ஜூன் 24 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
மேட்ச் பிக்சிங்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
பெண்ணோவியம்
வானவில்
உங்க.. சில புதிர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    பெண்ணோவியம் : சமையல்
    - மீனா
    | Printable version |

    ஆலூ கட்டோரி சாட்

    தேவையானவை

    மைதா - 100 கிராம்
    சமையல் சோடா - 2 சிட்டிகை
    வெண்ணெய் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    உருளைக்கிழங்கு - 100 கிராம்
    மிளகு - 1 டீஸ்பூன்
    சாட் மசாலா - 1 டீஸ்பூன்
    ஆம்சூர் பொடி - அரை டீஸ்பூன்
    எலுமிச்சம் பழம் - 1

    செய்முறை

    மைதவுடன் சமையல் சோடா சேர்த்து தேவையான அளவு தண்னீர், உப்பு சேர்த்து பூரி பிசைவது போல பிசைந்து கொள்ளவும். மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி பூரியாக இடவும். ஒரு கிண்ணத்தைக் கவிழ்த்து அதன் மேல் மற்றும் ஓரப் பகுதிகளில் வெண்னெய் தடவி பூரியை அதன் மேல் பரவலாகப் போடவும். இப்போது கிண்ணத்தை மேல்புறமாக ஒரு இடுக்கி கொண்டு பிடித்து எண்ணெய்யில் டிப் ஃப்ரை செய்யவும். பூரி கிண்ணத்தின் வடிவிலேயே வந்திருக்கும்.

    வேகவைத்த உருளைக்கிழங்குகளை நன்றாக மசித்து அதில் தேவையான உப்பு சேர்த்து மிளகுப் பொடி, சாட் மசாலா, ஆம்சூர் பொடி கலந்து பிசைந்து கொள்ளவும். இந்தக் கறியை கப் ஷேப்பிலிருக்கும் கட்டோ ரிக்குள் வைத்து கொத்தமல்லித் தழைகளைத் தூவி எலுமிச்சம்பழத் துண்டு, தக்காளி - இனிப்பு கார சாஸுடன் பரிமாறவும்.


    சூஜி - பேசன் டோக்ளா

    தேவையானவை

    தேங்காய்த் துருவல் - அரை கப்
    கடலை மாவு - 2 கப்
    ரவை - 1 கப்
    எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறு துண்டு
    எண்ணெய்  - 2 டீஸ்பூன்
    சமையல் சோடா - 1 சிட்டிகை
    உப்பு - தேவையான அளவு
    கடுகு - 1 டீஸ்பூன்
    சீரகம் -  1 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு
    துறுவிய கேரட், வெள்ளரிக்காய் - 1/2 கப்

    செய்முறை

    ரவையில் தண்னீர் விட்டு ஊற விடவும். இரண்டு மணி நேரம் ஊறியதும் அதில் கடலை மாவு, உப்பு, எலுமிச்சைச் சாறு, துறுவிய இஞ்சி, சமையல் சோடா ஆகியவற்றைச் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். பஜ்ஜி மாவு பதத்துக்கு நுரை வரும்படி கரைக்க வேண்டும். இந்தக் கலவையை ப்ரஷர் பேனில் எண்னெய் தடவி ஊற்றவும். வெயிட் போடாமல் மிதமான தீயில் பதினைந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆறியதும் விருப்பமான அளவில் விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வெட்டி வைத்துள்ள டோ க்ளா துண்டுகளின் மீது கொட்டவும். அதன் மீது துறுவிய தேங்காய், கேரட், வெள்ளரியைப் பரவலாகத் தூவி கொத்தமல்லித் தழைகளைப் போட்டு அலங்கரிக்கவும். தக்காளி சாஸ் அல்லது புதினா சட்னியுடன் சுவைக்க டோ க்ளா சூப்பர் ஜோராக இருக்கும்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |