Tamiloviam
ஆகஸ்ட் 06 2009
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
திரைவிமர்சனம் : அச்சமுண்டு அச்சமுண்டு
- காயத்ரி [gayathrivenkat2004@yahoo.com]
  Printable version | URL |

கேமிராவைப் பார்த்து பக்கம் பக்கமாக நாயகன் பேசும் பஞ்ச் வசனங்கள் இல்லை. ஏழு,எட்டு டாடா சுமோக்களில் வந்திறங்கும் எதிரிகளும் அடியாட்களும் இல்லை. ஹீரோ வில்லனைப் பழி வாங்க காதுகள் கிழிய ஆர்ப்பரிக்கும் வசனங்கள், நம்ப முடியாத அடிதடி காட்சிகளோ இல்லை. அரைகுறை ஆடைகளுடன் கதாநாயகனுடன் ஆடும் பெண்கள் இல்லை. அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படம் மொத்தமே ஒன்றரை மணி நேரம் தான். படம் வெளிவருவதற்கு முன்பே நியுஜெர்சியிலேயே முழுக்க முழுக்க படமாக்கியதற்காக "ஹோம் க்ரோன்" விருதை வாங்கிய படம். ரெட் ஒன் கேமிராவில் படம் பிடித்த முதல் தமிழ் திரைப்படம்.

Sneha Prasannaஅமெரிக்காவின் நியூஜெர்சியே படத்தின் கதைக்களன். பிரசன்னா-சினேகா தங்கள் ஆறு வயது மகளுடன் நியூஜெர்சியின் புறநகர் பகுதியில் உள்ள தனிவீட்டில் வசித்து வருகிறார்கள். ஆள் அரவமில்லாத வீட்டில் சினேகாவை மர்ம நபரின் நடமாட்டம் அச்சுறுத்துகிறது. பிரசன்னாவிடம் இதைச் சொன்னபே[து சினேகாவின் பிரமை என்று மறுக்கிற[ர். சினேகா சொல்வது போல் ஏதோ மர்ம மனிதன் தங்கள் இல்லத்தை அணுகுவதைப் பிரசன்னாவும் கண்டறிய பிரசன்னாவிற்கு மட்டுமல்லாமல் படம் பார்க்கும் அனைவரின் மனங்களிலும் அச்சமுண்டு அச்சமுண்டு. மர்ம மனிதன் ஏன் வருகிற[ன் ? அவனது தேவை என்ன ? அவனைக் கண்டுபிடித்து பிரச்சினைகளிலிருந்து பிரசன்னா-சினேகா தம்பதியர் மீண்டார்களா ? என்பதைத் அதிக திகிலில்லாமல் தந்திருக்கிறார் இயக்குனர் அருண். இவர் அறிமுக இயக்குனர். இதற்கு முன்பு பல குறும்படங்களை இயக்கியவர். பல காலங்கள் யோசித்து தகவல்கள் சேகரித்து செதுக்கி செதுக்கி படத்தை எடுத்திருக்கிறார். திரைப்படத்தில் முதலீடு செய்த பணத்தை எப்படி எடுக்க என்று யோசிக்காமல் குழந்தைகளுக்கான பாலியல் வன்முறையைப் பற்றிய திரைப்படம் எடுத்ததற்காகவே இவரைப் பாராட்ட வேண்டும்.

படத்திற்குப் படம் பிரசன்னாவின் நடிப்பில் மெருகேறியிருக்கிறது. சினேகா அழகான மனைவியாக-அன்பான தாயாக-பெ[றுப்பான இல்லத்தரசியாக வாழ்ந்திருக்கிற[ர். பிரசன்னா-சினேகா நடிப்பில் யதார்த்தமும் அன்னியோன்னியமும் இழையோடுகிறது. வெவளி நாடு வாழ் இந்தியர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களது மகள் அக்ஷயா தினேஷும் வில்லனாக அற்புதமான நடிப்பை அள்ளி வழங்கியிருக்கும் ஜான் ஷேவும் பாராட்டுக்களுக்கு உரியவர்கள். படத்தில் நடித்திருக்கும் பிற வெவளிநாட்டு வாழ் இந்தியர்களும் சில காட்சிகளிலே வந்தாலும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் முதல் பகுதி தொய்வாக இருந்தாலும் படத்தின் கதையும் காட்சி அமைப்புகளும் படத்திற்கு நிறைவைச் சேர்க்கிறது. 

திரைப்படத்தில் நடித்திருக்கும் யாரும் தனியாக டப்பிங் பேசாமல் அந்தந்த காட்சிகளிலே இயல்பாக வசனங்கள் பேசி, படம் பிடித்திருப்பது ஆச்சர்யமூட்டுகிறது. ரெட் ஒன் கேமிராவில் காட்சிகள் அவ்வளவு துல்லியம், அவ்வளவு தத்ரூபம். க்ரிஸ் பிரலிக்கின் ஒளிப்பதிவு அற்புதம். கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை படத்திற்குப் பலம் என்றால் படத்தில் வரும் இரண்டு பாடல்களும் படத்தின் பலவீனம். படத்தில் situation காமெடி கூட இல்லாதது படத்திற்கு சற்று பின்னடைவே.

ஒவ்வெரு பெற்றோரும் பார்க்க வேண்டிய தரமான படம் என்ற திரைப்படம் குறித்த டிரைலர் மிகையல்ல. யாரும் தொடாத கதையைத் தேர்வு செய்து, உலகம் முழுதும் உள்ள குழந்தைகளுக்கான பாலியல் தாக்குதல்களை விழிப்புணர்வுச்செய்தியாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் இயக்குனருக்கு சபாஷ்.

ஆண் குழந்தைகள் என்றாலும் சரி பெண் குழந்தைகள் என்றாலும் சரி மிகக் கவனமாக வளர்க்க வேண்டும் என்பது இப்படத்தின் மூலம் கிடைக்கும் முக்கியச் செய்தி. பாலியல் வன்முறைகளில் உலக நாடுகளில் இந்தியா முன்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கும் புள்ளி விவரம் கவலைக்குள்ளாக்குகிறது. சட்டங்கள் கடுமையாக்கப்படுவது ஒன்றே குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு விடிவு.

oooOooo
                         
 
காயத்ரி அவர்களின் இதர படைப்புகள்.   திரைவிமர்சனம் பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |