ஆகஸ்ட் 31 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
அடடே !! : 90 - 10 வழிமுறை
- ஆனந்த் சங்கரன்
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

90-10 வழியை உணருங்கள் இது உங்கள் வாழ்வின் பல பிரச்சனைகளை கடக்க உதவும்.

உங்களின், 10% வாழ்கை அதுவாய் அமைவது. அதை கட்டுபடுத்த நம்மால் முடியாது. மீதம் உள்ள 90% வாழ்வை நீங்கள் நிர்ணயம் செய்கிறீர்கள்.

காலையில் வேலைக்கு போகும் போது உங்கள் செல்ல மகள் கை தவறுதலாக உங்கள் அலுவலக சட்டையில்

ஹூம்ம்...

இரு புள்ளிகளை இணைக்கும் மிகக்குறந்த பட்ச தூரம் ஒரு நேர்கோடு ஆகும்.

இரு நபர்களை இணைப்பதும் நேர்மையான செயல்களே ஆகும்.


ஜெயிப்பதற்கு என்ன வழி ?

கடுமையா போராடனும்..

இல்லை.. ஜெயிக்கும் வரை போராடனும்.

காபியை கொட்டிவிடுகிறாள். நீங்கள் அவளை கடுமையாக கண்டித்துவிட்டு, அவளுக்கு இதை சரியாக சொல்லித்தருவதில்லை என்று உங்கள் துணை மீதும் எரிந்து விழுகிறீர்கள். உங்கள் மகள் அழத்தொடங்குகிறாள், துணையும் உங்கள் மீது கோபம் கொள்கிறாள். நீங்களோ எரிச்சலுடன் உள்ளே சென்று வேறு சட்டையை அணிந்து வருகிறீர்கள். அப்போதும் உங்கள் மகள் அழுது கொண்டே இருக்கிறாள். இதனால் அவள் பள்ளிக்கு தயாராவதில் தாமதம் ஏற்பட, அவள் ஸ்கூல் பஸ் போய்விடுகிறது.

மகளை ஸ்கூலில் விட்டு விட்டு அலுவலகம் செல்ல லேட் ஆகிவிடும் என்று உங்கள் வண்டியை வேகமாக ஓட்டுகிறீர்கள். இதனால் போலீஸிடம் மாட்டி ஃபைன் கட்டும்படி ஆகிறது. எப்படியோ அலுவலகம் சென்றால் அன்று முக்கியமாக எடுத்து வர வேண்டிய கோப்பு (ஃபைல்) ஒன்று வீட்டிலேயே விட்டு வந்ததை உணருகிறீர்கள். இதனால் மேலதிகாரியிடம் கெட்ட பெயர் வேறு.

மாலை வீடு திரும்பிய போது, தினமும் ஆசையாய் ஓடி வரும் மகள் முகத்தை திருப்பி கொண்டு நிற்க, அப்படியே துணையும்.

ஆக இது அத்தனைக்கும் காரணம் எது ?

1. உங்கள் மீது ஊற்றப்பட்ட காபியா ?

2. உங்கள் மகளா ?

3. அலுவலக மேனேஜரா ?

4. காலையில் நீங்கள் நிதானம் இழந்ததா ?

என்று யோசித்தால் காரணம் புலப்படும்.

 

நீங்கள் 10 நொடிகள் நிதானம் இழந்ததால் ஏற்பட்டவையே இவை அனைத்தும்.

happy familyஇதையே நீங்கள் நிதானத்துடன் செய்திருந்தால் எப்படி இருக்கும் யோசியுங்கள்.....

உங்கள் செல்ல மகள் கை தவறுதலாக உங்கள் அலுவலக சட்டையில் காபியை கொட்டிவிடுகிறாள். நீங்கள் அவளிடன் அன்பாய் 'இனிமே இப்படி கவனமில்லாமல் செய்யக்கூடாது' என்று சொல்லிவிட்டு காபியை துடைத்துக் கொள்ள உள்ளே செல்கிறீர்கள். நீங்கள் வெளியே வரும் போது உங்கள் துணை வேறொரு சட்டை மற்றும் உங்கள் அலுவலக பையுடன் காத்திருக்கிறார். உங்கள் மகள் சரியான நேரதுக்கு பள்ளி செல்ல, நீங்களும் சரியான நேரதிற்கு அலுவலகம் சென்று மேலதிகாரியிடம் வேலையை சரியாக செய்தமைக்கு சபாஷ் வாங்குகிறீர்கள். மாலை வீடு திரும்பியதும் உங்கள் துணை மற்றும் மகள் மலர்ந்த முகத்துடன் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

இப்போது வித்தியாசம் தெரிகிறதா ?

காலையில் நடத்த விஷயம் ஒன்றுதான் (காபி மேலே கொட்டியது) - 10%

மீதம் 90% நீங்கள் நடந்து கொண்ட விதத்தில்தான்.

இந்த 90-10 வழிமுறையை கடைபிடித்தால் உங்கள் வாழ்வு மிக சிறப்பாகவும் உங்களால் உங்கள் சார்ந்தவர்களின் வாழ்வும் சிறப்பானதாய் அமையும்.

இதனால் தேவையற்ற மன உளைச்சல், இரத்த அழுத்தம், இருதய நோய்களை ஆகியவற்றை தவிர்க்கலாம்.

oooOooo
ஆனந்த் சங்கரன் அவர்களின் இதர படைப்புகள்.   அடடே !! பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |