ஆகஸ்ட் 10 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : தேவை ஒரு முடிவு
- கணேஷ் சந்திரா [ganesh@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

தீவிரவாதிகள் ஊடுருவல், சுதந்திர தின விழாவில் குண்டு வைக்க சதி, என்று வருடம்தோறும் செய்திகள் மற்றும் சுதந்திரமாய் நிற்க, நடக்க கூட முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடு.

மேலும் 'தீவிரவாதிகளால் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது', 'எங்கள் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்க  முடியாது' என கடந்த 59 ஆண்டுகளாக கேட்டு கேட்டு அலுத்துப் போன சுதந்திரன தின சிறப்பு உரை. பிரதமர்கள் மாறினாலும், உரையில் பெரிதாக மாற்றம் ஒன்றும்மில்லை. காஷ்மீர் பிரச்சனை என்னவென்று தெரியும் ஆனால் முடிவு எடுப்பதில்தான் அனைவருக்கும் தயக்கம்.

1948ல் பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்த போது, சர்தார் வல்லபாய் படேல் சொன்னது போல் ஒன்று அவர்களை அடித்து விரட்டி இருக்க வேண்டும், அல்லது ராஜாஜி சொன்னது போல் காஷ்மீரை அவர்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தை என 59 ஆண்டுகாலமாக பேசி, சாதித்தது ஒன்று இல்லை. பெற்ற சுதந்திரத்தை கூட நிம்மதியாக கொண்டாட முடியாத நிலை.

அமெரிக்கா, இஸ்ரேல் போல் நாமாக சண்டை போட்டு எதிராளியை அடக்கதான் முடியவில்லை. உயிர் மற்றும் பொருளாதார இழப்பு, ஆட்சி போய்விடும் என பல விதமான சிக்கல்கள்.
அதே சமயம் காஷ்மீரை விட்டு கொடுக்கவும் முடியவில்லை. எதிர்கட்சிகள், ஆட்சி என பதவி பயம். நம் நாட்டில் பல பிரச்சனைகள் இருந்தாலும் பெரிய தலைவலியாக இருப்பது இந்த காஷ்மீர் பிரச்சனையே. ஆக இதே நிலை நீடித்தால் 59 ஆண்டுகள் என்ன 100 ஆண்டுகள் ஆனாலும் நிம்மதியான ஒரு சுதந்திர தினம் கொண்டாட இயலாது. நிம்மதியான ஒரு தினத்தை கூட கழிக்க முடியாது.

இதற்கு ஒரே தீர்வாக, நாட்டில் அனைத்து கட்சிகளும் இதில் அரசியல் லாபம் பாராமல், அமைதிக்கும் அதிகப்படியான பாதுகாப்பிற்காக செலவு செய்யப்படும் பொருளாதார விரயதுக்கும் முற்று புள்ளிவைக்க ஒற்றுமையாய் முடிவு காண முன் வர வேண்டும். சமாதானமோ, சண்டையோ ஒற்றுமையாய் இருந்து அதை செயல்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக இருந்தாலே இது போன்று நாட்டை அச்சுறுத்தும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும்.

 

 

 

 

| |
oooOooo
கணேஷ் சந்திரா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |