|
தொலைநோக்குப் பார்வையைத் தொலைத்து விட்ட மனிதன் இரசாயண அணிவகுப்பிற்கு விண்ணில் ராஜபாட்டை அமைத்து விட்டான்.
சொடுக்குப் போட்ட மாத்திரத்தில் சொந்தத் தேவைகள் வந்துநிற்க சொகுசான வாழ்க்கைச் சூழலில் முழுவதுமாய்ப் புதைந்து விட்டான்.
விஞ்ஞானத்தை வளர்த்து மனிதன் வியக்க வைத்தாலும் விளைவாக அழிவைத் தான் விளைச்சலில் அதிகமாக்குகிறான்.
கொட்டக் கொட்டக் குனிந்துநிற்கும் கோழையல்ல இயற்கை அன்னை. நின்று கொல்லும் தெய்வமாய் இன்று செயலில் இறங்கிவிட்டாள்.
பாலைவன வெப்பத்தை நகரங்களில் பதியவைத்துப் பழி தீர்க்கிறாள். பூத்துக் குலுங்க வேண்டியதெல்லாம் பொசுங்குமாறு வெப்பத்தைப் பாய்ச்சுகிறாள்.
வெகுண்டெழுந்து அழித்துப் பேரிடர்களை வேதனைகளாய் விதைத்த பின்னும், சற்றாவது மனிதன் மாற வேண்டும், சுற்றுச்சூழலைச் சிந்தை கொள்ளவேண்டும். -சிதம்பரம் அருணாசலம்.
|