ஜூலை 20 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : லலிதாகுமாரியுடன் ஓர் நேர்காணல்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

நான் ஒரு அப்பாவி, என்னை ஏமாற்றியவர்களை சட்டம் தண்டிக்க வேண்டும் என்கிறார் லலிதாகுமாரி. யார் இந்த லலிதாகுமாரி? தமிழகத்தில் பலர் மீது பாலியல் குற்றம் சுமத்தி தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளுக்கு நன்கு தீனி போட்டு வரும் இவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். ரகசிய வாக்குமூலம் தர மதுரை வந்த இவரை, வாக்குமூலம் தருவதற்கு முன்பு பேட்டி எடுக்க வாய்ப்பு கிடைத்தது. பளிச்சென்று பேசினார். அவர் பேசியதிலிருந்து...........

தமிழோவியம் :- உங்களைப் பற்றிச் சொல்ல முடியுமா?

பதில் :- எனக்கு வயது 39 ஆகிறது. என்னுடைய பெயர் லலிதாகுமாரி. எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது. நான் சேவைத் துறை என்று சொல்லப்படும் நர்ஸ் வேலை பார்த்தவள். இன்று பல ஆண்களால் என் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு விட்டது. அதற்கான நியாயத்தைப் பெறத் தான் போராடிக் கொண்டு இருக்கிறேன்.மற்றபடி என்னைப் பற்றிச் சொல்ல வேறு ஒன்றும் இல்லை.

தமிழோவியம் :- உங்களை ஒரு அப்பாவி போல் பார்க்காமல், ஒரு மோசடிப் பெண் ரீதியில் பத்திரிக்கைகள் பார்க்கின்றது. இதனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- ஒரு சில பத்திரிக்கைகள் தான் என்னைப் பற்றி மோசமாக, நான் ஒரு ஏமாற்றும் பெண் போல காட்டி எழுதுகிறார்கள். ஆனால் என்னிடம் பழகியவர்கள் என்னையும் கற்பழித்ததோடு, எனது பணத்தையும் எடுத்துச் சென்றவர்கள் தான் அதிகம். தப்பு செய்யும் எந்த ஆண்களையும் தண்டிக்க முடியாமல் நீதி கேட்கும் என்னைத் தான் குற்றவாளி போல் காட்டுகிறார்கள். இதனை எல்லாம் படிக்கும் பொழுது கோபமாகத் தான் வருகிறது. அதனால் நான் பத்திரிக்கைகளை பெரும்பாலும் படிப்பதே கிடையாது.

தமிழோவியம் :- உங்களது கடந்த கால வாழ்க்கை நம்பகத் தகுந்த மாதிரி இல்லை என்கிறார்களே?

பதில் :- சொன்ன ஆளை நேரில் உங்களால் காண்பிக்க முடியுமா? சும்மா நீங்களே இப்படி கேள்வி கேட்கக் கூடாது. நான் எவனையும் ஏமாற்றும் பெண் கிடையாது. 1983ம் ஆண்டு எனக்கும் அப்புக்குட்டன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்பொழுது தான் நான் வெளிநாட்டில் நர்ஸாக வேலை பார்த்து பணம் அதிகமாக வைத்திருந்தேன். அந்தப் பணத்தை என்னிடம் இருந்து கைப்பற்றி விட்டு  எனது கணவர் என்னை ஏமாற்றிவிட்டுச் சென்று விட்டார். அதன் பின் அவர் மீது கோர்ட்டில் கேஸ் போட்டு மாதம் 150 ரூபாய் ஜீவனாம்சம் தர கோர்ட் தீர்ப்பு சொன்னது. பிறகு நான் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் வேலையை செய்தேன். அப்பொழுது சிவக்குமார் என்பவரை 1997ம் வருடம் திருமணம் செய்தேன். அவர் தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பும் படி என்னை துன்புறுத்தினார். பின் சண்டையாகி பிரிந்தோம். பின் திருமணமே வேண்டாம் என்று நாகர்கோவிலில் இருந்த என்னை பல பேர் கற்பழித்தனர். அதனால் தான் நான் நீதி கேட்டு புகார் கொடுத்துள்ளேன்.

தமிழோவியம் :- உங்களுக்கு பிடித்தமான பொழுது போக்குகள் பற்றி சொல்லுங்களேன்?

பதில் :- திரைப்படங்கள் பார்ப்பது, டி.வி. பார்ப்பது, புத்தகங்கள் படிப்பது எனக்கு அதிகமாக பிடிக்கும். மற்றபடி எல்லோரிடமும் சோசியலாக பலகும் குணம் எனக்குண்டு. அதுவே எனக்கு பாதுகாப்பாகவும் இருக்கிறது. வினையாகவும் இருக்கிறது.

தமிழோவியம் :- நீங்கள் 42 பேர் மீது கற்பழிப்பு புகார் கொடுத்து உள்ளீர்கள் என்று உங்களால் குற்றம் சாட்டப்படும் ஒரு முன்னாள் பத்திரிக்கையாளர் உங்கள் மீது குற்றம் சொல்கிறாரே?

பதில் :- அப்படி எல்லாம் கிடையாது. என்னை துன்புறுத்தும் பொழுது நான் புகார் செய்கிறேன். நான் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட சிவக்குமார் மீது தொடர்ந்த வழக்கு மதுரை நீதிமன்றம் வரும் பொழுது முன்னாள் பத்திரிக்கையாளர் ரவிச்சந்திரன் எனக்கு பழக்கம். தனக்கு பல பேரைத் தெரியும் என்றும், என்னைப் பற்றி பத்திரிக்கையில் நன்றாக எழுதி எனக்கு நீதி வாங்கித் தருவதாகவும் என்னிடம் சொன்னார். அதன் பின் அவரிடம் பழகினேன். அவரும் என்னை திருமணம் செய்வதாக சொல்லி என்னை பயன்படுத்திக் கொண்டார். மதுரை, திண்டுக்கல், பழனி Nபுhன்ற ஊர்களுக்கு என்னை அழைத்துச் சென்று என்னை கற்பழித்து விட்டார். பின் என்னை திருமணம் செய்து கொள்ளாமல் என்னிடம் 5 லட்சம் பணம் கொடு என்று மிரட்டினார். அதன் பின் என்னை கைகழுவி விட்டார். இது தான் உண்மை.

தமிழோவியம் :- பொதுவாக பெண்கள் பாலியல் துன்பங்களை வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். நீங்கள் துணிந்து சொல்கிறீர்கள். இதனால் தான் உங்களை இந்தச் சமூகம் தவறாக பார்க்கிறதா?

பதில் :- இன்று பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாமல் இருக்கிறது. எனக்கு முதல் முதலில் ஏற்பட்ட அனுபவங்களை புகாராக எழுதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனுப்பினேன். ஆனால் நீதி கிடைக்க வழி பிறக்கவில்லை. பெண்கள் பல இடங்களில் கற்பழிக்கப்படுகிறார்கள். அதனை அவர்கள் வெளியே சொல்ல பயப்படுகிறார்கள். தங்கள் குடும்ப வாழ்க்கை போய்விடுமோ என்று அவர்கள் பயப்படலாம் என நான் நினைக்கிறேன். நான் எனக்கு நேர்ந்ததை தைரியமாக சொல்வதை பலர் பாராட்டத்தான் செய்கிறார்கள்.

தமிழோவியம் :- உங்களுக்கு காவல் துறையினர் மூலம் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

பதில் :- காவல் துறையினரை நான் குற்றம் சாட்டுவதால் என்னை சித்ரவதை செய்கிறார்கள். தனியாக காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுக்கப் போனால் அங்கு அவளுக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கும் அதுதான் நேர்ந்தது. தற்பொழுது நீதிபதி முன்பு ரகசிய வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறேன். அதன்படி நீதி, நியாயம் கிடைக்கும் என் நம்புகிறேன்.

தமிழோவியம் :- பொதுவாக கற்பழிப்பை, ஆண்கள் செய்கின்ற அத்தவறுக்கு பெண்களும் ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் அக்கற்பழிப்பில் பெண்களுக்கும் பங்கு உண்டு என்று உச்சநீதி மன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்லி இருக்கிறது. இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- இதனைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. என்னைப் பொறுத்தவரை ஆண்கள் தான் பெண்களை தங்களது பலத்தை பயன்படுத்தி கற்பழித்து விடுகிறார்கள். அவ்வளவு தான்.

தமிழோவியம் :- நீங்கள் அரசிடம் என்ன எதிர்பார்க்கிறீhகள்?

பதில் :- வாழ்க்கையை நிம்மதியாக ஓட்ட ஒரு அரசாங்க வேலை வேண்டும். நர்ஸ் வேலை கொடுத்தால் எனக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. எனது வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் போய் விடும். அதனை செய்தாலே போதும். கலைஞர் கருணாநிதி அவர்கள் செய்தால் அவருக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்.

|
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |