பாசிப் பருப்பு பூரி
தேவையானவை
பாசிப் பருப்பு - 1 கப் கோதுமை மாவு - 2 கப் மிளகாய்பொடி - 2 டீஸ்பூன் எண்னெய் - பொரித்தெடுக்கத் தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
செய்முறை
பாசிப்பருப்பை முதலில் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பருப்பை குழைய வேகவைத்துக் கொள்ளுங்கள். நன்கு மசித்த பருப்புடன் கோதுமை மாவு, உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளுங்கள். இதை மெல்லிய பூரியாக இட்டு, மிதமான தீயில் காய்ந்த எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். (குறிப்பு : அடுப்பு மிதமாக எரியவேண்டும். இல்லையென்றால் எண்ணெய் மிகவும் சூடாகி, பூரி நிறம் மற்றும் சுவை மாறிவிடும்.)
வெள்ளரிக்காய் அவியல் அல்லது தயிர் பச்சடி அல்லது தேங்காய் சட்னியுடன் சுவைக்க பாசிப்பருப்பு பூரி அருமையாக இருக்கும்.
வெள்ளரிக்காய் அவியல்
தேவையானவை
வெள்ளரிக்காய் - அரைக் கிலோ உருளைக் கிழங்கு - 50 கிராம் வாழைக்காய் - 1 பீன்ஸ் - 50 கிராம் கருணைக் கிழங்கு - 50 கிராம் புடலங்காய் - 50 கிராம் முருங்கைக்காய் - 2 கத்திரிக்காய் - 2 பச்சை மிளகாய் - 5 மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 2 சிட்டிகை கடுகு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு தயிர் - 1 கப் தேங்காய்த் துருவல் - 5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் - 1 கரண்டி நெய் - 50 கிராம் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி தண்னீர் விட்டு கழுவி வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய்த் துருவல், சீரகம் ஆகியவற்றை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு அரைத்து வைத்த விழுதினைப் போட்டு கலக்கி அத்துடன் மிளகாய்பொடி, மஞ்சள்பொடி, தேவையான உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் நெய்விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலையை போட்டு பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு நன்றாக வதக்குங்கள். வேகவைத்த காய்கறிகளை அதில் கொட்டி கொதிக்க விடுங்கள்.
நன்றாக கொதித்து சுண்டியதும் 1 கப் தயிர் விட்டு கலக்கி ஒரு கொதி வந்ததும் 1 கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு இறக்குங்கள். வெள்ளரிக்காய் அவியல் சப்பாத்தி மற்றும் பூரி, சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
|