ஜூன் 23 2005
தராசு
வ..வ..வம்பு
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
முச்சந்தி
சிறுகதை
உள்ளங்கையில் உலகம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
இசையோவியம்
அறிவிப்பு
கவிதை
திரைவிமர்சனம்
கவிதை
அடடே !!
நையாண்டி
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : அறிந்தும் அறியாமலும்
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

Arya,Prakashraj, Navdeepபிறந்தது முதல் தாத்தாவால் வளர்க்கப்பட்டு வரும் செல்லப்பிள்ளையான நவ்தீப் பொறியியல் படிப்பிற்காக சென்னை வருகிறார். கல்லூரியில் தன்னுடன் படிக்கும் சமிக்ஷாவின் மீது காதல், நண்பனுடன் ஆட்டம் என்று அருமையாக செல்லும் நவ்தீப்பின் வாழ்க்கையில் தாதா ஆர்யா குறிக்கிடுகிறார். ஆர்யாவிற்கும் எதிர்
கோஷ்டிக்கும் இடையே நடக்கும் மோதலில் சமிக்ஷாவின் காலில் குண்டு பாய்ந்துவிட அதை நேரில் பார்த்த ஒரே சாட்சியாகிறார் நவ்தீப். ஆர்யாவிற்கு எதிராக நவ்தீப் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து ஆர்யாவைக் கைது செய்கிறார்கள் போலீஸ்.

நவிதீப்பை மிரட்ட அவரைக் கூட்டிகொண்டுவரும் ஆர்யாவின் அப்பா பிரகாஷ்ராஜ், நவ்தீப்பைப் பார்த்து அவரைக் கொல்ல மனமில்லாமல் வெறுமே பேசி அனுப்புகிறார். ஒரு கட்டத்தில் நவ்தீப்பைக் கொல்ல ஆர்யா ஆள் அனுப்ப அதே நேரத்தில் நவ்தீப் தன் மகன் என்ற உண்மையைக் கண்டுபிடிக்கிறார் பிரகாஷ்ராஜ். தாதா
பிரகாஷ்ராஜ் ஐயர் வீட்டுப் பெண்ணைக் காதலித்துக் கைபிடிக்கிறார். ஒரு கட்டத்தில் பிரகாஷ்ராஜ் போலீஸ் பிடியில் சிக்க, அப்போது பிறக்கும் நவ்தீப் பிறந்தவுடனேயே தன் தாயை இழந்துவிடுகிறார். அப்போதிலிருந்து தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறார் நவ்தீப். இதைத் தெரிந்துகொள்ளும் பிரகாஷ்ராஜ் அதிலிருந்து தன் வளர்ப்பு மகன் ஆர்யாவுடன் சேர்ந்து நவ்தீப் மீது அன்பு மழை பொழிய, அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் தடுமாறுகிறார் நவ்தீப். மேலும் நவ்தீப் சமிக்ஷாவின் காதலை சேர்த்துவைக்கிறேன் பேர்வழி என்று ஆர்யா அடிக்கும் கூத்தில் அவர்கள் மீது உச்சகட்ட வெறுப்பு கொள்கிறார் நவ்தீப். இதற்கிடையே போலீஸ் ஆர்யாவையும் பிரகாஷ்ராஜையும் என்கவுண்டரில் கொல்ல முடிவு செய்கிறார்கள். ஆர்யா, பிரகாஷ்ராஜின் நிலை என்ன ஆனது, நவ்தீப் மனதில் அவர்கள் இடம்பிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.

அப்பாவி இளைஞனாக அருமையாக நடித்திருக்கிறார் நவ்தீப். கிராமத்தில் தாத்தாவிடம் கெஞ்சிக்கூத்தாடி சென்னைக்கு வருவது, ஆர்யா - பிரகாஷ்ராஜின் போக்கு பிடிக்காமல் தயங்கி தயங்கி நிற்பது, அவர்களை வெளிப்படையாக திட்டுவது என்று படம் முழுக்க அட்டகாசம் செய்கிறார். இவர் அமைதி அட்டகாசம் என்றால்
ஆர்யா அதிரடி அட்டகாசம். ஒரு குட்டி தாதா ரோலுக்கு அருமையான தேர்வு ஆர்யா. முதலில் நவ்தீப்பை வெறுப்பதும், பிறகு அவர் பிரகாஷ்ராஜின் சொந்த மகன் என்று தெரிந்து அவர் மீது பாசமழை பொழிவதுமாக ஆர்யா சூப்பராக ஆட்டம் போட்டிருக்கிறார். ஆனால் பாவம் இவருக்கு ஜோடி என்று யாரும் இல்லை.

புதுமுகம் சமிக்ஷா. நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் இடத்திலெல்லாம் நடிக்க முயற்சி செய்திருப்பதே பெரிய விஷயமாகப் படுகிறது. பாசமான அப்பா மற்றும் அமைதியான தாதாவாக பிரகாஷ்ராஜ். தூங்கும் மகனைக் கண்கொட்டாமல் பார்க்கும் அழகென்ன, அவனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்யும் பாங்கென்ன,
அவனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்று தெரிந்து புழுங்குவதென்ன என்று அருமையாக ஏற்றுகொண்ட பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். நவ்தீப்பின் நண்பனாக வரும் கிருஷ்ணாவிற்கு நகைச்சுவை நடிப்பில் ஒரு நல்ல இடம் காத்திருக்கிறது.

யுவன்ஷங்கரின் இசை ஓக்கே ரகம். கதை திரைக்கதை எழுதி படத்தை அருமையாக இயக்கியுள்ள விஷ்ணுவர்த்தனுக்கு நம் பாராட்டுகள். கிளைமாக்ஸில் கொஞ்சம் சினிமாத்தனம் தெரிந்தாலும் முன்னால் வரும் ஏகப்பட்ட அருமையான காட்சிகளுக்காக இயக்குனரை மன்னிக்கலாம். மொத்தத்தில் அறிந்தும் அறியாமலும் தமிழ்படங்களில் மசாலா வாடை ஏகத்திற்கும் வீசும் இந்தக் காலத்தில் தெரிந்தும் தெரியாமலும் வந்திருக்கும் நல்ல படங்களில் ஒன்று..

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |