செப்டம்பர் 9 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
வேர்கள்
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    தராசு : நான் தான் செய்தேன்! நான் தான் செய்தேன் !!
    - மீனா
    | Printable version |

    Sethu Samuthiramபிரதமர் மன்மோகன் சிங் சேது சமுத்திர திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தாலும் அளித்தார்.. நம் தலைவர்களிடையே பேர் வாங்கும் சண்டை அற்புதமாய் துவங்கியிருக்கிறது. 2000 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் எவ்வளவு தூரத்திற்கு நிறைவேறும் என்பது இன்னும் நிச்சயமாகவில்லை. அதற்குள் நம் தலைவர்கள் அடித்துக்கொள்வதைப் பார்த்தால் வேதனைதான் நமக்கு மிஞ்சுகிறது.

    சேது சமுத்திரத் திட்டத்திற்கான முழுப் பெருமையும் தன்னையேச் சேரவேண்டும் என்று உரிமை கோருகிறார் ம.தி.மு.க தலைவர் வை.கோ. எங்கே மற்றவர்கள் புகழைத் தட்டிக்கொண்டு போய் விடுவார்களோ என்ற பயத்திலேயே அவசர அவசரமாக போஸ்டர்கள் அடித்து ஊரெல்லாம் ஒட்டித் தங்கள் தலைவரைத் திருப்திபடுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள் தி.மு.க உடன் பிறப்புகள். இதில் தங்கள் தலைவர் அடித்து பிடித்து கப்பல் துறையைக் கேட்டதே சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றத்தான் என்ற தம்பட்டம் வேறு. நான் இருக்கும் போது வேறு யாருக்கும் பெயரோ புகழோ போய்விடக்கூடாது என்பதில் ரொம்பவும் குறியாக இருக்கிறார் நம் முதல்வர். இதில் நான் தான் அவருக்கு அணில் போல உதவினேன் - எலி போல உதவினேன் என்று கூறுபவர்களும் அடக்கம். திட்டத்திற்கான அஸ்திவாரம் பா.ஜவால்தான் போடப்பட்டது. எனவே அவர்களுக்கு மட்டுமே இந்தப் புகழ் சேரவேண்டும் என்று கூச்சல் போடுகிறார்கள் சிலர். சிகரம் வைத்தார்போல இதற்கான அனைத்துப் பெருமைகளும் காங்கிரஸ் கட்சிக்கே சேர வேண்டும் என்கிற கோரிக்கை வேறு. இதில் யாருக்கு பரிந்து பேசுவார்கள் நம் மக்கள்? தலை சுற்றுகிறது.

    மக்கள் வரிப்பணத்திலிருந்து காசை எடுத்து மக்களுக்கு சிறிதளவு நன்மை செய்யவே நமது இன்றையத் தலைவர்கள் இந்த அடி அடித்துக்கொள்கிறார்களே - அந்தக் காலத்தில் தங்களுடைய சொந்தப் பணத்தை லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் மக்களுக்காக செலவு செய்து, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்த தலைவர்களான காந்தி, நேரு, வ.உ.சி போன்றவர்களை நினைக்கும் போது - அவர்களுடைய தியாகங்களை எண்ணிப் பார்க்கும்போது கண்கள் குளமாவதைத் தடுக்க இயலவில்லை.

    அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் எப்போது நிறைவேறும் - யாருக்கும் தெரியாது. அதற்குள்ளாகவே இத்தனைப் பிரச்சனைகள். பேர் வாங்க இந்த அளவிற்குப் போட்டி போடும் தலைவர்கள் இதில் காட்டும் அக்கறையை மக்கள் பிரச்சனைகளிலும் கொஞ்சம் காட்டட்டும். மக்களுக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு அடிப்படைப் பிரச்சனைகளில் சிலவற்றையாவது தீர்த்து வைக்க முயற்சி செய்யட்டும். காவிரியில் தண்ணீரைக் கொண்டு வர தீவிரம் காட்டட்டும். குறைந்த பட்சம் காவிரி நடுவர் குழுவையாவது கலைக்கவிடாமல் செய்யட்டும். இதில் ஏதாவது ஒன்றிலாவது வெற்றியடைந்து காட்டுங்கள் - பிறகு சொல்லுகிறோம் யாருக்கு அதற்கான புகழ் கிடைக்கவேண்டுமென்று.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |