ஜூலை 15 2004
தராசு
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
வேர்கள்
சிறுகதை
காந்தீய விழுமியங்கள்
திரையோவியம்
டாக்டர் பட்டம்
பெண்ணோவியம்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    டாக்டர் பட்டம் : உலகநாயகனுக்கு டாக்டர் பட்டம்
    - என்.டி. ராஜன்
    | Printable version |

    அன்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் பத்மஸ்ரீ கமலஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்துள்ளது.

    கமலஹாசன் நடித்த 'வசூல்ராஜா எம்.பி.பி.ஸ்' திரைப்படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது. கேசட்டை கமலஹாசன் வெளியிட திரு. ஏவி.எம் சரவணன் பெற்றுக் கொண்டார். அப்பொழுது  துணை வேந்தர் திரு. ஜேப்பியார் அவர்கள் இந்த செய்தியை வெளியிட்டார்.

    விழாவில் திரு. ஏவி.எம் சரவணம் பேசும் பொழுது, 1960ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி கமலஹாசன் சிறுவனாக நடித்து வெளிவந்த படம் 'களத்தூர் கண்ணமா', பின்னர் 1982ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி கலஹாசன் நடித்து வெளிவந்த படம் 'சகலகலா வல்லவன்'. இந்த இரண்டு படங்களும் சூப்பர் ஹிட். அதே போல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளிவரப்போகும் 'வசூல்ராஜா எம்.பி.பி.ஸும்' சூப்பர் ஹிட் ஆகும் என்று தெரிவித்தார்.

    படத்தின் இயக்குனர் சரண் பேசுகையில், இந்த படத்தில் கமலஹாசனோடு பணிபுரிந்ததில் பல அறிய விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும், மேலும் அவர் பல டாக்டர் பட்டங்களுக்கு அருகதையானவர் என்று தெரிவித்தார்.

    பத்மஸ்ரீ கமலஹாசன் நன்றியுரையில், தனது இந்த வெற்றிக்கு பலர் காரணமாகவும் குறிப்பாக தனது

    தலைவர் வாழ்க

    பாரன்ஹீட் - 911 படத்தில், இரட்டை கோபுரம் சரிந்த செய்தியை கேட்டதும் அதிபர். ஜார்ஜ் புஷ் வாயடைத்து நின்றதாகவும் அப்பொழுது அதிபர் என்ன நினைத்திருப்பார் என்பதை மைக்கேல் மூர் தனது வர்ணணையில் சொல்லிக் கொண்டு வருவார். அவ்வாறு மைக்கேல் மூர் சொன்னது சரியில்லை என்று எட்டாவது விமானப் படை கமாண்டர் ஜென். கெக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் அந்த சோக தினத்தன்று தான் அதிபர் புஷ்ஷுடன் இரண்டு மணி நேரம் இருந்ததாகவும், அதிபர் புஷ்ஷைப் போன்று ஒரு துணிச்சல்மிக்க தலைவரை வாழ்நாளில் பார்த்தில்லை என்றும், அன்று அதிபர் புஷ் தலைவராக இருந்தது நமது பாக்கியம் என்று  தெரிவித்துள்ளார்.
    நாடக குரு 'அவ்வை ஷண்முகம்' மற்றும் இயக்குனர் கே.பாலசந்தர் என்று தெரிவித்தார். மேலும் இந்த டாக்டர் பட்டம் தனக்கு கூடுதல் பொறுப்பை தந்துள்ளதாகவும் ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கப்போவதாகவும் கூறினார்.

    முன்னர் படத்தின் இசையமைப்பாளர் திரு. பரத்வாஜ் இந்த படத்தில் பாடிய பாடகர்களை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்

    - சென்னையிலிருந்து என்.டி. ராஜன்

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |