இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
பாலிவுட்
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
புதிய தொடர்
கவிதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
கட்டுரை
அமெரிக்க மேட்டர்ஸ்
திரைவிமர்சனம்
அறிவிப்பு
தொடர்கள்
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : பிள்ளையார்சுழி
- கோமதி சங்கர் [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

ஏதாவது எழுத வேண்டும்
எனக்குள் வாழும் எனக்காக.

இப்படித் தோன்றும் போது
கைகள் பேனா தேடும்
கண்கள் காகிதம் தேடும்
மூளை என் எழுத்துக்கு
முகவரி தேடும்.
இவற்றில் ஏதோ ஒன்று கிடைக்காததால்
எத்தனையோ எண்ணங்கள்
மொட்டிலிலேயே பட்டுப் போயிருக்கின்றன.

இன்று
எல்லாம் கிடைத்து விட்டது
ஏதாவது எழுத வேண்டும் .

மழலைச் சிரிப்பா ! மனிதச் செருக்கா !
மழைநாள் கிறக்கமா ! மத்தியான உறக்கமா !
உயிர்ப்பா ! தவிப்பா !
கனவா ! திட்டமா !
தாயா ! தமிழா !
கடவுளா ! கலையா !
நிகழ்காலமா ! எதிர்காலமா !
மரபுக் கவிதையா ! புதுக் கவிதையா !
எதை எழுத ?


ஏதாவது ..
சில சமயம் இப்படித்தான்
என் நியுரான்கள்
தேவைக்கதிகமாக
உணர்ச்சிவசப்பட்டுவிடும்.

தேவையை நிவர்த்தி செய்யாமலேயே
எழுத முயல்கிறேன்

பிள்ளையார்சுழி போட மட்டுமே
என் பேனாவில் மை இருக்கிறது.
அதனாலென்ன
அதுவும் அழகாய்த்தான் இருக்கிறது.

ஆதலால்
பிள்ளையார்சுழி
இப்போதைக்கு போடுகிறேன். 

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |