செப்டம்பர் 01 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
உள்ளங்கையில் உலகம்
திரைவிமர்சனம்
கேள்விக்கென்ன பதில் ?
சிறுகதை
இந்து மதம் என்ன சொல்கிறது ?
அடடே !!
கவிதை
தொடர்கள்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கவிதை : ஏழை சிறுமியும் ரோஜா செடியும்
- சுரேஷ், சென்னை [sureshnaraynan@yahoo.com]
| Printable version | URL |

பல வருட ஆசைகளிலென்று ரோஜா செடி!

Roseமனிதருக்கே இடமில்லை இங்கே ரோஜா செடி தேவையாட?
என்றன சிலரின் கோபக் கண்கள்,

ரோஜா செடிக்கு வீட்டிலும் வாசலிலும் தெருவிலும் இட ஒதுக்கீடு மறுக்கப்பட
சமுகம் என் மேல் சுமத்திய அடிமை சங்கிலியின் முதல் வளையத்தை சிறுமி நான்
அன்றே முறித்தேன்

ஆம் ! இளைத்துப் போன என் பணப்பையின் கடைசி இரத்த சொட்டுக்கள் கொடுத்து என்னை போல் இளைத்த ஒரு ரோஜா செடி நான் வாங்கினேன்,

சமூகத்தால் ஒதுக்கப்பட்ட எண்பது வயது ஏழை பாட்டி எங்கள் தெரு ஓரத்தின்
ஒரு உயிர் மட்டும் உள்ள ஓர் உயிர்ச்சிலை ,

அந்த சிலைக்கு மாதமொருமுறை குளிப்பாட்டும் பாக்கியம் எனக்கு மட்டும் ,
நன்றியுள்ள பாட்டியருகில் அமர்ந்து என் செடி - செடியும் பாட்டியுமினி அனாதைகளல்ல

ஒரு நாள் எத்தனை முறை அந்த செடியை பார்ப்பேனென்று எனது
கணிதத்திற்கே விடை தெரியாது,

செடியே ! என்ன கேட்டாய் ? என்னிடத்தில் தான் ரோஜா இல்லையே
என்னை இத்தனை முறை ஏன் காண வருகிறேன் என்றhடூ

செடியே உனக்கு என்னை புரியவில்லை . புரியவைக்கிறேன் கேள்.

எனக்கு உனது ரோஜாவை விட செடியே உன்னை பிடிக்கும்
வெயிலை விட சுரியனை பிடிக்கும். கவிதையைவிட கவிஞர்களை பிடிக்கும்
பாடத்தை விட பாட ஆசிரியர்களை பிடிக்கும் - ஏன்
என்னை விட என் தாயை பிடிக்கும் - இன்னமும் சில உள்ளன. கேள்..

சொந்தங்களை விட பந்தங்கள்
பந்தங்களை விட நண்பர்கள்
நண்பர்களை விட நூலகங்கள்
நூலகங்களை விட கல்லூரிகள்
கல்லூரிகளை விட ஆசிரியை தெய்வங்கள்
ஆசிரியை தெய்வங்களை விட - அடுத்து
காண இருக்கும் ஆசிரியை தெய்வங்கள் ,

செடியே  உனது முதல் ரோஜா பூ நம் இருவருக்குமல்ல - பிறகு ?
என் தமிழ் தெய்வம் எனதன்பு தமிழ் ஆசிரியருக்கு !

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |