ஆகஸ்ட் 19 2004
தராசு
பருந்துப் பார்வை
மேட்ச் பிக்சிங்
பேட்டி
காந்தீய விழுமியங்கள்
முத்தொள்ளாயிரம்
கட்டுரை
வானவில்
பெண்ணோவியம்
வேர்கள்
க. கண்டுக்கொண்டேன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
கோடம்பாக்கம்
திரைவிமர்சனம்
ஹாலிவுட் படங்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
 • கங்கை இல்லாத காசி
 • - பாஸ்டன் பாலாஜி
 • வார்த்தையல்ல, வாக்கியம்
 • - என். சொக்கன்
 • என்னை எழுதியவர்கள்
 • - சத்யராஜ்குமார்
 • சுய சாசனம்
 • - பாஸ்டன் பாலாஜி
 • கோடிட்ட இடங்கள்
 • - சித்ரன்
 • களம்
 • - நாகூர் ரூமி
  யுனிகோடில் தேடல்
  சென்ற இதழ்கள்
  க. கண்டுக்கொண்டேன் : மடோன்னாவைப் பிடிக்குமா?
  - ரமா சங்கரன்
  | Printable version |

  Madonna"இந்த உலகத்தை ஆட்சி செய்ய நான் விரும்புகிறேன். ஒவ்வொரு தடவையும் புகழின் உச்சிக்கு செல்லும்போது நான் மற்றொரு உச்சியைக் காண்கிறேன். அதில் புதிதாக ஏறியாக வேண்டும். என்னால் இதை நிறுத்த முடியாது. நான் அங்கேயே ஓய்வெடுத்துக் கொண்டு வநத வழியைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால் என்னால் முடியாது. நான் உந்தி உந்தி மேலே செல்வேன். நான் அதை செய்தாக வேண்டும்."

  இப்படிக் கூறுகிறவர் ஒரு மக்கள்  தலைவரோ, விளையாட்டு வீரரோ இல்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாப் இசை உலகை ஆட்டிப் படைக்கும் மடோன்னாதான். "Madonna; In Her Own Words" என்ற தன் புத்தகத்தில் இப்படி சொல்கிறார். புத்தகத்தை Mick St Michael எழுதியிருக்கிறார்.

  என் சீனத் தோழி ஒருவர் மடோன்னா பற்றி ஒன்பது புத்தகங்கள் வைத்திருக்கிறார். ஆனால் இந்த புத்தகத்தில்தான் மடோன்னா ஒரு சாதாரணப் பெண்ணாக நம்மில் ஒருவராக மனம் திறந்து பேசுவது போல இருக்கிறது. மடோன்னாவின் இளமைப் பருவம் தொட்டு அவர் பிரபலமான பின் அவரைப் பற்றி பிறர் சொல்வது, அவர் மற்றவர்களைப் பற்றி, வாழ்க்கையையைப் பற்றிப் பேசுவது என்று புத்தகத்தில் பல பகுதிகள் காணப்படுகின்றன.

  இதில் படங்கள் எல்லாம் கறுப்பு வெள்ளைதான். அவ்வளவு நன்றாக இல்லை என்பது என் தோழியின் கருத்து. ஆகஸ்டு மாத நடுவில்  சிங்கப்பூர் தேசிய நாள் (9 ஆகஸ்டு) அல்லது இந்திய சுதந்திர தினத்தையொட்டி எழுதுவதை விட்டு விட்டு மடோன்னாவிற்கு நான் புகழாரம் செய்வது சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆகஸ்டு 16 மடோன்னாவின் பிறந்த நாள்.  மடோன்னாவிற்கு இப்போது 46 வயது. நம்புவது சற்று கடினம்தான்.

  புகழ், உழைப்பு, பணம் சம்பாதிப்பது, மன உறுதி ஆகியவைகளின் அடிப்படையில் ஈராண்டுகளுக்கு முன் அமெரிக்கப் பெண்கள் மிகவும் விரும்பிப் போற்றும் பெண்ணாக மடோன்னா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஆரம்பகாலங்களில் "பெண்மை" என்ற சொல்லுக்கே  அவதூறுகள் ஏற்படுத்துவதாக பழிகளுக்கும்  கேலிகளுக்கும் ஆளானவர் மடோனா. நியூயார்க்கிலிருந்து பாப் இசையிலும் திரைப்படங்களிலும் உச்சிக்குச் செல்ல வேண்டும் என்ற வெறியுடன் 1977ல் மிச்சிகனுக்கு வந்து சேர்ந்தார் அவர். மினிமினி ஸ்கர்ட்டுகள், தொப்பிளில் வளையம், நிலைகுத்தும் மெட்டல் பிரா என்று பெண்கள் வெறுக்கும் தோற்றத்துடன் காட்சியளித்தார். துணிச்சல், முரண்பாடு, அதிர்ச்சி என்று சொல்லும் அளவுக்கு பெண்ணியக்கவாதிகளுக்கு தன் எழுத்தினாலும் பாட்டினாலும் ஆட்டத்தினாலும் அதிரடி கொடுத்து வந்தார்.

  "Sex" என்னும் 128 பக்கம் கொண்ட புத்தகத்தை எழுதிய மடோனா பெண்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள   அழகையும் கவர்ச்சியையும் தன் தொழிலில் பயன்படுத்தத் தான் தயங்கவில்லை என்று கூறுகிறார். இப்புத்தகம் வரும் முன் வெளியான அவருடைய "Erotica" ஆல்பத்தின் காபிகள் இரண்டு மில்லியன் விற்பனையாகின.  தன் அழகின் பெருமிதம் பற்றி மட்டுமின்றி தான் பட்ட  சிரமங்களையும் தயக்கமில்லாமல் எழுதுகிறார் அவர்.

  தனது பாடகி வாழ்க்கையைத் தொடங்கும் முன் "பசியோடு தெருக்களில் வாழ்ந்தேன். குப்பைத்தொட்டிகளில் இருக்கும் 'கேன்' உணவுகளை எடுத்துச் சாப்பிட்டதாகத் தன் ஏழ்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். "ஹாலிடே" என்னும் அவரது முதல் ஆல்பமே 1983ல் பெரும் புகழையும் பணத்தையும் அவருக்குத் தேடிக் கொடுத்தது.

  மடோன்னா தனித்துப் பாடியவைகளிலும் அபார வெற்றி கண்டார்.  முதல் பாடல்(Everybody) இரண்டாம் பாடல்( Physical attraction)களிலேயே தன் திறமையை நிலை நாட்டினார். கிளப்களில் இவை நல்ல டான்ஸ் பாடல்களாகி மடோன்னாவை அடையாளம் காட்டின. தன்னுடைய இசை ஆற்றல் மட்டுமில்லை. தனக்கு இயல்பாக அமைந்த பணம் பண்ணும் திறமையும் வர்த்தக ஆற்றலும் தன்னை முதலிடத்திற்கு உயர்த்தியதாகக் குறிப்பிடுகிறார் அவர். ஒவ்வொரு தடவையும் வெற்றிக்காக காத்திருக்காமல் அடுத்தடுத்து திட்டமிட்டு அசராமல் பணியாற்றும் போக்கைக் கொண்டிருந்தார்.

  1980களின் இறுதியில் தன்னை பாப் உலகில் நிலைநிறுத்திக் கொண்டார். இசை வழி முன்னேறிக் கொண்டிருக்கும்போதே அவருடைய முதல் திரைப்படம் "Desperately seeking Susan" வெளிவந்தது. தன்னோடு "ஷாங்காய் சர்ப்ரைஸ்" படத்தில்  நடித்த நடிகரை (Sean Penn) மணந்து ஈராண்டுகளில் அவரைப் பிரிந்தார்.

  தன் வாழ்க்கைப் பாதையில் தொலை நோக்கோடு சென்றதாகக் கூறுகிறார் "Madonna; In Her own words" புத்தகத்தில். குறிக்கோள் மட்டும் போதாது. என்னிடம் திறமைகளும் இருக்கின்றன என நம்பிக்கையோடு அதில் பேசுகிறார். நல்ல திறமையானவர் என்னும் பெயரை நிலைநாட்டியவுடன் மடோன்னா 1992ல் டைம் வார்னர் நிறுவனத்திடம் 60 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். "Maverick Music"  என்னும் சொந்த முத்திரையைத் தோற்றுவித்தார். கடுமையாக ஆறாண்டுகள் உழைத்து தன் சொந்த தொலைக்காட்சி, பட நிறுவனங்களையும் திறந்தார்.

  தோல்விகளைக் கண்டு துவளவேயில்லை மடோன்னா. 1989ல் "Like a prayer" வீடியோ வெளி வந்தபோது பொதுமக்களும் வாடிகன் பேச்சாளர்களும் அதை எதிர்த்தனர். மடோன்னா அதில் அரைகுறை ஆடைகளை அணிந்து எரியும் சிலுவையின் முன்பாக அமெரிக்க- ஆப்பிரிக்க சாமியார்களை முத்தமிடுவதாக அதில் ஒரு காட்சி இருந்தது. இந்த ஆரவாரத்தால் பெப்ஸி இவருக்குக் கொடுத்த மிகப் பெரிய விளம்பர ஆதரவை அவர் இழந்தார்.

  இப்படி ஷாக் அடிக்கும் முரண்பாடான காட்சிகளைக் கொடுத்து வந்த மடோன்னா 1990களில் தன் வக்கிரமான போக்கைக் குறைத்துக் கொண்டார். 1990களின் ஆரம்பத்தில் அவர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார். நல்ல விமர்சனங்களும் அவருடைய படங்களின் அலைமோதிய டிக்கெட் விற்பனைகளும் மடோன்னாவின் வேகமானப் போக்கைத் தணித்தது. பின் 1995ல் அவர் "Evita" வில் நடித்தது அவருக்கு கோல்டன் குளோப் விருதைப் பெற்றுத் தந்தது. அதில் இரண்டு பாடல்களும் மிகப் பிரபலமாயின.

  அவ்வப்போது தான் நடிதத படங்கள், பாடுய பாடல்கள், ஆடிய ஆட்டங்களின் போக்கை ஒட்டி தன் நடை, உடை, பாவனைகளை மாற்றிக் கொள்வதில் சாமர்த்தியமாக நடந்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார் அவர். 1996ல் ஒரு மகளைப் பெற்றார். அவளுக்கு லூர்து என்று பெயரிட்டிருக்கிறார். லூர்துவிற்கு இரண்டு வயதாகும்போது மடோனா "ரே ஆப் லைட்" என்னும் ஆல்பத்தைப் படைத்தார். அதில் மடோன்னாவிடம்  மாற்றங்கள் தெரியும். மடோன்னா தாயான பிறகு புத்தரது கொள்கைகள்,  யோகா போன்றவற்றில் நாட்டம் கொள்ளத் தொடங்கினார். தன் ரே ஆப் லைட் ஆல்பத்தில் 'லிட்டில் ஸ்டார்' என்னும் பாடலைத் தன் குழந்தைக்காக இதமாகப் பாடியிருந்தார். அதேபோல தான் ஆறாவது வயதில் தாயை இழந்ததை நினைவு கூர்ந்து Mer Girl  என்னும் பாட்டை உருக்கமாகப் பாடியிருக்கிறார்.
   
  ஆனால் இதுபோல தமிழ் கலையுலகில் ஒரு நடிகர் அல்லது கலைஞர் தனக்கே உரிய நடிக்கும் பாணி, ஸ்டைலில்  மாற்றங்களைச் செய்து கொண்டால்  நமது திரையுலக ரசிகர்கள் விரும்புவார்களா? என்பது தெரியவில்லை. இப்போதும் காமெடி நிகழ்ச்சிகளில் சரோஜாதேவியை இரட்டை சடை போட்டு கண்களை சிமிட்டுவதாகத்தான் காட்டுகிறார்கள். விஜயகுமாரியை உருக்கமான கண்ணீர் நாயகியாகத்தான் நினைவு கூறுகிறோம்.

  சின்னத்திரை இல்லாவிட்டால் ஜோதி லட்சுமி இன்றும்  நம் நினைவுகளில் டூ பீஸ் ஆடைகளில்தான் வலம் வந்து கொண்டிருப்பார். நல்ல வேளை! அண்ணாமலை காப்பாற்றியது. நம் இசைக் கலைஞர்களை எடுத்துக் கொண்டால், நம் கர்நாடக சங்கீத வித்துவான்கள் இன்றும் மேடையில் அமர்ந்துதான் பாடிக் கொண்டு இருக்கிறார்கள். சினிமா பாடகர்கள் திப்புவும் கார்த்திக்கும் இந்தியபாணி அல்லது பேண்ட், சட்டை போட்டே மேடையில் பாடிக் கொண்டிருக்கிறார்கள். புகழின் உச்சியில் கூட பி சுசிலா காதுகளில் தொங்கிய வளையங்களைக் கழட்டவேயில்லை; எஸ். ஜானகி ஒரு ரூபாய் அளவுப் பொட்டை விடவேயில்லை.

  மடோன்னா ரசிகர்கள் விஷயத்திலும் உலக சாதனைப் புரிந்திருக்கிறார்.  லண்டனின் பிரிக்ஸ்டன் அகெடமியில் அவர் தனது இணையதளத்தைத் தொடங்கியபோது ஒன்பது மில்லியன் ரசிகர்கள் அதைக் கண்டு களித்தனர். புகழின் உச்சியில்தான் இரண்டு முறையுமே திருமணம் புரிந்து கொண்டார். திருமணமும் குழந்தையும் தன்னை மாற்றியதாகக் குறிப்பிடுகிறார்.தான் ஆடிப்பாடிக் கொண்டிருந்தாலும் தன் பெண்ணை லண்டனில் மிகப் பாரம்பரியமான பழைபாணி பள்ளியிலேயே சேர்த்திருக்கிறார். அவருக்கு இப்போது ஒரு மகனும் உண்டு. இரண்டாம் முறையாக கடந்த 2000 ஆம் ஆண்டு தன்னைவிட 10 வயது குறைவான பிரிட்டிஷ்  திரை இயக்குனர் Guy Ritchieஐ மணந்தார். அதற்கு நான்கு மாதங்கள் முன்பாகவே அவர் ஒரு மகனை(Rocco Ritchie) பெற்றெடுத்தார். அவருடைய தாய்மை அவரை மெதுவடையச் செய்யவில்லை. அவருடைய உணர்வுகளை மட்டுமே மெதுவடையச் செய்தது.

  படிப்படியாக அவர் உயர்வடைந்ததற்கு எதைக் காரணமாகக் கூறுகிறார்? "முதலில் கிளப்புகளில் டான்ஸ் ஆடுவேன். பின் பாடகி ஆவேன், பின் நடிகை ஆவேன் என்றெல்லாம் திட்டமிட்டுக் கொள்ளவில்லை." என்றுக் குறிப்பிடுகிறார். பின் அவர்  வெற்றி கண்டது எப்படி சாத்தியம்? "என்னிடம் என்ன திறமைகள் இருந்ததோ  அதை முதலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எனக்கு நானே ஒருவிதிமுறை அமைத்துக்  கொண்டேன்.

  தொழிலில் குறிக்கோளும் கடப்பாடும் தைரியமும் என்னை ஒவ்வொரு முறையும் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றது." என்று தன் புத்தகத்தில் சொல்கிறார்.

  மடோன்னாவை வித்தியாசமான கண்ணோட்டத்தோடு நம்மைப் பார்க்க வைக்கிறது இந்த புத்தகம். அவரை  வாழ்க்கையில் தன் திறமையை முதலீடாக வைத்து முன்னேற  நினைத்த பெண்ணாகப் புத்தகம் சித்தரிக்கிறது. இவ்வகையில்  பார்த்தால் நம்மில் எல்லாருக்குமே மடோன்னாவைப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அவருடைய இதர அதிர்ச்சி நடவடிக்கைகள் நம் கண்களை உறுத்தாது.

  PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
  உங்கள் கருத்து  
  (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
  Copyright © 2004 Tamiloviam - Authors
  Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
  | Privacy |