ஜுன் 22 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : பாரிஜாதம்
- மீனா [feedback@tamiloviam.com]
Bookmark in Del.icio.us | | Printable version | URL |

மிழ் திரையுலகில் தொடர்ந்து ஒரே தாதாயிச கதைகளையே பார்த்துவருகிறோம்.. ஒரு நல்ல குடும்பப் படம் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது என்று சலித்துக்கொள்பவர்களை திருப்திபடுத்துவதற்காகவே திரைக்கதை எழுதுவதில் சூராதி சூரர் என்று மகுடம் சூட்டப்பட்ட பாக்யராஜால் எடுக்கப்பட்ட படம் பாரிஜாதம்.

நன்றாக வாழ்ந்து நொடித்துப்போன குடும்பத்துப் பெண் சரண்யா. இவரது அப்பா சரத்பாபு ஒரு காலத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர். விரோதிகளின் சூழ்சியால் சரத்பாபு தொழிலில் படுநஷ்டப்பட்டுப் போக, அந்த சோகம் தாங்காமல் இறந்துவிடுகிறார் அவரது மனைவி. விதியின் கொடுமையால் ஒரு காலத்தில் தன்னுடைய சொந்த வீடாக இருந்த வீட்டிலேயே வேலைக்காரியாகி விடுகிறார் சரண்யா.

Saranya, Prithvirajசரண்யாவின் முதலாளி அம்மாவான சீதாவிற்கு சரண்யாவின் குணநலன்கள் எல்லாம் பிடித்துபோக, தன் மகன் ப்ருதிவிராஜிற்கு மனைவியாக்கிப் பார்க்க நினைக்கிறார். தான் ப்ருதிவிராஜிற்கு பெண் பார்த்துவிட்டதாக தொலைபேசி மூலம் தன் கணவர் பிரகாஷ்ராஜ் மற்றும் மகனிடம் தெரிவிக்கும் சீதா பெண் யார் என்று சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்துவிடுகிறார். எதிர்பாராமல் ஒரு விபத்தில் சீதா இறந்துவிட, அம்மா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் ப்ருத்வி, தன் அம்மா தனக்காக தேர்வு செய்த பெண்ணைத்தான் தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

சீதா தன்னைத்தான் மருமகளாகத் தேர்வு செய்தார் என்பதை தன் வாயால் சொன்னால் எங்கே வேலைக்காரியாக இருக்கும் தான் முதலாளியாக நினைப்பதாக அப்பாவும் மகனும் தப்பாக நினைத்துவிடுவார்களோ என்ற தயக்கத்தில் சரண்யா உண்மையை மறைத்து விடுகிறார். சீதா பார்த்துவைத்தப் பெண் யார் என்பது தெரியாத நிலையில், ஏற்கனவே தன் மகனுக்கு திருமணம் செய்துவைப்பதாக தான் வாக்கு கொடுத்த ஒரு மில் ஓனரின் மகளைத்தான் சீதா ப்ருதிவிக்கு பார்த்தார் என்று பொய் சொல்லி தன் மகனை நம்பவைக்க முயற்சி செய்கிறார் பிரகாஷ்ராஜ்.

இந்நிலையில் ப்ருதிவியின் நலம் விரும்பியாக வரும் பாக்யராஜ் அந்த வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் சரண்யாதான் சீதா ப்ருதிவிக்காக பார்த்தப் பெண் என்பதைக் கண்டுபிடிக்கிறார் என்பதே மீதிக்கதை.

புதுமுகம் என்று நம்பவே முடியாத அளவிற்கு நடிப்பில் அசத்தியுள்ளார் சரண்யா பாக்யராஜ். பூர்ணிமாவை பார்ப்பதைப் போன்ற தோற்றம். பாந்தமான நடிப்பிற்காக தாராளமாக இவருக்கு ஒரு சபாஷ் போடலாம். காமெடி, குறும்புடன் நடிப்பும் நன்கு வருகிறது. அப்பா சொல்லிக்கொடுத்ததை தப்பாமல் செய்துள்ளார்.

தமிழுக்கு அறிமுகமான முதல் படத்தில் வில்லனாக வந்தாலும் அடுத்த படத்திலேயே கதாநாயகனாக பிரமோஷன் ப்ருதிவிராஜுக்கு. காமெடியாக காதல் காட்சிகளில் முதல் பாதியில் கலக்கும் இவர் பிற்பாதியில் செண்டிமெண்ட் காட்சிகளிலும் அசத்தியுள்ளார். பல இடங்களில் பாக்யராஜே பேசுவதைப் போன்ற பிரமிப்பு ப்ருதிவிராஜ் பேசும் போது ஏற்படுகிறது.

அன்பான அம்மாவாக சீதா. அப்பாவாக பிரகாஷ்ராஜ். வாழ்ந்து கெட்ட பணக்காரராக சரத்பாபு, தலைவாசல் விஜய், ரோஜா என பெரிய நட்சத்திர பட்டாளம். கொடுத்த வேலையை அனைவரும் சரியாகச் செய்துள்ளார்கள். பிற்பாதியில் வந்தாலும் தன் அசத்தல் நடிப்பால் கலக்கியுள்ளார் பாக்யராஜ். அதிலும் குறிப்பாக பிரகாஷ்ராஜிடம் சீதா தன் கனவில் வந்து பிரகாஷ்ராஜிற்கு விவரம் பத்தாது என்று சொல்லும் காட்சியில் சூப்பர்.

ஒளிப்பதிவாளர்கள் குமார், வெங்கடேஷின் ஒளிப்பதிவு சூப்பர். குறிப்பாக "உன்னைக் கண்டேனே" பாடலில் ஒளிப்பதிவு மனதை அள்ளுகிறது. புதிய இசையமைப்பாளர் தரணின் இசையில் பாடல்கள் ஓக்கே. கதைக்குள் கதை எடுப்பது, அதையும் குழப்பமில்லாமல் எடுப்பது என்பது ஒரு தனிக்கலை. ஒரு கதாசிரியராக சரண்யா சீதாவிடம் தான் எழுதிய கதையைச் சொல்வதையும், அதில் வரும் நாயகன், நாயகியாக ப்ருதிவி மற்றும் சரண்யாவை சீதா நினைத்துப் பார்ப்பதையும் அற்புதமாக செதுக்கியுள்ளார் இயக்குனர் பாக்யராஜ். மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல தரமான குடும்பப்படம் பார்த்த திருப்தியை பாரிஜாதம் தருகிறது.

| | | | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |