Tamiloviam
ஜூன் 21 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : நீ நான் நிலா
- மீனா [feedback@tamiloviam.com]
| | Printable version | URL |

தங்களுடன் படிக்கும் சக மாணவியை கல்லூரி நண்பர்கள் இருவரும் காதலிக்கும் வழக்கமான முக்கோண காதல் கதைதான் நீ நான் நிலா. முடிவும் வழக்கமான முடிவாகத்தான் இருக்கப்போகிறது என்று நினைத்தால் பாதிப் படத்திற்கு மேல் கதை அப்படியே திகில் படமாக மாறுகிறது.

கல்லூரியில் ஒன்றாகப்படிப்பவர்கள் ரவி, பரதன் மற்றும் மேக்னா. அமைதிப் பார்ட்டி ரவி என்றால் அதிரடிப் பார்ட்டி பரதன். எதிலும் எதிரும் புதிருமாக இருக்கும் ரவியும் பரதனும் மேக்னாவைக் காதலிக்க போட்டியிடுகிறார்கள். ரவியின் அமைதியான போக்கும் காதலுக்காக எதையும் தியாகம் செய்யும் மனப்பான்மையும் தனக்காக உயிரைக்கூட கொடுக்க நினைக்கும் ரவியின் பண்பும் மேக்னாவை வெகுவாகக் கவர்கிறது. முதலில் இருவருடனும் நட்பாகப் பழகும் மேக்னா ஒரு கட்டத்தில் பரதனின் தடாலடிகளைக் கண்டு வெறுத்து ரவியைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

ஒருநாள் எதிர்பாராதவிதமாக ரவியும் மேக்னாவும் ஒரு விபத்தில் சிக்குகிறார்கள். படுகாயம் அடைந்த மேக்னா சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புகிறார். மேக்னாவைப் பார்க்க அவர் வீட்டிற்கு வரும் ரவியைப் பார்த்து நாய் குரைக்கிறது. சகுணங்கள் எல்லாம் கெட்டதாகத் தோன்ற பிறகுதான் தெரியவருகிறது மேக்னா வீட்டிற்கு வந்திருப்பது ரவி இல்லை.. அவரது ஆவி என்பது. காதலி தான் இல்லாமல் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் மேக்னாவையும் பரதனையும் சேர்த்துவைக்க முயல்கிறார் ஆவி ரூபத்தில் வரும் ரவி. பரதனைத் திருமணம் செய்து கொள்ள மேக்னா சம்மதித்தாரா? இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.

நாயகர்கள் இருவரும் நாயகியும் புதுமுகங்கள் என்பதால் அவர்களது நடிப்பைப் பற்றி பெரிதாகப் பேச ஒன்றும் இல்லை. கொடுத்த வேலையை ஓரளவிற்கு ஒழுங்காக செய்துள்ளார்கள்.

பரதனின் கல்லூரித் தோழனாக வரும் கருணாஸ் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார். ரவி ஆவியாக வரும் காட்சிகளில் எல்லாம் கருணாஸ் பயந்து புலம்புவது சிரிப்பை வரவழைக்கிறது.

தீனாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரொம்ப ரொம்ப சுமார்.

காதல்தேசம் மற்றும் ஜப்பானில் கல்யாணராமன் இரண்டு படங்களையும் சேர்த்து பார்ப்பதைப் போன்ற உணர்வு தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. இயக்குனர் சிவக்குமார் இன்னும் கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நிச்சயம் நீ நான் நிலா ஒரு வித்தியாசமான படமாக அமைந்திருக்கும்.

| |
oooOooo
                         
 
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |