ஆகஸ்ட் 17 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : சம்பள உயர்வு பெறப்போகும் எம்.பி.க்கள்
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எம்.பிக்களின் சம்பளத்தை ரூ.12,000 திலிருந்து ரூ.16,000 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அவர்களின் தொகுதிப் படியை ரூ.14,000 லிருந்து ரூ.20,000 உயர்த்தவும் அவர்களின் ஓய்வூதியம் தினசரிப்படி ஆகியவற்றை இருமடங்காக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலமாக அவர்களின் ஓய்வூதியம் இனி ரூ6,000 ஆகவும் தினசரிப்படி ரூ.1000 ஆகவும் இருக்கும்.

இதுமட்டுமல்லாமல் எம்.பிக்களுக்கு 2 செல்போன் இலவசமாக வழங்கப்படும் என்றும், இலவச தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் அவர்களின் அலுவலக செலவு படி ரூ14,000 லிருந்து ரூ23,000 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் பயணப்படி, விமானப்பயணங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்படுகிறது. இதற்காக மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.60 கோடி செலவாகும் என்று மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி தெரிவித்துள்ளார்.

ஆக மொத்தத்தில் பாராளுமன்றத்திற்குச் செல்லும் ஒவ்வொரு எம்.பி.யும் இப்படி ஏகப்பட்ட சலுகைகளைப் பெற்றுவருகிறார்கள். இத்தனைக்கும் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்களில் பலரும் கோடீஸ்வரர்கள். ஒருநாள் நாடாளுமன்றம் நடக்க ஆகும் செலவுகளே பலகோடி ரூபாய் என்று சமீபத்தில் ஒரு பத்திரிக்கை கணக்கு காட்டியிருந்தது. இந்தச் செலவுகள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் செய்யப்படுகின்றன.

ஆனால் தேர்ந்தெடுக்கப்படும் எம்.பிக்கள், நாடாளுமன்றத்தில் செய்யும் வேலைகளைத் தொலைக்காட்சியில் பார்த்து உள்ளம் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள் வரி கட்டிய நமது அப்பாவி ஜனங்கள். உப்பு சப்பில்லாத காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை முடக்குவதைத் தவிர எதிர்கட்சி வரிசையில் உட்கார்ந்துகொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் வேறு எதுவும் உருப்படியாகச் செய்வதில்லை ( எந்தக் கட்சி எதிர்கட்சியாக இருந்தாலும் இது ஒன்றை மட்டும் மாறாமல் செய்துவிடுவார்கள்). டெல்லி சென்று கொட்டமடிக்கும் எம்.பிக்களும் அவர்களது படை பரிவாரங்களும் பார்லிமெண்ட் உணவகத்தில் மூக்குப் பிடிக்க சாப்பிட்டுவிட்டு, கதை அடிப்பது ஒன்றையே நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் பிரதான வேலையாக பாவிக்கிறார்கள். சிலபல பிரபலத் தலைவர்களும், சினிமா மற்றும் தொழில் துறை பிரமுகர்களும் நாடாளுமன்றத்திற்குச் செல்வதையே தங்கள் சொந்த வேலையைக் காரணம் காட்டி தவிர்த்து வருகிறார்கள். ஓட்டுப் போட்ட மக்களுக்கு இவர்கள் என்ன நன்மைச் செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி இங்கே எழவே கூடாது.

எம்.பி.க்கள் ஒவ்வொருவருக்கும் இப்படி ஏகப்பட்ட சலுகைகளையும் சம்பளத்தையும் வாரி இறைக்கும் அரசு ஒவ்வொரு எம்.பி.யும் குறைந்தபட்சம் இத்தனை மணிநேரம் - இத்தனை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டும். ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் நாடாளுமன்றம் குறைந்தபட்சமாக இத்தனை மணி நேரமாவது அமைதியாக, அனைத்துக் கட்சிகளின் பூரண ஒத்துழைப்போடு நடக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்ற வேண்டும். சட்டத்தை மதித்து நடக்க அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும். அப்போதுதான் இந்த எம்.பிக்களை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி, அங்கே இவர்கள் வெட்டியாக அடிக்கும் கொட்டங்களுக்காக கோடிகோடியாக வரிகட்டும் மக்களுக்காக ஏதாவது செய்ய இவர்கள் முன்வருவார்கள்.

மேற்கூறிய விஷயங்கள் நடக்க முடியாத விஷயமல்ல. ஆனால் இதை நடத்திக் காட்ட எந்த அரசு முன்வரப்போகிறது என்பதுதான் கேள்வி.

|
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |