ஜூலை 13 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : 'தேனீ' உமர் மறைவு - கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.
- அப்துல் கலாம் ஆசாத் [azad_ak@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

அன்புடையீர்,

Umar Thambiஅனேகரைப் போலவே எனது வலைப்பதிவிலும் 'தேனீ' இயங்கு எழுத்துருதான் நண்பர்கள் அமைத்துத் தந்தார்கள். அதனைத் தந்த உமர் அவர்கள் மறைந்துவிட்டார் என்னும் செய்தி வருத்தத்தினை அளிக்கிறது.

துபாயில் அவரது அறைத்தோழராக இருந்த எனது நண்பர் ரஃபியா அவர்களிடம் துக்கம் விசாரிக்கும்போது, உமர் அவர்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட செய்திகளை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

உமர் என்று நம்மால் அழைக்கப்படும் அவரது முழுப்பெயர் உமர் தம்பி. தஞ்சை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 55இற்குள்தான் இருக்கும். மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர்மொய்தீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார்.

இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. இருபது ஆண்டுகளாக துபாயில் இந்தப் பணியைச் செய்த அவர், சென்ற ஆறுமாதங்களுக்கு முன்னர் துபாயில் தனது பணியை முடித்துவிட்டு 'ஒருவழியில்' தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

இளம் வயதிலேயே சர்க்கரை நோய்க்கு ஆளான உமர் அவர்கள் சென்ற மூன்றாண்டுகளாக தொண்டைப் புண்ணாலும் தொல்லைக்குள்ளாகியிருக்கிறார். துபாயிலிருந்து மும்பைக்கு வரும் வழியில், விமானத்தில் உணவருந்தும்போது விழுங்குவதில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு உணவு தொண்டையில் சிக்கியிருக்கிறது. தொடர்ந்த மூச்சுத்திணறல் விமானத்தைப் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது. தரையிறங்கியதும் அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன.

தொண்டைப் புண்ணிற்கு அதன் பின்னர் சரியான சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டிருக்கிறார். சில சமயங்களில் மிகுந்த சிரமத்துடன் தலையைச் சாய்த்தே வைப்பது முதலான பல அசௌகரியங்களுக்கு ஆளாகியும் தளர்ந்துவிடாமல் எழுத்துருக்களுக்கான தனது சேவையைத் தொடர்ந்து செய்திருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டதும் அவர் மேலிருந்த மதிப்பு அதிகமாகின்றது.

அவருக்கு மூன்று மகன்கள். அதில் மூத்த மகனின் திருமணம் சென்ற வாரத்தில்தான் நடந்திருக்கின்றது. மற்ற இரண்டு மகன்களும் மாணவர்கள்.

உமருக்கும் அவரது அண்ணனுக்கும் ஏறக்குறைய பத்தாண்டுகள் வயது வித்தியாசம் இருக்குமாம். ஆனாலும், துபாயில் தமிழர்கள் அதிகமாகக்கூடும் சிக்கத்அல்கைல் வீதியில் அவர்கள் நடந்து செல்வதைப் பார்த்தால் இரண்டு நண்பர்கள் தோள்மேல் கைபோட்டுக்கொண்டு நடப்பதைப் போலத்தான் இருக்குமாம். அவரது ஊரைச் சேர்ந்தவர்கள் 'என்ன இது அண்ணன் தம்பி உறவா, நட்பா' எனப் பலமுறை வியந்திருக்கிறார்களாம்.

இப்படிப் பல நற்பண்புகளைக் கொண்டிருந்த உமர் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடையவும், அவரது இழப்பைத் தாங்கும் சக்தியை அவரது குடும்பத்தார் பெறவும் இறைவனிடம் வேண்டுகிறேன்.

தோற்றம்:15.06.1953
மறைவு : 12.07.2006தமிழ் யூனிகோடு செயற்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருப்பவர் உமர். அவர் உருவாக்கிய இயங்கு எழுத்துருதான் பலருடைய வலைப்பதிவுகளிலும் இயங்கிக்கொண்டிருக்கிறது. இயங்கு எழுத்துருவைத் தவிர நிறையச் செயலிகளை அவர் உருவாக்கியிருக்கிறார். ஏதேனும் புதிய செயலி உருவாக்கினால் யாகூ மற்றும் கூகுள் குழுமங்களில் மடல்வழியே தகவல் தருவார். தனியாக ஓரிடத்தில் அவற்றைச் சேர்த்து வைக்காததால் பலரைப் போய்ச்சேர்ந்ததில்லை.

உமர் உருவாக்கிய செயலிகள் பட்டியல் இதோ.

Roman to Uni: Type & convert
http://www.geocities.com/csd_one/AWCUniWriter.html

Online RSS creator - can be used in offline as well
http://www.geocities.com/csd_one/RSS_generator.html

RSS creator program
http://www.geocities.com/csd_one/SRSS.zip
http://mathy.kandasamy.net/unicode/SRSS.zip

Read Unicode text which appeared as a stream of numbers
http://www.geocities.com/csd_one/UniTag2U.htm

Any to Uni: Any encoding to unicode converter
http://www.geocities.com/csd_one/A2Usetup.zip
http://mathy.kandasamy.net/unicode/A2Usetup.zip

Onscreen Unicode converter
http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://mathy.kandasamy.net/unicode/UniConMagz.zip

A set of GP Licenced fonts
http://www.geocities.com/csd_one/fonts/GPLfonts.zip
http://mathy.kandasamy.net/unicode/GPLfonts.zip

Thenee Unicode font
http://www.geocities.com/csd_one/fonts/TheneeUniTx.zip
http://mathy.kandasamy.net/unicode/TheneeUniTx.zip

An universal dynamic font link that works for all websites & Blogs
http://www.geocities.com/csd_one/umar/THENEE.eot

Another Universal dynamic font as same as Thenee
http://www.geocities.com/csd_one/umar/VAIGAIU0.eot

(நன்றி : மதி)

| | |
oooOooo
அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |