|
சென்ற வாரம்தான் திருவிளையாடல் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்தது என்று சொன்னோம், இந்த வாரம் அதை நிறுத்தியே விட்டார்கள். நெடுந்தொடர் 64 திருவிளையாடல்கள் என்று தொடங்கி, முடிவில் 4 திருவிளையாடல்களோடு நிறுத்திவிட்டார்கள். ஞாயிறு அன்று வரும் சக்தி கொடுவும் இந்த வாரத்தோடு நின்றுவிட்டது. உம்மாச்சிக்கும் சன்னுக்கும் மறுபடியும் டூ வா ? ராமாயணம் நின்றால் தெரிந்துவிடும்.
விஜய் டிவியில் ஜோடி நம். 1 - சீசன் 3, அசத்தலாக தொடங்கியிருக்கிறது. மஸ்தானா மஸ்தானா சீசன் 1, 2 ல் முதல் பரிசு பெற்ற மஹேந்திரன், யுவன்ராஜ் நேத்ரன், அருணாதேவி ஆகியோர் இதில் பங்குபெறுகிறார்கள். முதல் எபிசோடில் விஜய் டிவியில் பங்கு பெறுவதால் அவர்கள் நாட்டியம் உலகம் முழுவதும் பிரபலமாகும் என்று சோப் வைத்தார்கள். (சன் டிவியில் வந்த போது இதே டயலாக் சொன்னார்கள் என்று மறுபடியும் சொல்ல வேண்டுமா என்ன ?)
காப்பி வித் அனுவில் கடந்த வாரம் ஒய்.ஜி மகேந்திரா சிறப்பு விருந்தினராக வந்தார். நாடகங்களில் அவருடைய ஜோக் சுமார் என்றாலும், நிகழ்ச்சியில் அவர் பேசியது நன்றாக இருந்தது. கூட அவரது தாயார் மற்றும் பிள்ளைகள் வந்திருந்தனர். வழக்கம் போல் அனு கலகலப்பாக கேள்விகளை கேட்டு சிண்டு முடிந்தார். மகேந்திராவின் தாயார் மற்றும் அவரது பிள்ளைகள் இருவரும் தந்தையை ஒரு சிறந்த நடிகர் என்று சொல்லியதுதான் சற்று நெருடலாக இருந்தது.
ஒய்.ஜி சார் நீங்க எப்ப சிறப்பா நடிச்சீங்க ?

|