ஜூலை 14 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
ஹல்வா
திரையோவியம்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
கவிதை
நையாண்டி
சிறுகதை
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : பூனைகளுக்கு மணி கட்டுவாரா நம் பிரதமர்?
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

சென்ற வாரம் லண்டனில் நேர்ந்த தீவிரவாதத் தாக்குதல் உலக நாடுகளால் நிச்சயம் கண்டிக்கப்படவேண்டிய விஷயம். ஏற்கனவே தீவிரவாதிகளின் செயல்களால் உச்சகட்ட உன்மத்தம் அடைந்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இத்தாக்குதலுக்குப் பிறகு மேலும் உக்கிரமாயிருக்கின்றன.

இத்தகைய தீவிரவாதிகளை உருவாக்கியதில் நேரடியாக மற்றும் மறைமுகமாக அமெரிக்காவும் நிச்சயம் சம்மந்தப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக கொழுந்துவிட்டெறியும் இந்தியா-பாக்கிஸ்தான் மோதலை ரசித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகள் போரில் பாக். இந்தியாவை நேரடியாக
எதிர்க்க முடியாமல் தீவிரவாதிகளின் உதவியை நாடிய போது பாக்கிஸ்தானைக் கண்டிக்க யாருமே முன்வரவில்லை. எண்பதுகளில் ரஷ்யாவிற்கு எதிராக ஆப்கானில் பின்லேடன் உள்ளிட்ட தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டது அமெரிக்கா - அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுத்தது அமெரிக்கா - அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது அமெரிக்கா - இதைப் போன்ற பல உண்மைகளை மறுக்க இயலாமல் தவிக்கிறது அமெரிக்கா.

ஆனாலும் அவர்கள் ஒருகாலத்தில் உருவாக்கிய தீவிரவாதிகள் அவர்களையே தாக்குவதை அவர்களால் ஜீரணிக்க இயலவில்லை. இந்தியாவும் பாக்கிஸ்தானும் சண்டையிட்டுக்கொண்ட போது இந்தியாவிடம் நீங்கள் சமாதானமாக போகவேண்டும் என்று வண்டி வண்டியாக அறிவுரை வழங்கிய அமெரிக்காவும் பிரிட்டனும், தங்கள் நாட்டிற்கு ஒரு ஆபத்து என்ற போது அனைத்து விதிமுறைகளையும் தூக்கி எறிந்து விட்டு போருக்குப் புறப்பட்டன. இதைத் தான் நம் முன்னோர்கள் மாமியார் உடைத்தால் மண் குடம் - மருமகள் உடைத்தால் பொன்குடம் என்றார்களோ?

மேலும் பாக்.கிற்கு இன்று வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது அமெரிக்கா. லண்டன் குண்டுவெடிப்பிற்கு பிரிட்டனைச் சேர்ந்த பாக் இளைஞர்களே காரணம் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டாலும் பிரிட்டிஷ் அரசும் பாக் அரசும் மவுனம் காத்து வருகின்றவே தவிர வேறு ஒன்றும்
செய்யவில்லை. ஈராக்கையும் ஆப்கானிஸ்தானையும் உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கு தீவிரவாதிகள் நிறைந்த நாடு காரணத்தைச் சொல்லி அழித்த அமெரிக்க - பிரிட்டிஷ் அரசுகள் பாக்கிஸ்தான் மீது குறைந்த பட்ச கண்டனத்தைக் கூட வெளியிட தயங்கி வருகின்றன. இதற்கெல்லாம் சிகரம் வைப்பதைப் போல இந்திய
எல்லைக்குள் ஊடுருவ 2000 பாக்.தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக புலனாய்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தீவிரவாதிகளை அழிப்பதைப் பற்றிப் பேச எல்லாத் தகுதிகளும் உள்ள நாடு என்ற வகையில் - அவர்களது அட்டகாசங்களை 50 ஆண்டுகளுக்கும் மேலாக சமாளித்து உரிய முறையில் அவர்களுக்கு பதிலடி கொடுத்துவரும் நாடு என்ற அடிப்படையில் அமெரிக்கா சென்று இருக்கும் நம் பிரதமர் அங்கு தீவிரவாத
இயக்கங்களை தடை செய்வதைக் குறித்தும், தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வரும் நாடுகளைப் பற்றியும் தீவிரமாக பேசவேண்டும். தீவிரவாதத் தடுப்பு விஷயத்தில் நம் நாட்டின் நிலையையும் அண்டை நாடு போடும் இரட்டை வேஷத்தையும் உலகெங்கும் எடுத்துச் சொல்லி நமக்கு ஆதரவு தேடவேண்டிய நேரம் இது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு வெளிநாடுகளில் உயரத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில் நம் பிரதமரின் குரல் நிச்சயம் அமெரிக்க பாராளுமன்றத்தில் எடுபடும் என்று நம்புவோம்.

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |