வெகு நாட்களுக்கு முன்பு ஒரு கிராமத்தில் கிருஷ்ணன் என்ற விவசாயி உழுது பயிரிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு சுசீலா என்ற அழகிய பெண் ஒருத்தி இருந்தாள். பார்வைக்கு மிக அழகானவளாக இருந்த அவளிடம் பெயருக்கேற்ப அருமையான குணமும் இருந்தது.
கிருஷ்ணன் மகளுடைய புகழ் எல்லா இடங்களிலும் பரவியது. அவளை மணந்துகொள்ள பணவசதி படைத்த பல பிரபுக்கள் விரும்பி அவள் தந்தையை நாடி வந்தார்கள். அவர்களிடம் குணம் இல்லை. குணவானான மக்கள் பலரும் அவளைக் கரம்பற்ற எண்ணி வந்தார்கள். ஆனால் அவர்களிடம் புத்திசாலித்தனம் இல்லை. புத்திசாலிகள் பலர் அவளை மணம் செய்துகொள்ள விரும்பினார்கள். அவர்களிடம் உடல் ஆரோக்கியம் இல்லை. எல்லாவிதத்திலும் தகுந்த மருமகனைத் தேர்ந்து எடுப்பதே கிருஷ்ணனுக்குப் பெருங் கவலையாகப் போயிற்று!!
தேசம் முழுவதும் சுசீலாவின் அழகைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருந்தார்கள். அதனால் ஆயிரக்கணக்கான வாலிபர்கள் கிருஷ்ணனிடம் பெண் கேட்டு வந்ததால் குழப்பமடைந்த கிருஷ்ணன் கடைசியில் அவர்களில் மூன்று பேரைத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவர்களில் ஒருவரைத் தேர்வு செய்ய அவரால் இயலவில்லை. எனவே ஊர் பெரியமனிதர்களின் உதவியை நாடினார்.
" நீங்கள் மூன்று பேரும் மூன்று மாதங்கள் கழித்து வந்து பஞ்சாயத்தாரைப் பாருங்கள். அதற்குள் நீங்கள் மிக நல்ல காரியம் ஒன்றைச் செய்திருக்க வேண்டும். அதை எங்களிடம் வந்து சொல்லிங்கள். யாருடையது மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறதோ அந்த வாலிபனுக்கே சுசீலா மாலையிடுவாள்!"
என்று தீர்ப்பு கூறினார்கள் பஞ்சாயத்தார்.
அந்த மூவரும் த்ரும்பிப் போய்விட்டார்கள். மூன்று மாதங்களும் கழிந்தன. மறுபடியும் பஞ்சாயத்து கூடியது. மூன்று வாலிபர்களும் வந்து அமர்ந்தனர்.
அவர்களுக்கு எதிரே, அவர்களில் ஒருவருக்கு மாலையிடத் தயாராக கையில் மாலையுடன் சுசீலா அமர்ந்திருந்தாள். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த நல்ல காரியத்தைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்கள்.
முதல் வாலிபன் சொன்னான்: " என்னுடைய தந்தை போன வருடம் இறந்து போய்விட்டார். அவர் எழுதி வைத்திருந்த கணக்குகளை நான் சமீபத்தில்தான் பார்த்தேன். அதில் அவருடைய நண்பர் ஒருவரிடம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கணக்குப் பதிவாகி இருந்தது. அந்த நண்பரும் காலமாகிவிட்டார். அவருடைய மகன் இருந்த இடம் தெரியவில்லை. அவனை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அந்தப் பணத்தை அவனிடம் சேர்த்துவிட்டேன். "
இரண்டாவது வாலிபன் சொன்னான்: " என்னுடைய ஊருக்கு அருகில் ஒரு காடு இருக்கிறது. ஒருநாள் நான் அங்கு குதிரைமீது அமர்ந்து வேட்¨டயாடப் போய்க் கொண்டிருந்தேன். காட்டின் நடுவே ஒரு பெண் கதறியழும் சத்தம் கேட்டது. நான்கு முரடர்கள் அந்தப் பெண்ணை பலவந்தமாகத் தூக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டி, அவர்களைத் துரத்திவிட்டு, நான் அந்தப் பெண்ணைக் குதிரையின்
மேல் ஏற்றிக் கொண்டு வந்து பத்திரமான இடத்தில் சேர்பித்தேன்!"
மூன்றாவது வாலிபன் சொன்னான்: " ஒரு நாள் என் ஊருக்கு அருகில் உள்ள மலைப் பகுதிக்குப் போயிருந்தேன். மலை முகட்டில் ஒரு பாறையின் ஓரமாக ஒரு மனிதன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். நான் கிட்டே போய் பார்த்தேன். அவன் என்னுடைய பரம வைரி. பலவாறாகவும் அவன் என்னைக் கொடுமைப் படுத்தி இருக்கிறான். நான் பார்த்துக்கொண்டிருந்த போதே அவன் புரண்டு படுத்தான். சில வினாடிகள் நான் எதுவும் செய்ய¡மல் விட்டிருந்தாலே போதும்.. அவன் அந்த மலைமுகட்டிலிருந்து விழுந்து தூள் தூளாகியிருப்பான். ஆனால், நான் அவனை மெதுவாக எழுப்பி, ¨கயைப் பற்றிக்கொண்டுவந்து பத்திரமான இடத்தில் சேர்த்துவிட்டுத் திரும்ப்னேன்!".
பஞ்சாயத்தார் ஒன்று கூடிப் பேசி முடிவு சொன்னார்கள். அவர்களுடையத் தலைவர் கிருஷ்ணனை அழைத்து தங்கள் முடிவைச் சொன்னார்.
"முதல் வாலிபன் மிக நல்ல காரியம் செய்திருக்கிறான். நம்பிக்கைத் துரோகம் நேராமல் தடுத்து உரிய பணத்தை உரியவரிடம் சேர்த்து தந்தையின் பெயரைக் காப்பாற்றி இருக்கிறான். ஆனால் அவன் செய்தது நல்ல காரியமானாலும் கடமைதான். "
"இரண்டாவது வாலிபன் துணிச்சலுடன் மிக நல்ல காரியம் செய்திருக்கிறான். அவனுடைய உயிருக்கே ஆபத்து நேர்ந்த்ருக்கக்கூடும். அதயும் பெ¡ருட்படுத்தாது, விரைந்து சென்று அந்தப் பெண்ணின் கற்பைக் காப்பாற்றி இருக்கிறான். அவன் செய்தது நல்ல காரியம் தான். ஆனாலும் அதை ஒரு நல்ல பண்பு என்று மட்டும்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது. "
"மூன்றாவது வாலிபன் செய்த காரியம் மகத்தானது. நல்ல மனிதன் கூடத் தன்னைக் கெடுத்தவர்களைத் தண்டிக்கத் தயங்கமாட்டான். இந்த வாலிபன் அப்படித் தண்டிக்க வேண்டிய அவசியமே இல்லை. சும்மா இருந்திருந்தாலே போதும். அவனுடைய பகைவன் அழிந்திருப்பான். ஆனால் அந்த வாலிபன் பகைவனுக்கு அருள் புரிந்து உதவி இருக்கிறான். இது மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டது. தெய்வீகமானது. இதையே நாங்கள் சிறந்த பண்ப¡கக் கருதுகிறோம்!!" என்று கூறி முடித்தார்.
சுசீலாவின் மணமாலையும் அந்த இளைஞனுக்கே கிடைத்தது.
பொதுவாக நல்லவனாக இருப்பது மனிதப் பண்பு. மிகவும் நல்லவனாக மாறும்போது சாதாரண மனிதனும் தெய்வப்பிறவியாக மாறிவிடுகிறான்.
|