ஆகஸ்ட் 24 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : குஜராத்திற்கு தேவையான விஷயங்கள்
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான கிரேடு 2 தேர்வில் எந்த தலைவர் தும்மினால் மத்திய அரசு கவிழும்? எந்த நாளை சங்பரிவார் வெற்றி நாளாகக் கொண்டாடுகிறார்கள்? போன்ற தேவையற்ற கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்காக நடத்தப்படும் தேர்வுகளில் இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவது ஆளும் அரசின் பொறுப்பற்ற தன்மையை உலகிற்கு பறைசாற்றுவதைப் போல அமைகிறது.

ஏற்கனவே குஜராத் என்றால் காந்தி பிறந்த மாநிலம் என்பது மறைந்து மதக்கலவரங்கள் நடக்கும் மாநிலம் என்ற அவப்பெயரைப் பெற்றுள்ளார்கள் அம்மாநில மக்கள். இந்த நிலைக்கு அம்மாநிலத்தை ஆளாக்கியவர்கள் மாநிலத்தை ஆள்வோர். இந்தியாவில் மிகவும் பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் பீகாருக்கு அடுத்தபடியாக குஜராத்தில் பட்டினி சாவுகளும் மதக்கலவரங்களும் மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் மக்களைப் பாதுகாக்க வேண்டிய / அவர்களது குறைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகளுக்கான தேர்வில் இம்மாதிரியான கேள்விகளைக் கேட்பது மாநிலத்தை ஆளும் அரசு எந்த லட்சணத்தில் செயல்பட்டு வருகிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

குஜராத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் சில கலைக்குழுவினருக்கும் அமெரிக்க அரசு விசா வழங்க மறுத்து வருகிறது. இந்த விசா மறுப்பு பட்டியலில் மாநில முதல்வர் நரேந்திர மோடி, மற்றும் அந்த மாநில மூத்த பா.ஜனதா தலைவரும் அடக்கம். அந்த அளவிற்கு குஜராத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு உலக அரங்கில் மரியாதை. இந்நிலையில் மாநில அரசு செய்யவேண்டிய முதல் வேலை - மத்திய மாநில அளவில் தங்கள் மீதுள்ள களங்கங்களை ஓரளவிற்காவது துடைக்கும் வேலையில் ஈடுபடுதல், உலக அளவில் குஜராத் அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரைத் துடைக்கும் முயற்சிகளில் ஈடுபடுதல்,  அரசு இயந்திரத்தை துரித கதியில் முடிக்கி விட்டு மக்கள் நல்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ளுதல், இவை அனைத்தையும் விட முக்கியமாக இத்தகைய கோமாளித்தனமாக கேள்விகளை தேர்வுகளில் கேட்காமல் இருத்தல்..

இப்படி எல்லாம் செய்தால்தான் குஜராத் இன்னொரு பீகாராக மாறுவதைத் தடுக்க இயலும். இல்லாவிட்டால் போகிற போக்கில் பீகாரையே மிஞ்சி விடும் குஜராத்.

| | |
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |