|
கடல் தொடும் வானம்!
கருமேக அடர்த்தியின் இருளில் கவின்மிகு தேசம்!
அருஞ்சொற்பொருள் அறியப்படாத கவிதையின் பொய்கள்!
சுமையாய் நிலைகொள்ளும் தென்றலின் திண்மை!
"வான் ஈர்ப்பு விசை"- நியூட்டனின் புது இயற்பியல்!
ஆக்ஸிஜன் அனுபவிக்கும் நீர்நிலைகளின் ஆழத்தின் சலனம்!
மழலை முத்தத்தில் ஈரத்தின் தூய்மை!
மேவும் விரல் தீண்டலால் சிணுங்கும் வீணையின் நாதம் - மொழிபெயர்ப்புத் தமிழின் வேதம்!
ஒலிப்பான்களின் உறுமல்கள் விழுங்கப்பட்ட நகரின் மொளனம்!
இவை அனைத்தும் உணரும் - காதல் கொண்ட தருணம்!
|