செப்டம்பர் 2 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
க. கண்டுக்கொண்டேன்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
சமையல்
கோடம்பாக்கம்
திரைவிமர்சனம்
அமெரிக்கா Matters
திரையோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : தம் ஆலூ
    - மீனா
    | Printable version |

    தம் ஆலூ

    தேவையானவை

    உருளைக்கிழங்கு - 4
    முந்திரி - 25
    பனீர் - 100 கிராம்
    உலர் திராட்சை - 25
    வெண்ணெய் - - 3 டேபிள் ஸ்பூன்
    பாலேடு - 2 டீஸ்பூன்
    மஞ்சள் ·புட் கலர் - 2 சிட்டிகை
    கொத்தமல்லி - சிறிதளவு
    வெங்காயம் -  4
    நெய் - 2 டீஸ்பூன்
    ஏலப்பொடி - அரை டீஸ்பூன்
    பூண்டு - 3 பல்
    மிளகுப் பொடி - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
    மிக்ஸ்ட் மசாலா - 2 டீஸ்பூன்

    செய்முறை

    உருளைக்கிழங்கின் தோலைச் சீவி நடுவில் ஒரு ஓட்டை போட்டு, பீலர் வைத்து உள் பகுதிகளை
    வழித்துவிடுங்கள். வழித்து வைத்த கிழங்குடன் துருவிய பன்னீர், திராட்சை, உப்பு, ஏலப்பொடி, மிளகுத்தூள், நெய் சேர்த்து மசித்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை மீண்டும் கப் போலிருக்கும் உருளைக் கிழங்கினுள் அடைத்து மேலே மஞ்சள் ·புட் கலர் தடவி எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

    மிதமான தீயில் அகலமான பாத்திரம் வைத்து நெய் விட்டு நறுக்கிய பூண்டு, வெங்காயத்தைப் போட்டு
    பொன் நிறமாக வதக்குங்கள். முந்திரியை அரைத்து இதில் கலந்துவிடுங்கள். மொத்த கலவையும் கெட்டியானதும்
    ஒரு டம்ளர் தண்னீர் ஊற்றுங்கள். அத்துடன் மிளகாய்பொடி, மிக்ஸ்ட் மசாலா, மஞ்சள் ·பு கலர் சிட்டிகை சேர்த்து
    உப்பு போட்டு கொதிக்கவிடுங்கள்.

    நன்றாகக் கொதிக்கும்போது வறுத்தெடுத்த உருளை கப்பைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். மொத்த கலவையும் கெட்டியானதும் பாலேடு, வெண்ணெய் சேர்த்து நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.

    ஆலூ பரோட்டா, பட்டர் நான் செய்யும்போது தம்ஆலூ சரியான சைட்டிஷ்.



    கிழங்கு வடா பாவ்

    தேவையானவை

    வேகவைத்த சேப்பங்கிழங்கு - 4
    கொண்டைக்கடலை - 2 கப்
    வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    பன் - 6
    இனிப்பு, கார சாஸ் - 8 ஸ்பூன்

    வேகவைத்த சேப்பங்கிழங்கு, கொண்டைக்கடலையை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சர்க்கரை
    வள்ளிக்கிழங்கையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, உப்பு
    சேர்த்து 6 உருண்டைகளாக்கிக் கொள்ளுங்கள்.

    இந்த உருண்டைகளை வடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் சிறிது எண்னெய் விட்டு ஒவ்வொன்றாகப் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை ரோஸ்ட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அல்லது எண்ணெயில் போட்டு பொறித்தும் எடுக்கலாம். பன்னை அரை வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டிய பன்னில் ஒரு பக்கத்தில் இனிப்பு, கார சாஸ் தடவி அதன் மேல் ஒரு வடையை வைத்து பன்னின் மேல் பகுதியில் வெண்ணெய் தடவி மூடுங்கள். அருமையான கிழங்கு வடா பாவ் ரெடி!!

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |