Tamiloviam
ஜூலை 31 2008
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : தொடரும் குண்டு வெடிப்புகள்.. .. ..
- சிதம்பரம் அருணாசலம்
  Printable version | URL |

அரசியல் ஆதாயம்; கருதி,
பின்விளைவுகள்
பற்றிய சிந்தனை எதுவுமின்றி,
பாராளுமன்றத்தை
நிர்மூலமாக்க நினைத்த
பயங்கரவாதிகளுக்குக்
கருணை காட்ட எண்ணுவது – அதன்
பாதுகாப்பில் உயிர்நீத்தவர்களைத்
துச்சமாக மதிக்கும்
துர்நிலைக்குச் சமமாகும்;.

வாக்குகளைச் சேர்ப்பதற்கு
வாடிக்கையாய்ப் போன இவ்வழிகளை
சம்பந்தப்பட்ட பிரிவினர் கூடச்
சம்மதித்து ஏற்க மாட்டார்கள்.

மோசத்தைச் சுமக்கும் சுயலாபத்திற்காய்
தேசத்தை அடகுவைக்க
முடிவெடுப்பது தொடரும் வரை
வெடிகுண்டுகள் நாளும் உயிர்பெறும்.
வேதனைகள் தினம் முளைவிடும்.

oooOooo
                         
 
சிதம்பரம் அருணாசலம் அவர்களின் இதர படைப்புகள்.   கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.
உங்கள் கருத்து  
Jeyakumar
7/29/2008 , 3:12:49 AM

 [Comment url]
சரியாக சொல்லி இருக்கிரீர்கள் அருனாச்சலம். கொடுமை என்னவென்றால் குற்றவாளிகளை பாதுகாப்பதன்மூலம் இஸ்லாமியர்களுக்கு சாதகமாய் இருப்பதுபொன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க நினைக்கிறார்கள். ஆனால் அப்படி செய்வதன்மூலம் அவர்களை குற்றப்பரம்பரையினர்போல ஆக்குகிறார்கள். இதை இஸ்லாமிய சகோதரர்கள் உனருதல்வேன்டும். அப்படி செய்யும் அரசியல் கட்சிகளை ஆதரித்தல் கூடாது. அன்புடன், ஜெயக்குமார்
   
Elango
7/29/2008 , 5:36:37 AM

 [Comment url]
மிகவும் வேதனையான விஷயம். எப்படித்தான் மனது வருகிறதோ இந்த படுபாவிகளுக்கு. இவர்களை இவர்கள் வணங்கும் கடவுள் கூட மன்னிக்க மாட்டார்.
   
அ.பொ.ஜெ.பூங்கதிர்வேல்
8/3/2008 , 2:30:25 PM

 [Comment url]
இப்பொதெல்லம் அவ்வபோது தொடைகளில் கிள்ளிப்பார்த்துகொள்ள வேண்டியிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பயங்கரவாதம். கொள்கையின் அடிப்படையில் குண்டுகள் வீசப்படின் மக்களின் ஆதரவே இன்னேரம் மகேசன்களை ஆட்டிப்படைத்திருக்கும். ஆனால் இந்தப்பயங்கரவாதம்
கொல்வதை கொள்கையாகக் கொண்டுள்ளது. மனித மாசுகளாய் அலையும் இந்த கொட்டூர பிறப்புகளை, பிறப்புக் களைகளை எந்த வகையிலும் மன்னிக்கவோ, மறந்தியல்பாய் நடவவோ நாம் ஜடங்களல்ல என்பதை அவர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்தபட்ச தண்டனைகளே உணர்த்த வேண்டும். நம் நாடு இந்த நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்க தண்டனைகள் தரமானதாக இருக்க வேண்டும்.இல்லையெனில் இந்தியாவில் என்றும் தொடைகிள்ளுக்காயங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். அதிகம் சொல்ல விரும்பவில்லை " ஒரு பயங்கரவாதி உண்மயான இசுலாமியராக இருக்கமுடியாது. ஒரு உண்மயான இசுலாமியருக்கு இதைக்கண்டால் பொருக்க முடியாது"
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |