ஆகஸ்ட் 03 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : குளிர்பான சர்ச்சை
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

3 ஆண்டுகளுக்கு முன்பாக பூதாகாரமாக வெடித்த கோக், பெப்சி முதலிய குளிர் பானங்களில் நச்சுப்பொருட்கள் கலந்த விவகாரம் தற்போது மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த குளிர் பானங்களில் உள்ள நச்சுப்பொருட்களின் அளவு முன்பை விட பலமடங்கு அதிகரித்து உள்ளதாக டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pepsi Coke2003 ஆம் ஆண்டு இதே நிறுவனம் மேற்கூறிய குளிர்பானங்களில் நச்சுத்தன்மை அதிகரித்துக் காணப்படுவதாக அறிக்கை வெளியிட்டும் கூட அப்போதிருந்த அரசு பெரிய அளவில் நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளவில்லை. நாடு முழுவதும் ஆங்காங்கே அணிதிரண்டு கூடி, இந்த குளிர்பானங்கள் அடங்கிய பாட்டில்களை வீதியில் போட்டு உடைத்து போஸ் கொடுத்ததைத் தவிர நம் நாட்டு சமூக ஆர்வலர்களும் அரசியல்வாதிகளும் வேறு ஒன்றும் செய்யவில்லை. மக்கள் அனைவரும் இத்தகைய குளிர்பான வகைகளை புறக்கணிக்க வேண்டும் - உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு ஆதரவு தரவேண்டும் என்று பல பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதியும் மக்கள் மத்தியில் பெரிய விழிப்புணர்வு தோன்றியதாகத் தெரியவில்லை. அவ்வாறு தோன்றியிருந்தால் கோக், பெப்சி போன்ற கம்பெனிகள் எப்போதோ தங்கள் நாடுகளுக்கு மூட்டை கட்டியிருப்பார்கள். மாறாக நம் மக்கள் அனைவரும் சேர்ந்து இந்தக் கம்பெனிகளின் லாபத்தை பலமடங்காக உயர்த்தித் தந்துள்ளார்கள்.

வருடத்திற்கு கிட்டத்தட்ட 7500 கோடி ரூபாய் சுளையாக சம்பாதிக்கும் இந்நிறுவனங்கள் எந்த அரசையும் கவிழ்கும் ஆற்றல் பெற்றவை என்றும் அதனால் தான் ஆளும் மத்திய அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு இந்நிறுவன தயாரிப்புகளை முடக்க சுணக்கம் காட்டுகிறது என்று ஒரு கருத்து நிலவிவருகிறது. அதை உறுதி செய்யும் விதமாக "நாங்கள் ஒன்றும் குளிர்பானங்களில் நச்சுப்பொருட்களைக் கலக்கவில்லை. இக்குளிர்பானங்களைத் தயாரிக்க நாங்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரில் தான் நச்சுத்தன்மை உள்ளது.. ஆகவே நீரில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் வழியைப் பாருங்கள்." என்று அறிக்கை விடுகிறார்கள். ஆனால் இவர்கள் மேலை நாடுகளுக்காகத் தயாரிக்கும் குளிர்பானங்களில் இவ்வாறு நச்சுத்தன்மையைக் கலக்க விடுவதே இல்லை.. படு சுத்தமாக இருக்கும் அந்த தயாரிப்புகள். இந்தியா என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம் தான்.

மத்திய அரசு மவுனம் சாதிக்கும் இந்நிலையில் இப்பிரச்சனைக்கான முடிவு மக்கள் கையில்தான் உள்ளது. நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் எல்லாம் இக்குளிர்பானங்களுக்கு விளம்பரம் செய்வதைப் பார்த்துவிட்டு நீங்கள் இதை வாங்குபவரானால் உண்மையை உணருங்கள். அந்த நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களே இந்தக் குளிர்பானங்களைப் பருக மாட்டார்கள் - அவை உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று. விளம்பரங்களைக் கண்டு மயங்குவதிலிருந்து மக்கள் சற்று விலகி நின்றால் உண்மையை உணர முடியும்.

மக்களே.. ஆள்பவர்களுக்கு தங்களைப் பற்றி மட்டுமே கவலை இருக்கும். மக்களைப் பற்றி கொஞ்சமும் நினைக்கமாட்டார்கள் அவர்கள். இது எல்லா கட்சிக்கும் பொருந்தும். விளம்பரப்படங்களில் நடிப்பவர்களுக்கு காசு தான் குறியாக இருக்கும். ஆனால் இந்தத் தயாரிப்புகளை காசு போட்டு வாங்கி குடித்துவிட்டு உடல் நலனைக் கெடுத்துக்கொள்ளும் நமக்குத் தான் இருக்க வேண்டும் நம் உடல் ஆரோக்கியம் பற்றிய அக்கறை. உங்கள் பார்வையை இளநீர், மோர், பதநீர் போன்ற உள்நாட்டுத் தயாரிப்புகளின் மீது கொஞ்சம் திருப்புங்கள். நம் ஆரோக்கியம் மற்றும் நாட்டுப் பொருளாதாரம் இரண்டுக்கும் அதுதான் நல்லது.

|
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |