ஆகஸ்ட் 17 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
பேட்டி : நடிகர் பிரபு பேட்டி
- திருமலை கோளுந்து [golundhu1979@yahoo.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

நடிகர் பிரபு நடிக்கும் படமான தாமிரபரணி படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு உப்பளவுப் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு நடிகர் பிரபு நடித்து வருகிறார். இவரிடம் நேர்காணல் எடுக்க முடிந்தது. மகிழ்ச்சியாக அவர் பேசியதிலிருந்து..........

prabhu,rajini,vadiveluதமிழோவியம் :- கொஞ்சம் ஆழமாக சொல்லுங்களேன். எப்படி இருக்கிறீர்கள்?

பதில் :- சந்தோஷமாக இருக்கிறேன். எப்பவும் நிறைவான வாழ்க்கை ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அமைதியான கூட்டுக் குடும்பம், அன்பைப் பொழிய உறவுகள், நண்பர்கள், திரையுலகத்தினர் என எல்லாமே விருப்பம் போல் இருக்கிறது. அதனால் ஒன்றும் பிரச்சினைகள் இல்லை. போதுமா.

தமிழோவியம் :- பெரும்பாலும் இது போன்ற பகுதிகளில் படப்பிடிப்புகள் நடப்பதில்லை. இங்கு நடைபெறும் படப்பிடிப்பு உங்களை எப்படி உணர வைக்கிறது? 

பதில் :- நன்றாகத் தான் இருக்கிறது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் தாமிரபரணி படத்தின் படப்பிடிப்பு இங்கு நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நான் படப்பிடிப்பில் கலந்து கொள்வது ஒன்றும் புதிததல்ல. இது மூன்றாவது முறை என்று நினைக்கிறேன். உப்பளங்களின் மத்தியில் இப்பொழுது நடிப்பது வித்தியாசமாகத் தான் இருக்கிறது.

தமிழோவியம் :- தாமிரபரணி படத்தைப் பற்றி சொல்லுங்களேன்?

பதில் :- வித்தியாசமான படம். இயக்குனர் ஹரி இயக்கத்தில் நான் நடிக்கும் முதல் படம். இதில் என்னோடு விஷhல் நடிக்கிறார். பானு என்ற புது முகம் நடிக்கிறார். விஜயகுமார், நாசர், மனோரமா, நதியா போன்ற முக்கியமான ஆர்ட்டிஸ்ட்கள் நடிக்கிறார்கள். பொதுவாக தூத்துக்குடியில் ஏற்கெனவே நான் நடித்த இரண்டு படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்திருக்கின்றன. அதே போல இந்த தாமிரபரணி படமும் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கிறேன். அதே போல யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைக்கிறார்.

தமிழோவியம் :- சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உங்கள் தந்தையும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- சென்னை கடற்கரையில் அப்பாவிற்கு சிலை வைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரை உலகை சேர்ந்த ஒரு கலைஞனுக்கு இது வரை சிலை வைத்ததாக வரலாறு இல்லை. அந்த வரலாறு எனது தந்தைக்கு கிடைத்திருக்கிறது. இதனை நாங்கள் பெரிய பாக்கியமாகவே கருதுகிறோம். சிலை வைத்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நாங்கள் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்..

தமிழோவியம் :- சிலை வைப்பதற்கு தடை செய்ய வேண்டும்  என எதிர்ப்பு கிளம்பியதே?

பதில் :- நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை பற்றி பேச விரும்பவில்லை. அது தேவையற்றது என்று தான் நான் நினைக்கிறேன். எனது தந்தையின் நடிப்பை, பாராட்டதவர்கள், ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. இப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கும் வரை அவர் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார் என நாங்கள் நம்புகிறோம்.

தமிழோவியம் :- சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினியோடு நீங்கள் நடித்த அனுபவங்களை சொல்ல முடியுமா?

பதில் :- அற்புதமாக இருந்தது. தான் ஒரு பெரிய நடிகன் என்ற எந்தவித பந்தாவும் இல்லாத நடிகராக ரஜினிகாந்த்  இருந்தார். இருக்கிறார். படப்பிடிப்புக்கு தகுந்த நேரத்தில் வந்து விடுவார். தனக்கான ஷhட் வரும் வரை பொறுமையாக காத்துக் கொண்டிருப்பார். அப்படமும் வெளிவந்து எதிர்பாராத வெற்றியை பெற்றது. திரையிட்ட அனைத்து இடங்களிலும் அருமையாக போனது. சென்னையிலும் ஓராண்டுக்கு மேல் ஓடியது. குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், சந்திரமுகி போன்ற படங்களில் அவரோடு நான் சேர்ந்து நடித்தது ஒரு பாக்கியம் தான். இதனை வேறு எப்படி சொல்வது என்று தான் தெரியவில்லை.

தமிழோவியம் :- பொதுவாக இன்றைய தமிழ் சினிமா எப்படி போய்க் கொண்டு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

பதில் :- இந்திய அளவில், ஏன் உலக அளவில் தமிழ்சினிமா முன்னேற்ற பாதையில் தான் போய்க் கொண்டு இருக்கிறது. பல நவீன தொழில் நுட்பத்தில் இருந்து எல்ல வித புது முயற்சிகளும் இங்கு செய்து பார்க்கப்படுகிறது. வித்தியாசமான இயக்குநர்கள், டெக்னீஷினியன்கள் என நல்ல முறையில் தான் போய்க் கொண்டு இருக்கிறது. இதில் குறை சொல்ல ஒன்றுமே இல்லை என்பது என் கருத்து.

தமிழோவியம் :-  உங்களது சம காலத்து நடிகர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு பல இளம் நடிகர்கள் தமிழ்சினிமாவில் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இதனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் :- வரவேற்க வேண்டிய விஷயம் தான். திரைப்படத் துறையில் அவரவர் இடம் அப்படியே தான் இருக்கிறது. கமல் வித்தியாசமான முயற்சி எடுத்துக் கொண்டு தான் இருக்கிறார். ரஜினியும் சிவாஜியில் புது வேடம் போடுகிறார். சரத், கார்த்திக், நான் என்று திரைத்துறையில் நடித்துக் கொண்டு தான் இருக்கிறோம். புதிதாக நடித்து வரும் தனுஷ், சிம்பு, விஷால், பரத் போன்றவர்குள் அருமையாக செய்கின்றனர். தாமிரபரணியில் கூட விஷால் அருமையாக பண்ணுகிறார். இவர்கள் மீது அதிகமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

| | |
oooOooo
திருமலை கோளுந்து அவர்களின் இதர படைப்புகள்.   பேட்டி பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |