படத்தைப் பார்த்தீங்களா?
அந்தக்காலத்துல எங்க கல்லூரில புகைப்படப் போட்டி ஒன்னு வைச்சாங்க. இப்ப மாதிரியெல்லாம் இல்லை. புகைப்படம் என்பது காஸ்ட்லியான ஹாபி! ரோல், டெவெலப்மெண்ட் எல்லாம் காலேஜ் செலவுங்கறதால மக்கா அவனவன் கேமராவும் கையுமா காலேஜ் கேட்டுல இருந்து கக்கூசு வரைக்கும் திரிஞ்சிக்கிட்டு தழைகீழா நின்னெல்லாம் கோணம் பார்த்துக்கிட்டு இருந்தானுவ.
நமக்கு கேமராவைப்பத்தி எதுவும் தெரியாதுன்னாலும் இப்படி எடுத்தா நல்லா இருக்குமேன்னு அடிக்கடி தோணும். நம்ப பிரண்டு ஒருத்தன்கிட்ட கெஞ்சிக்கூத்தாடி அவன் போட்டா எல்லாம் எடுத்ததுக்கப்பறம் நானும் ஒன்னு எடுக்கறேன்னு அடம்புடிச்சு வாங்கிட்டேன். க்ளோஸ் ஃபிரண்டு ரங்காவை (ஆச்சரியமா இருக்கும்! எனக்கும் அவனுக்கும் நாலு வருஷமும் ஒரே ரசனை. ஆனந்தவிகடன் கதைகள்ல இருந்து காலேஜ் பிகருங்க கிட்ட பன்னு வாங்கறது வரை :) ) கூட்டிக்கிட்டு காலேஜிக்கு பின்னாடி இருந்த பொட்டல்காட்டுக்கு (காலேஜே பொட்டல் காடுதாங்க!) ஓட்டிக்கிட்டுபோய் எடுத்த படம். இப்ப ரங்கா சிங்கப்பூருல பெரிய IT இஞ்ஜினியரா இருக்காப்புல. இப்ப இந்த போட்டோவைக் காட்டி கேட்டா, ITல குப்பை கொட்டறதுக்கு இது எவ்வளவோ மேலுன்னு சொன்னாலும் சொல்லுவான் :)
போட்டோவை பார்த்துட்டு எல்லாரும் பாராட்டுனாங்க. போட்டி நடுவரான எங்க HOD க்கு மட்டும் ஒரே கடுப்பு. என்னன்னு விசாரிச்சா காலேஜ் மானத்தையே வாங்கிட்டனாம். அப்படி என்னதான் பிரச்சனைனா போட்டோவுக்கு வைச்ச தலைப்பாம்.
பரிசு கெடைச்சதான்னா கேக்கறீங்க? TC கெடைக்காம இருந்தது பெரிய விசயம்! அப்படி என்னடா தலைப்பு வைச்சன்னா கேக்கறீங்க?
AFTER B.E.
|