ஜூலை 28 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
சிறுகதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கவிதை
நூல் அறிமுகம்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
இந்து மதம் என்ன சொல்கிறது ? : ஜாதிகள் ஒழித்து விட்டால் ?
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |
"'பல பாஷைகள் இருப்பதனால்தான் சண்டைகள் வருகின்றன. பாஷைகளையே அழித்துவிட்டு ஊமையாக இருக்கலாம்'"

நமது மதத்தில்தானே இத்தனை ஜாதிகள் இருக்கின்றன ? அதனால்தானே இவ்வளவு சண்டைகளும் ஏற்படுகின்றன ? இந்த ஜாதிகள் ஒழித்து விட்டால் நமக்குள் ஒற்றுமை ஏற்பட்டுவிடும் அல்லவா ? நமது மதத்துக்கு அதுவே பலம் ஆகிவிடும் அல்லவா ?


ஜாதியினால் சண்டை வருவதற்குக் காரணம், அவற்றுக்கிடையே உசத்தி, தாழ்த்தி என்ற பேதம் இருப்பதாக நினைப்பதுதான். வாஸ்தவத்தில் இப்படி ஒரு வேறுபாடு இல்லவே இல்லை. அவரவருடைய பண்பு, பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை இவற்றை ஒட்டித்தான் ஜாதிகள் ஏற்பட்டிருக்கின்றன. பழைய தர்மமான இந்த முறைக்கு ஒரு தலைவலி மாதிரி சண்டை வருகிறது என்பதனால், தலைவலியை நீக்கத் தலையையே வெட்டி விடுவதைப் போல, மூலதர்மத்தையே எடுத்துவிடலாம் என்று சொல்வது அசம்பாவிதம்.

ஒரே ஜாதி உள்ள மேல் நாடுகளில் சண்டையோ சச்சரவோ ஏற்படவில்லையா ? ஒரே ஜாதிமக்கள் உள்ள பகுதிகளில் இன்று மொழி காரணமாகச் சண்டைகள் வரவில்லையா ? பாஷையினால் வரும் சண்டைகளைப் பார்த்தால் ஜாதிச் சண்டை அதற்கு உறைபோடக் காணாது. தமிழுக்கும் தெலுங்குக்கும், ஹிந்திக்கும் ஆங்கிலத்துக்கும் எத்தனை சண்டைகள் ? 'பல பாஷைகள் இருப்பதனால்தான் சண்டைகள் வருகின்றன. பாஷைகளையே அழித்துவிட்டு ஊமையாக இருக்கலாம்' என்று கூறிவிட முடியுமா ?

வாஸ்தவத்தில் தனக்கென ஒரு சமூகப் பொறுப்பும் இல்லாமல், பெயரளவில் வைத்துக் கொண்டிருக்கிற ஜாதிகளை வெறும் சுயாபிமானத்துக்காக வளர்ப்பதில் நியாயம் இல்லை. ஆனால் சமூக நன்மைக்காக, ஒவ்வொரு கூட்டத்தாரிடமும் பாரம்பரியமாக ஒரு காரியத்தைக் கொடுத்து, அவர்களை அந்தப் பொறுப்பைக் கடமையாகச் செய்யும்படி வைப்பதற்குத்தான் ஜாதிகளை ஏற்படுத்தினார்கள். இந்தக் கண்ணோட்டத்துடன் ஏற்றுக் கொண்டால் ஜாதிகள் நமக்குள் சண்டையை ஏற்படுத்தாது.

- 'தெய்வத்தின் குரல்' நூலிலிருந்து

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |