ஜூலை 27 06
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : ஜெயா பிளஸ் : புத்தம் புதிய செய்தி சேனல்
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

Jaya TVதமிழகத்தில் புத்தம் புதிய செய்தி சேனலாக ஜெயா டி.வி. குருப்பில் இருந்து ஜெயா பிளஸ் சேனல் ஆகஸ்ட் மாதம் வருகிறது. இந்தச் செய்தி தான் தமிழக பத்திரிக்கையாளர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தச் சேனல் ஆரம்பமாக படு ரகசியமாக, அட்டகாசமாக வேலைகள் நடந்து முடிந்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி ஜெயா டி.வி. பணிபுரியும் பத்திரிக்கையாளர்களிடமும், இந்தச் சேனல் வெற்றிகரமாக தாக்குப் பிடிக்குமா என்று பிற நிறுவன பத்திரிக்கையாளர்களிடமும்  நமது ஒற்றர் படை விசாரித்ததில் கிடைத்த  சுவராய்ச்சியமான தகவல்கள்.

தமிழகத்தில் இன்று வரை சன் டி.வி.யின் ஆதிக்கம் தான் அதிகம். அதிலும் குறிப்பாக செய்தி சேவையில் அவர்களை அடித்துக் கொள்ள யாரும் இல்லை. இந்த துறையில் தனி ராஜியத்தை சன் குருப் செய்து கொண்டு இருக்கிறது. இந்த சாதனைக்கு வேட்டு வைக்க வருகிறது ஜெயா பிளஸ் சேனல். இந்த செய்திச் சேனலை ஆரம்பிக்க அனைத்து வேலைகளும் நடந்து முடிந்து விட்டன. சோதனை ஒளிபரப்பு அகஸ்ட் மாதத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கிறோம். இந்தச் சேனல் வரவே கூடாது என்று முழு முயற்சி செய்தவர்களின் எண்ணத்தை தவிடு பொடியாக்க போகிறோம். இன்று சன் டி.வி.க்கு அனைத்து தாலுகா அளவில் நிருபர்கள் இருக்கிறார்கள். அதனை பயன்படுத்திக் கொண்டு செய்திகளை முன்னதாக சன் டி.வி. கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதே போல ஜெயா டி.வி. சார்பில் அனைத்து தாலுகா அளவில் பத்திரிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டு பணி ஆணை கொடுக்கபட்டு விட்டது. இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் அனைத்து நிருபர்களுக்கும் ஜெயா டி.வி. நிர்வாகம் செல்போன் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம் என்ற சலுகை தான் புதிதாக நியமிக்கப்பட்ட ஜெயா டி.வி. நிருபர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதே போல் சலுகையை சன் நியூஸ் சேனல் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அதன் நிருபர்கள் அனுபவிக்கிறார்கள். முதலில் பி.பி.எல். சேவையை பெற்றவர்கள் இப்பொழுது ஏர்டெல் சேவையை பயன்படுத்துகிறார்கள். எங்களின் ஒரே குறி செய்திப்பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் சன் நியூஸ் சேனலை பதம் பார்க்க வேண்டும் என்பதே என்கிறார் ஜெயா டி.விக்கு செய்தியாளராக பணியாற்றி வரும் கார்த்திக்

பொதுவாக ஆளும்கட்சி செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட எதிர்கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான் பொதுமக்களின் பழக்கம். அதனால் புதிதாக வரும் ஜெயா பிளஸ் சேனலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கத் தான் செய்யும். எங்களுக்கு கிடைத்த தகவல்கள் படி ஜெயா பிளஸ் சேனல் முழு செய்தி சேனலாக நடத்தப்படாது என்றும், அது செய்தி, பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சன் டி.வி.யில் கொடுக்கும் பொய் செய்திகளுக்கு ஜெயா டி.வி. முழுமையாக இல்லாவிட்டாலும் பதிலடி கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. அதே போல் இதிலும் ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொண்டு இருக்கத் தான் போகிறார்கள். மற்றபடி ஒரு செய்தி சேனல் நடத்துவது அவ்வளவு சாதாரண விஷயம். இல்லை. 24 மணி நேரமும், தனது பத்திரிக்கையாளர்களையும், கேமிரா மேன்களையும் அலர்ட்டாக இருக்கச் செய்ய வேண்டும். அவர்கள் சோர்ந்து விடாமல் இருக்க நல்ல சம்பளம் தர வேண்டும். அப்படி எடுக்கப்பபடுகின்ற செய்திகள் எவ்வளவு விரைவில் டெலிகாஸ்ட் செய்ய முடியுமா அதனை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் சன் நியூஸ் சேனல் அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது.

குற்றாலத்தில் ஒரு செய்தி எடுக்கப்பட்டால் அது 3 மணி நேரத்திற்குள் டி.வி.யில் ஒளிபரப்பாகி விடுகிறது. அதனை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர். இதற்கு காரணம் மதுரையில் சன் டி.வியினர் டிவியின் போட்டு இருக்கிறார்கள். குற்றாலத்தில் எடுக்கப்படுகின்ற கேசட்டை, அதன் நிருபர் மதுரைக்கு போகின்ற அரசாங்க, தனியார் பேருந்தின் டிரைவர், அல்லது கண்டக்டரிடம் கொடுத்து அவர்கள் செலவுக்கு 20 ரூபாயும் கொடுத்து விடுவார்கள். டிரைவர் யாருக்கும் தெரியாமல் அந்த கேசட்டை தனது பாக்கெட்டில் வைத்துக் கொள்வார். அந்தப் பேருந்து கிளம்பியவுடன் மதுரை அலுவலகத்திற்கு அந்த பேருந்தின் எண், அது எத்தனை மணிக்கு மதுரைக்கு கிளம்பியது என துள்ளியமாக நிருபர் சொல்லி விடுவார். மதுரை அலுவலகத்தில் இருக்கும் ஆட்கள் மதுரை வரும் நேரம் பார்த்து மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் சென்று, நிருபர் கொடுத்த எண் கொண்ட பஸ் வந்தவுடன் கேசட்டை கேட்டு வாங்கிக் கொண்டு அலுவலகம் விரைவார்கள். அந்த கேசட்டை பெற்றுக் கொண்டு அடுத்த நிமிடத்தில் அதை எடிட் செய்து அப்படியே சேட்டிலைட் வழியாக சென்னைக்கு போகும். சென்னை செய்திப்பிரிவில் இருப்பவர்கள் அந்த சிக்னலில் விசுவல் படத்தை பெற்றுக் கொள்வார்கள். இவை நடந்து முடிக்க முன்றரை மணி நேரம் ஆகும். அதற்குள் விசுவலை அனுப்பி வைத்த நிருபர் விசுவலுக்கான செய்தியை தயார் செய்து எழுதி அதனை சென்னை அலுவலகத்திற்கு பேக்ஸ் செய்து விடுவார். இப்படி விசுவலையும், அதற்கான செய்திகளையும் பெற்றுக் கொண்ட செய்திப்பிரிவினர் அடுத்த நிமிடம் அவை செய்தி வாசிப்பாளர்களால் வாசிக்கச் சொல்லி, செய்தியாக சேனலில் ஒளிபரப்புகிறார்கள். இவை தான் சன் டி.வி.யின் செய்திகள் ஒளிபரப்பாகும் பார்முலா. இதே பார்முலாவை கடைபிடித்தால் தான் ஜெயா பிளஸ் சேனல் வெற்றிகரமாக செய்திகளை முன்னதாக, போட்டியாக தர முடியும். ஜெயா டி.வியில் தற்பொழுது தென் மாவட்ட செய்திகள் மொத்தமாக மதுரைக்கு வந்து அதனை சென்னை செல்லும் விமானத்தில் கொடுத்து விடுவார்கள். அல்லது செய்தி கேசட்டுக்களை கூரியரில் அனுப்பிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தச் செய்தி போய் சேர அதிக நேரம் ஆகும். அதனால் தான் ஜெயா டி.வி.யில் தென் மாவட்ட செய்திகள் தாமதமாக வருவதை நாம் காணலாம். இந்த முறையை அவர்கள் மாற்றியே ஆக வேண்டும். அதே போல் ஆரம்பத்தில் செய்தி சேனலை நடத்த அதிக பணம் செலவாகும். அதற்கென விளம்பர வருவாய் கிடைக்காது. இன்று வரை சன் நியுஸ் சேனல் நஷ்டத்தில் தான் போய்க் கொண்டு இருப்பதாக சொல்கின்றனர். எது எப்படியோ, ஒரு பக்கம் ஆளுங்கட்சி பிரச்சாரமும், மற்றொரு பக்கம் எதிர்கட்சியின் பிரச்சாரமும் இனி தொலைக்காட்சி உள்ள வீடுகளில் 24 மணி நேரமும் ஒலிக்கும் என்கிறார் தினமலர் பத்திரிக்கையின் சிறப்பு நிருபர் ஒருவர். (இவர் பெயரைப் போட்டால் அலுவலகத்தில் தொலைத்து விடுவார்களாம்).

சன் நியூஸ் சேனலுக்கு போட்டியாக ஜெயா பிளஸ் வரப் போவது உறுதியாகிவிட்டது. ஆனால் அது எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று சொல்லும் சன் டி.வியின் நிருபர், நாங்கள் செய்திகளை தரும் அடுத்த கட்டத்திற்கு போகப் போகிறோம் என்கிறார். அதாவது செய்திகளை நேரடியாக ஒளிபரப்புவது. உதாரணமாக பி.பி.சி., சி.என்.என். போன்ற சேனல்களில் எப்படி செய்திகளை நேரடியாக தருகிறார்களோ, அதே போல நாங்களும் இந்தியா முழுவதும் இருந்து தரப் போகிறோம். குறிப்பாக தமிழகத்தில் இந்த முறை விரைவில் அமல்செய்யப்படும் என அலுவலகத்தில் சொல்கிறார்கள். அது தவிர இந்தியாவின் முக்கிய நகரங்களில் சன் தொலைக்காட்சிக்கு நிருபர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஜெயா டிவிக்கு டெல்லியில் மட்டும் தான் இப்பொழுது ஆட்களை போட்டுள்ளனர். ஆனால் எங்களுக்கு இந்தியா முழுவதும் ஆட்கள் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் பொழுது எங்களுக்கு வாசகர்கள் அதிகரிக்கத் தான் செய்வார்கள். மாறாக எங்கள் வாசகர்கள் வேறு எங்கும் போக மாட்டார்கள். சன் நியூஸ் குருப்பில் தமிழகத்தை தென் மண்டலம், கோவை மண்டலம், வட மண்டலம் என்று பல பிரிவுகளாக பிரித்து அதற்கு என்று தலைமை நிருபர்களை போட்டு, அவர்களுக்கு மேல் ஒரு தலைவரை போட்டு அருமையாக போய்க்கொண்டு இருக்கிறது. இது போன்று ஜெயா டி.வியினர் செய்ய முடியாது என்கிறார்.  
 
ஆனால் தனி ராஜ்யம் நடத்தும் செய்தி துறையில் ஜெயா பிளஸ் சேனலின் வருகை உண்மையில் பெரும் மாற்றத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்கிறார்கள் நேர்மையான விமர்சகர்கள்.

| | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   கட்டுரை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |