ஜூன் 30 2005
தராசு
வ..வ..வம்பு
டெலிவுட்
முச்சந்தி
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
அறிவிப்பு
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
ஹாலிவுட் படங்கள்
கவிதை
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
திரைவிமர்சனம்
கவிதை
துணுக்கு
அடடே !!
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : கல்விப் பாடம்
- இராஜ.தியாகராஜன் [tyagu@sancharnet.in]
| Printable version | URL |

(வஞ்சி விருத்தம் - தேமா, கூவிளம், கூவிளம்)

தேர்வி லெத்தனை மாணவர்
ஓர்ந்த வெற்றியைத் தேடியே
ஆர்வ மேவிடக் கற்கிறார்;
சீர்மைக் கல்வியை நாளுமே!
 
ஈண்டு பெற்றிடும் தோல்வியுந்
தாண்டி நெஞ்சக வன்மையால்,
மீண்டும் வெற்றியைத் சேர்வதே;
நீண்ட கல்வியின் பாடமாய்ப்
 
பள்ளித் தேர்வினில் தோற்றவர்,
வெல்லு மூக்கமே சோர்ந்திடா
துள்ளம், மீளவுந் தேர்வதே
நல்ல மாணவர் தன்மையாம்!

உங்கள் கருத்து  
D Belson
1/17/2006 , 8:05:49 AM

 [Comment url]
கவிதை மிக அருமை. கல்வியின் பயன் சொன்னது செவிக்கு நலன்
   
இராஜ. தியாகராஜன்
1/29/2006 , 11:42:54 PM

 [Comment url]
அன்புள்ள பால் பெல்சன் அவர்கட்கும்,
தமிழோவியம் ஆசிரியர்க்கும்,
இராஜ. தியாகராஜனின் வணக்கம்.

எம் மழலையின் உடல்நலக் குறைவால், பாராட்டுரைக்குத் தாமதமாக பதிலிறுக்கிறேன். மன்னிக்கவும். கடந்தவாண்டு, தேர்வில் தோற்றமைக்கு, பல மாணவர்கள், தற்கொலை செய்துகொண்டனர் என்றும், முயற்சி செய்தனர் என்றும் பல நாளிதழ்களில் கண்டு உளம் வருந்தி நானெழுதிய கவிதை.

அன்புடன்
இராஜ.தியாகராஜன்
   
RAGU GERMANY
5/25/2006 , 12:16:59 PM

 [Comment url]
முதுகெலும்பைக் காணவில்லை!



தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

தலை மீது சுமக்கின்றான்

அடிமை என்னும் சொல்லை!

தமிழன் முதுகெலும்பைக் காணவில்லை!

எதிரியைத் தலைவனாய் எண்ணுகின்றான்!

எச்சிலை அவன் போடத் தின்னுகின்றான்!

எதிரிக்கே மாலைகள் சூட்டுகின்றான்!

எவனுக்கும் பல்லையே காட்டுகின்றான்!

இசை தெலுங்கானது பாட்டினிலே!

இந்தி கோல் ஓச்சுது நாட்டினிலே!

திசைதோறும் ஆங்கிலம் வாயினிலே!

தீந்தமிழ் எரியுது தீயினிலே1

ஒடுங்கி ஒடுங்கி இவன் ஆமையானான்!

உதைத்தாலும் வதைத்தாலும் ஊமையானான்!

நடுங்கி நடுங்கி இவன் வாழ்ந்துவிட்டான்!

நாளுக்கு நாளிவன் தாழ்ந்துவிட்டான்!

உலகெல்லாம் நேற்றிவன் ஆண்டதென்ன?

ஊர் ஊராய் இன்றிவன் மாண்டதென்ன?

மலைபோல நேற்றிவன் எழுந்ததென்ன?

மரம்போல வீழ்ந்தானே வீழ்
   
KASI ANNA RAGU GERMANY
5/25/2006 , 12:33:13 PM

 [Comment url]
பலி ஆடுகள்!

நாங்கள் பலி ஆடுகள்.. நம்புங்கள்!
வேங்கடம் ஈழம் இருபால் விளங்க
ஏனை இருதிரை அலைகடல் ஆர்ப்ப
நின்ற மண்ணில் நாளை விடுதலை
ஒன்றே மூச்சாய்த் தமிழன் உயர்த்தும்
வேள்வித் தீயில் வீழ்ந்து மடிவோம்!
ஆணை! இது தமிழ் மண்மேல் ஆணை!
எந்தாய்க் குலத்தீர்! எமக்கெலாம் மானம்
தந்த முலைகளே! வருக வந்து..
கழுத்தெல்லாம் மாலை கட்டுங்களம்மா!
சந்தனம் கொணர்ந்து சாத்தி மகிழ்வீர்;!
தடவிக்கொடுங்கள்! உங்கள் தமிழ்க்கை
படப்படத் தோள்கள் விம்மிப் பருப்போம்!
அன்னைத் தமிழின் அழுகுரல் கேட்டும்
திண்ணை ஆண்டிபோல் சிலபேர் தூங்கினார்!
நாங்கள் தூங்குதல் செய்யோம்! ஏனெனில்
எங்கள் உடலில் இரத்தம் உள்ளது!
கேளீர்.. இந்தக் குருதியை நாங்கள்
வேள்வித் தீயில் விடும்நாள் திருநாள்!
எங்கள் இன்னுயிர் எனப்படும் எங்கள்
தங்கக் காற்று தமிழன் எனக்கே!
நாங்கள் பலி ஆடுகள் நம்புங்கள்
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |