ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு வாசகனும் தனக்கான தனித்தனி அளவுகோல்கள் வைத்திருக்கிறாங்க கவிதை குறித்து.
சென்ற இதழ் தொடர்சி
தமிழோவியம் :- பெண்களுக்கு என்று நூலகம் கேட்டு எப்பொழுது எதற்காக அந்த போராட்டம் நடத்தினீர்கள்?
போராட்டமா. ஆமாம் போராட்டம் என்றுதான் சொல்லணும். நினைத்த புத்தகத்தை நினைத்த நேரத்தில் நூலகத்தில் எடுத்து படிக்க அப்போது 85 87 களில் வாய்ப்பு இல்லை. இராஜபாளையத்தில் காந்தி கலை மன்ற நூலகத்தில் இப்பொழுது போய் பெண்கள் நூல்களை எடுக்கிறார்கள். ஆனால் அப்பொழுது நான் எடுக்கப் போவதை நினைத்தும் பார்க்க முடியாது. அரசு நூலகத்திற்கு போனால் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் போக வேண்டும். நான் சென்றால் நான் மட்டும் தான் பெண்ணாக இருப்பேன். நான் பத்து முறை போனால் ஒரு முறை யாராவது ஒரு பெண் வருவார்கள். ஆங்கில இலக்கியம் ரெபரன்ஸ¤க்காக நூல் தேவையாய் இருக்கும். அதே சமயம் பொழுது போக்குக்காக வாசிப்பது மாறி தேடல்கள் ஏற்பட ஆரம்பித்தது அப்போதுதான். நாவல்கள் வாசிப்பது மாறி தேர்ந்தெடுத்த நாவல்கள் வாசிக்கும் கட்டம் அப்போதுதான் வந்திருக்கணும்னு நினைக்கிறேன். எழுத்தாளர்களின் பெயர் குறிப்பிட்டு புத்தகங்கள் தேடி வாசிக்கும் அளவில் அப்போதுதான் ளர்ந்திருக்கணும்னு நினைக்கிறேன். இந்த சமயத்தில் தான் பெண்களுக்குகென்று தனி நூலகம் வேண்டும் என்று போராட்டம் நடந்தது. நூலகவரி கட்டுகிறோம். நமக்கென்று ஏன் தனி நூலகம் இருக்கக்கூடாதென்று குழந்தைகள் பெண்களுக்கு தனி நூலகம் வேண்டும் என்று கேட்கிறோம். நான்கு பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் சேர்ந்து அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். 1991 ஜனவரியில் நூலகம் கிடைத்தது. நூலகத்துக்கு போராட்டமான்னு நினைக்கலாம். ஆனால் நடந்த உண்மை இது. இன்னும் இராஜபாளைய பெண்கள் நூலகத்திற்கு கட்டிடம் கட்டுவதற்கு இடம் இல்லை. இது தனியாக 2 மணிநேரத்துக்கும் மேல் பேசவேண்டிய விஷயம்.
தமிழோவியம் :- மெளனமாய் உன் முன்னே என்ற உங்களின் கவிதை தொகுப்பிற்கு அமுதசுரபியில் வந்த ஒரு விமர்சனம். எளிய வார்த்தைகளை கொண்டு கவிதை எழுதுபவர்களின் கவிதையை ஒரு முறைக்கு மேல் படிக்க இயலாது. ஆனால் எளிய வார்த்தைகளை கொண்டு கவிதை எழுதும் உங்கள் கவிதைகள் படிக்க தூண்டுபவை என்று விமர்சனம் வந்திருந்தது. இந்த மாதி¡¢ வார்த்தைகளை கனகச்சிதமாக எழதக் கூடிய திறமை இயற்கையாகவே அமைந்ததா?
பதில் :- வார்த்தைகளை கனகச்சிதமாக எழுதும் திறமை அது எப்படினு எனக்கு சொல்லத் தொ¢யல. அமுதசுரபியில் அண்ணா கண்ணண் எழுதியது அவருடைய கருத்து விமர்சனம். நான் எழுதும் பொழுது இப்படி பண்ணணும் என நினைத்து பண்ணல. அது தானாக நடந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் பெண்களுக்கு என்று தனி நூலகம் வேண்டும் என்று போராடிய பொழுது நமக்கே நமக்கென்று நூலகம் வந்து விட்டது.
பெண்கள் சிறுவர் நூலகம் வேண்டும் என்று போராடுகிறோம். நூலகம் கிடைக்கிறது. அப்போதெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று புத்தகங்களையாவது நான் படிச்சுடனும் என்ற வேகம் இருந்தது. ஒரு நாளுக்கு குறைந்தது இரண்டு நூல் பின் ஒரு நூலையாவது படிச்சுடணும் என குறைந்தது. இப்போது ஒரு புத்தகம் படிப்பதற்கு குறைந்தது மூன்று நாட்கள் ஆகுது. இப்படி படித்துக் கொண்டே இருக்கும் பொழுது 87லிருந்தே எழுதியிருந்தாலும் 98ம் வருடத்திற்கு அப்புறம் தான் நாம எழுதுறோம் என்பதே எனக்குத் தொ¢ய ஆரம்பித்தது. தானாக நிகழ்ந்தது அவ்வளவுதான். அப்போதும்கூட எழுதுவதை வளர்த்துக் கொள்ளணும் என்பது எல்லாம் எனக்கு இல்லவே இல்லை.
தமிழோவியம் :- இன்றைய காலக்கட்டத்தில் கவிதை என்பது எதிர்கொள்கிற சிக்கல்கள் சவால்கள் என்ன மேடம்.?
பதில் :- கவிதை எதிர்கொள்கிற சிக்கல்ன்னா எந்த விதத்தில் கேள்வி கேட்கிறீர்கள் என தொ¢யவில்லை. ஆனால் நான் சொல்வது கவிதையை ஒருத்தர் வாசிக்கும் பொழுது புரியணும். அவ்வளவு தான். கவிதை எதிர்கொள்கிற முதல் சிக்கல் அதுதான். பிறகு வாசிக்கும் சுகானுபவத்தைத் தரணும் எந்த உணர்வானாலும் மனதைத் தொடும்படி பேசணும் கவிதை. இத்தனை வருஷமாக தொடர்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன் என்ற அடிப்படையில் ஒன்று சொல்லலாம். சில கவிதைகளை படிப்பதற்கு பயிற்சி தேவைப்படுது. தொடர்ந்து பயிற்சி இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு போகக் கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவங்க எழுத்தை கவனித்துக் கொண்டே இருந்தால்தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியும். கடந்த நான்கு வருஷத்துக்குள்ள எனக்கு புரிதல் நிறைய இருக்கு. சில கவிதைகள் ஒரு முறை வாசித்த உடனே புரிந்து விடும். ஒருத்தர் எழுதின ஒரு கவிதையை ஜந்து முறை வாசித்தால் தான் புரியும். சில கவிதைகள் பத்து முறை வாசித்தால் கூடப் புரியாது.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக சொல்வாங்க. புரியும்படி எழுதல என்று பொதுப்படையான குற்றச்சாட்டை வைத்து விட முடியாது. நாம அதுக்கு தயாராக இருக்கிறோமா என்பதையும் பார்க்க வேண்டும். சிலர் சொல்றாங்க. புரியக் கூடாதென்றே எழுதுறவங்க கொஞ்சம் பேர் எழுதியிருக்கலாம். அவங்க கவிதையை நான் வாசித்திருக்க மாட்டேன் என நினைக்கிறேன்.
ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு வாசகனும் தனக்கான தனித்தனி அளவுகோல்கள் வைத்திருக்கிறாங்க கவிதை குறித்து. இதுவும் கவிதைக்கான முக்கிய சவால். அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஒரு கவிதையை ஒரு படைப்பாளி படைக்கையில் கவிதைக்கான சவால் தீரும். ஆனால் சிக்கலே அதுதான். என்னுடைய கவிதை எதிர்கொள்கிற சவாலை நானே எனக்கு கேட்டிருக்கிறேன். இந்தக் கவிதையை மற்றவர்கள் வாசிக்கும் பொழுது இந்தக் கவிதை அகவயப் பாடலா? அன்பை பற்றி சொல்றப்ப அதை ஏன் அவ்வளவு சீப்பாக நினைக்கிறங்க என்பது தான் எனக்கு தெரியல. சர்வசாதாரணமாக இப்போதெல்லாம் பலர் பார்த்தேன் சிரித்தோம் நாங்கள் அப்படிங்குற கவிதை எழுதுவதனால அப்படி நினைக்கிறாங்களானு தோணும். நேசிக்கிறது குற்றமில்ல. குரோதத்தை பகையுணர்வை படைப்பில் வெளிப்படுத்தும் போது அன்பை ஏன் வெளிப்படுத்தக்கூடாது. பொதுவில் அன்பை வெளிப்படுத்துவதை இன்னும் தவறாகவே நாம் கருதுகிறோம். அன்பை வெளிப்படுத்தாத ஒரு காரணத்தால் நம்மால் ஒரு சமூக விரோதியை உருவாக்க முடியும். ஒரு சமூக விரோதி உருவாகிறான் என்றால் அதுக்கு அவன் மட்டும் பொறுப்பு கிடையாது. அன்பளிக்காத காரணத்தாலேயே அவன் உருவாகிறான். சமுதாயமும் அதற்கு பொறுப்பு. என்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் அவன் இருக்கிறான் என்றால் அதுக்கு நானும்தான் பொறுப்பு. கவிதைக்கான சிக்கலும் சவாலும் இப்படியே ஆரம்பிக்கின்றன.
தமிழோவியம் :- புதுக்கவிதை காலவதியாகி விட்டது என்கிறார் மாலன். புதுக்கவிதை செத்து விட்டது என்கிறார் பழமலய். புதுக்கவிதை காலவதியாகிவிட்டது செத்து விட்டது என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்கிறார் திலகபாமா. உங்களின் கருத்து என்ன?
ஒரு படைப்பாளி முதலில் எழுத ஆரம்பிக்கும் படைப்பு கவிதை அதுவும் புதுக்கவிதையாகவே இருக்கிறது. பிறகு படைப்பாளி தன்னை வளர்த்துக் கொள்கிறான் மற்ற படைப்புகளுக்கு என நினைக்கிறேன். கவிதை எழுதாத மற்ற படைப்புகள் படைக்கும் எழுத்தாளர்களின் சிறுகதை நாவல் ஏன் கட்டுரைகளில் கூட கவிதை நடை சில இடங்களில் காணக்கிடைப்பதை பார்த்து ரசித்திருக்கிறேன்.
புதுக்கவிதையின் வளர்ச்சி நவீன கவிதையோ வேறு பெயரோ எதுவாகவோ இருக்கட்டும். ஆனால் புதுக்கவிதை இன்றைய காலக்கட்டத்தில் இன்னும் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்துக்கும் நீடிக்கலாம். இன்னும் புதுக்கவிதையில் பரீட்சார்த்த முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதற்கு வேறுவேறு பெயர்கள் கொடுத்தாலும்.
தமிழோவியம் :- ஜரோப்பிய நாகாரிகத்தை தொ¢ந்து கொள்ள லத்தினும் கிரேக்கமும் உதவுவதாக சொல்கிறார்கள். அதேபோல் இந்திய நாகரீகத்தை வரலாற்றை தெரிந்து கொள்ள சமஸ்கிருதம் ஏற்ற மொழி என்பதை நம்புகிறீர்களா?
(தொடரும்..)
|