கூட்டங்களில் கலந்து கொள்ளும் பொழுது சிலர் கேட்பாங்க. ஏன் எல்லாக் கூட்டத்திற்கும் வருவதில்லை. வர வேண்டியது தானேனு கேட்பாங்க. நான் வெளிய வருகிறப்போ நான் மட்டும் வரல. என் குடும்பம் என் சமூகம் என்னுடைய ஊரையும் நான் சுமந்துட்டு வந்திட்டுருக்கேன். எது வேணாலும் என்னால பண்ண முடியாது.  தாத்தாவுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வந்து விடக் கூடாதுனு நான் தெளிவா இருக்கேன்.என்னுடைய நான்காவது தூண் நூலுக்கு அப்புறம் என்னுடைய பார்வையே முற்றிலும் வேறாக இருக்கு.

எப்போது பெண்கள் நூலகம் வேண்டும் என்ற போராட்டததில் கலந்து கொள்ள வீட்டை விட்டு காலடி எடுத்து வைத்தேனோ எனது கவனம் முழுவதும் குடும்பத்தில் இருந்தாலும் வெளி உலகத்தை அதிகமாகப் பார்க்க ஆரம்பித்தேன். 1990 ஆம் வருடம் அது.     என் குடும்பத்துலயும்  உறவினர்களும்  நண்பர்கள் எல்லாருமே என்னை நேசித்ததை அதனை ஒரு வரம் என்று சொல்லலாம்.

அவங்க பார்த்து பார்த்து எனக்கு  புத்தகங்கள் கொடுப்பாங்க.  புத்தக வாசிப்பைத் தொடர்ந்து மனிதர்களை வாசிக்கும் திறன் வளரக் கற்றுக் கொடுத்தது எங்கள் ஊர் மண். வந்தோரை வாழ வைக்கும் இராஜபாளைய மண். இதைத்தான் நீங்கள் அறுபடாத மண்ணிண் வேர்களாகக் கேட்பதாக நினைத்துச் சொல்கிறேன்.

தமிழோவியம் :- பெண்களுக்கு என்று நூலகம் கேட்டு எப்பொழுது எதற்காக அந்த போராட்டம் நடத்தினீர்கள்?

 (அடுத்த வாரம்  தொடரும்...)

 

|
oooOooo
                         
 
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |