Tamiloviam
ஜூன் 21 2007
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : ஒற்றைக் கண் அம்மா!! - உண்மை நிகழ்வு.
- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]
| | Printable version | URL |

நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒற்றைக் கண்ணுடன் இருந்த என் அம்மா எனக்கு விகாரமாகவே தெரிந்தாள். அதனாலேயே எனக்கு அவள் மீது வெறுப்பு இருந்தது. அவள் எவ்வளவு அன்போடு நடந்து கொண்ட போதும் என் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சொந்த வீடு இருந்த போதிலும் பிழைப்புக்காக நான்கைந்து வீடுகளில் வேலை செய்து வந்தாள் என் அம்மா.

நான் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம், ஏதோ காரணத்துக்காக என்னைத் தேடி என் வகுப்புக்கு வந்திருந்தாள். அவளுடைய விகாரமான தோற்றத்தைக் கண்ட என் சகமாணவர் சிரிப்பாய் சிரித்து என்னைக் கேலி செய்தது எனக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது.

அன்று மாலை வீடு திரும்பியதும் அவளை முடிந்த அளவுக்குத் திட்டித் தீர்த்தேன். அதோடு  விடவில்லை எங்காவது போய் செத்துத் தொலைய வேண்டியது தானே என்றும் சொல்லிவிட்டேன்.  அம்மா ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டாள்.

அன்று முதல் என் மனதில் எப்படியும் முன்னேறி அம்மாவை விட்டு நெடுந்தூரம் சென்று விட  வேண்டும் என்கிற வெறி தோன்ற படிப்பில் கவனம் செலுத்தி உழைக்க ஆரம்பித்தேன். பள்ளி இறுதி ஆண்டில் சிறந்த மதிப்பெண்களுடன் வெற்றி பெற தகுதி அடிப்படையில் பொறியியல் கல்லூரியில்
இடம் கிடைத்தது. உழைத்துப் படித்தேன்.

படிப்பு முடிந்ததும் டெல்லியில் வேலை கிடைத்தது. அங்கேயே திருமணம் செய்து கொண்டு  குடும்பத்துடன் தங்கி விட்டேன். குழந்தைகள் பிறந்து வளர்ந்து பள்ளிக்குப் போகத் துவங்கினர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை அழைப்புமணி ஒலித்தது. ஒடிச்சென்று கதவைத் திறந்த என் குழந்தைகள் அலறத் தொடங்கினர். நான் ஓடிச் சென்று பார்த்தேன். அம்மா நின்று கொண்டிருந்தாள். "உன்னை இங்கு யார் வரச் சொன்னது? குழந்தைகளைப் பயமுறுத்தி விட்டாயே! எங்காவது தொலைந்து
போக வேண்டியது தானே!" என்று சத்தம் போட்டேன். "மன்னித்து விடப்பா! விலாசம் தவறி வந்து விட்டேன்" என்று சொல்லிச் சென்று விட்டாள்.

கடந்த வாரம் ஊரிலிருந்து என் நண்பன் முத்துவிடமிருந்து கடிதம் வந்தது. அதில்"உன் தாய் இறந்து விட்டாள். அவள் குடியிருந்த வீட்டை உன் பெயருக்கு எழுதிய உயிலும், பத்திரமும் என்னிடம்  இருக்கிறது. அதை வந்து கொண்டு செல்" என எழுதியிருந்தான்.

அம்மா இறந்த செய்தி கேட்டு என் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. இருப்பினும் 'ஒரு முறை சென்று ஊரைப் பார்த்துவிட்டு வா' என உள்மனம் சொன்னது. அடுத்த நாள் மனைவியிடம்  ''அலுவல் காரணமாய் வெளியூர் செல்கிறேன்" என்றுச் சொல்லிவிட்டு ஊருக்குச் சென்றேன். நண்பன் வீட்டுப் பத்திரங்களுடன் அம்மா கொடுத்துச் சென்றதாக ஒரு கடிதம் கொடுத்தான். வேண்டா வெறுப்புடன் அதை வாங்கிப் படித்துப் பார்த்தேன்.

அதில் அவள் " அப்போது நீ ரொம்பச் சின்னக் குழந்தையாய் இருந்தாய். ஒரு விபத்தில் உன்  தந்தையையும் உன் ஒரு கண்ணையும் இழக்க நேர்ந்தது. என் உயிருக்குயிரான மகனை ஒற்றைக்  கண்ணுடன் பார்க்கப் பொறுக்கவில்லை. என்னுடைய ஒரு கண்ணை உனக்குப் பொருத்தி விட்டேன். நீ வருகிற போது நான் உயிரோடிருக்கமாட்டேன். இருந்தாலும் என் மகனின் விழிகள் மூலம் இவ்வுலகதைப் பார்த்துக் கொண்டிருப்பேன்." என்று எழுதியிருந்தாள். என் விழிகள் அருவிகளாயின.முதன் முறையாக என் இதயம் விம்மியது.

(இது ஒரு மொழிபெயர்பு கதை)

oooOooo
                         
 
கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2007 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |