Tamiloviam
ஜூலை 30 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
சிறுகதை : டிப்ளோமெடிக்காய் ஒரு முத்தம் - ஒரு நிமிடக்கதை
- "வினையூக்கி" செல்வா
  Printable version | URL |

கீர்த்தனாவிடம் தொலைபேசியில் உரையாடும்பொழுதெல்லாம் நான் அதிகம் உபயோகப்படுத்தும் வார்த்தை "டிப்ளோமெடிக்". இந்த சங்கேத வார்த்தைக்கு அர்த்தம் என்னைச் சுற்றி நண்பர்கள் இருக்கின்றனர், அதனால் இயல்பாக உரையாட முடியாது என்பதுதான். வெளிநாட்டில் படிக்கும்போது சிக்கனமாக இருக்கவேண்டும் என்று 15 க்கு 15 அடி அறையில் நான்கு பேர் தங்கி இருப்பதனால் வரும் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதற்காகவே அர்த்த ராத்திரியில் எழுந்து இந்தியாவில் தூங்கிக்கொண்டிருக்கும் கீர்த்தனாவை எழுப்பி, பேசுவது உண்டு, அவள் எரிந்து விழுந்தாலும் கூட.

சுவீடன் நேரம் இரவு இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. கீர்த்தனாவின் தொலைபேசி அழைப்பிற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். சனி,ஞாயிற்று கிழமைகளில் வீட்டில் இருந்துவிட்டு திங்கட் கிழமை அதிகாலைப் பேருந்தைப் பிடித்து சென்னைக்கு வரும் வழியில் என்னிடம் வார இறுதிகளில் நடந்தவைகளை சொல்வது அவள் வழக்கம்.

தூங்காமல் மானாட மயிலாட இணைய தளம் ஒன்றில் பார்த்துக்கொண்டிருந்த அறை நண்பன் கிருஷ்ணமூர்த்தி தயங்கியபடியே என்னிடம் வந்து,

"கார்த்தி, நீ கீர்த்தனாகிட்ட பேசுறப்ப அடிக்கடி டிப்ளோமேடிக் யூஸ் பண்றியே அதோட அர்த்தம் என்ன?"

"டேய் சிபிஎஸ்ஈ ஸ்கூல்ல படிச்சிட்டு வந்த உனக்கு அர்த்தம் தெரியுதா? என்ன நக்கலா!!"

"நான் லிட்டரல் மீனிங் கேட்கல, உங்க ரெண்டு பேருக்குள் அது ஏதாவது கோட் வேர்டா!! கோட் வேர்டுக்கு என்ன அர்த்தம்"

"நத்திங், ரூம்ல நிறைய பேரு இருக்காங்க, அம்மு,செல்லம்,புஜ்ஜிக்குட்டின்னு எல்லாம் பேச முடியாது, டிப்ளோமெடிக்காத்தான் பேசுவேன் அப்படிங்கிறது... சரி நீ எதுக்கு கேட்டே!! நீ கூட அன்னக்கி டிப்ளோமெடிக்குன்னு உன் ஆளு உமாகிட்ட சொல்லிட்டு இருந்தியேடா"

கொஞ்சம் வழிதல் முகத்தோடு "எங்களுக்குள்ள டிப்ளோமெடிக்னா  கிஸ் னு அர்த்தம்" என்றான்.

"ராஜராஜ சோழன் நான் எனை ஆளும் காதல்" என கைபேசி மணி அடித்தது எடுத்து, கிருஷ்ணமூர்த்தி அறையில் இருப்பதால் சன்னமான குரலில் கீர்த்தனாவுடன் பேச ஆரம்பித்தேன்.

"அம்மு, ரெண்டு நாள் ரொம்ப மிஸ் பண்ணேன்"

"அப்படியா!!! இந்தா சாட்டர்டே மர்னிங் பியானோ, இது லஞ்சுக்கு, இது டின்னர் பியானோ" என தொடர்ந்து தொலைபேசியில் முத்தங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தாள்.

 

oooOooo
                         
 
"வினையூக்கி" செல்வா அவர்களின் இதர படைப்புகள்.   சிறுகதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |