ஜூலை 27 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : புதிய தமிழகம் கட்சி தலைவர் திரு. கிருஷ்ணசாமி பேட்டி
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

அவருக்கு தலித் மக்களை விட தன்னுடைய நலனே முக்கியமாக நினைப்பவர். அவர் அ.தி.மு.க. வோடு கூட்டணி வைத்திருப்பதால் அமைதியாக இருக்கிறார்.

Krishnaswamyபுதிய தமிழகம் கட்சி நிறுவனர், தலைவர் என அறியப்படுபவர் டாக்டர் கிருஷ்ணசாமி. தமிழகத்தில் தென்மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிகமாக குரல் கொடுத்து வருபவர்.  கலவரக்காரர் என்று பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களால் குற்றம் சாட்டப்படுபவர். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் பலியான 17 தலித்களுக்கு அஞ்சலி  செலுத்த வந்தவரிடம் பதிவு செய்த பேச்சிலிருந்து.........

தமிழோவியம் :- தமிழகத்தில் புதிதாக அமைந்த தி.மு.க. அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- இது ஒரு வரியில்லாத பட்ஜெட் என்ற வகையில் பாராட்டத் தான் வேண்டும். அதே சமயத்தில் விலை உயர்ந்த விலைவாசிகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்த பட்ஜெட்டில் தலித் மக்களுக்கு போதுமான முக்கியத்துவம் இல்லை என்பது தான் உண்மை. தமிழகத்தில் மொத்தம் தலித்களின் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். ஆனால் அவர்களின் கல்வி, பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு 25 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதனை நான் கண்டித்தாக வேண்டும். எனக்கு இது ஏமாற்றம் அளிக்கிறது. மற்றபடி அறிவிக்கப்ட்ட திட்டங்களுக்கு எல்லாம் நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்ற வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை.

தமிழோவியம் :- கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் போட்டியிட்டு தோல்வியை தழுவியதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- சரியான கூட்டணி பலம் இல்லாத காரணத்தால் தான் நாங்கள் தோல்வி அடைந்தோம். அரசியல் கட்சிகளுக்கு தோல்வி, வெற்றி கிடைப்பது இயல்பான ஒன்று தான். மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து பணியாற்றியதில் எங்களுக்கு திருப்தி தான். மாறாக ஒரு குறிப்பிட்ட ஓட்டு வங்கி எங்களுக்கு உண்டு என்பதை இந்தத் தேர்தலில் நிருபித்து இருக்கிறோம். அதே சமயத்தில் ஒரு சில தொகுதிகளில் தி.மு.க. அதி.மு.க. கட்சிகளின்  தோல்விக்கு நாங்கள்; காரணமாக இருந்திருக்கிறோம்.

தமிழோவியம் :- வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் உங்கள் கட்சி கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

பதில் :- கூட்டணி அமைக்க எங்களுக்கு அழைப்பு வந்தால் அதனை பரிசீலனை செய்வோம். வரும் உள்ளாட்சி தேர்தலிலும்  தனித்து போட்டியிடுவோம்.

தமிழோவியம் :- நடிகர் சிவாஜிகணேசன் சிலை திறப்பு விழாவில் நீங்கள் கலந்து கொண்டீர்கள். தி.மு.க. கூட்டணியில் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில் :- தமிழக அரசின் சார்பில் எனக்கு அழைப்பிதழ் வந்தது அதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். மற்றபடி எந்த அரசியலும் இதில் இல்லை.

தமிழோவியம் :- நடிகர் சிவாஜிகணேசன் சிலை திறப்பு விழாவே ஒரு குறிப்பிட்ட ஜாதியின் ஓட்டை குறி வைத்துத் தான் நடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- அவர் மிகச் சிறந்த நடிகர். ஒரு சிறந்த, மூத்த நடிகருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தான் சிலை வைக்கபட்டு இருப்பதாக நான் நினைக்கிறேன். நாளைய தலைமுறையினருக்கு அவரை பற்றித் தெரிய வேண்டும் என்பதற்குத் தான் சிலைகள் வைக்கப்படுகிறது. அதே சமயத்தில் தென்மாவட்டங்களில் இந்திய விடுதலைக்கு பாடுபட்ட சுந்தரலிங்கம், பெட்டிப்பகடை போன்ற தலைவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக முன் வைக்கிறோம். 

தமிழோவியம் :- மாயாவதி பெரும் தலித் அரசியல் சக்தியாக உருவாகி இருக்கிறார். தமிழகத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த கட்சிகள் அப்படி உருவாக முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

பதில் :- தமிழகத்தில் தலித் அமைப்புக்களை ஒன்று சேர்த்தால் பெரும் சக்தியாக வரலாம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். தலித்கள் ஒற்றுமையை இங்குள்ள அரசியல்கட்சிகள் விரும்புவதில்லை. மாறாக அவர்களை சிதறச் செய்யும் வேலைகள் இங்கு அதிகமாக நடக்கிறது. அதே சமயத்தில் வட இந்தியாவில் தலித் அமைப்புக்கள் பலமாக இருக்கின்றன. மாயாவதி  முதல்வராக வர முடிகிறது. இங்கு ஆதிக்க ஜாதிகளை சேர்ந்தவர்கள் தான் வருகிறார்கள். அதனை மாற்ற வேண்டும்.

தமிழோவியம் :- சிறுதாவூர் பகுதியில் தலித் நிலத்தை ஆக்கிரமித்து விட்டார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? ஆனால் முன்னாள் முதல்வர் அது தங்கள் நிலமே இல்லை என்கிறாரே?

பதில் :- தங்கள் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என தலித் மக்கள் பலமுறை புகார் செய்து இருக்கிறார்கள். இன்று அந்தப்பிரச்சினை கிளம்பியவுடன் அது தங்கள் நிலம் இல்லை என்கிறார். 61 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். இந்த நிலம் சசிகலா குடியிருக்கும் பங்களா அருகில் இருப்பதால் அவர்கள் அபகரித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. அப்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் இந்த அரசு முறையான விசாரனை செய்து இந்நிலம் எப்பொழுது யாருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது என தெரிவிக்க வேண்டும். இதற்கான கடமை அரசுக்கு இருக்கிறது. இந்த நிலத்தை மீட்டு உரியவர்களிடம் வழங்க வேண்டும்.

தமிழோவியம் :- இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செய்வதற்கு என்ன இருக்கிறது?

பதில் :- நிலம் அவருக்கு சொந்தம் இல்லை என்றாலும் அவருடன் இருப்பவர்களுக்கு சொந்தமாக இருக்கிறது. டான்சி நிலத்தை அரசிடமே திருப்பிக் கொடுத்தது போல் இதனையும் செய்ய வேண்டும்.

தமிழோவியம் :- இந்த பிரச்சினையில் அப்பகுதியில் பிரபலமாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அமைதியாக இருக்கிறாரே?

பதில் :- அவருக்கு தலித் மக்களை விட தன்னுடைய நலனே முக்கியமாக நினைப்பவர். அவர் அ.தி.மு.க. வோடு கூட்டணி வைத்திருப்பதால் அமைதியாக இருக்கிறார்.

தமிழோவியம் :- தி.மு.க.தலைமையிலான இந்த அரசு தனது பதவிக்காலத்தை முழுமையாக பூர்த்தி செய்யுமா?

பதில் :- தி.மு.க.விற்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும், அதன் கூட்டணிக்கட்சிகளால் இந்த அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என நான் நம்புகிறேன்.

| |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |