செப்டம்பர் 9 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
வேர்கள்
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : மைதா உளுந்து போண்டா
    - மீனா
    | Printable version |

    மைதா உளுந்து போண்டா

    தேவையானவை

    மைதா 1 கிலோ
    உ.பருப்பு  100 கிராம்
    தயிர்  1 கப்
    சமையல் சோடா 2 சிட்டிகை
    ப. மிளகாய் 7
    இஞ்சி சிறிய துண்டு
    கறிவேப்பிலை (நறுக்கியது) 1 டேபிள் ஸ்பூன்
    பெருங்காயம் தேவையான அளவு
    எண்ணெய் பொறிக்கத் தேவையான அளவு

    செய்முறை

    முதலில் உ.பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து நன்றாக அரைத்துகொள்ளவும் (கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்). மைதாவுடன் உ.பருப்பு மாவு, தயிர், சோடா, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் கலந்து, தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி, போண்டா போடும் பதத்தில் கலந்து, பத்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சாதாரண போண்டாவை விட சிறிதாக எடுத்துப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். புதுமையான ருசியில் போண்டா சூப்பராக இருக்கும். சைட்டிஷ் எதுவுமே தேவைப்படாத அருமையான மாலை நேர டிபன் இது.


    அரிசி தேங்காய் அல்வா

    தேவையானவை

    அரிசி 1/2கிலோ
    தேங்காய் 1 (பெரியது)
    வெல்லம் 1/2 கிலோ
    நெய் 1/4 கிலோ
    உப்பு ஒரு சிட்டிகை
    ஏலக்காய் 2

    செய்முறை

    அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து எடுத்து அதனுடன் தேங்காய் போட்டு அரைக்கவும். பாதி அரைந்ததும் வெல்லம், ஏலக்காய் போட்டு நன்றாக அரைக்கவும். தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் தளர்த்தியான பதத்திற்கு கரைத்து வைத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் சிறிது நெய் ஊற்றி இந்த அரைத்த மாவையும் போட்டு நன்றாக கிளறவும். அவ்வப்போது நெய் விட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். நன்றாக வெந்து கையில் ஒட்டாமல் ஒன்றாக சேர்ந்து வரும்பொழுது மேலும் இரண்டு ஸ்பூன் நெய்யை விடவும். நெய் தடவிய தட்டில் இந்த கலவையைப் போட்டு கொஞ்சம் ஆறியதும் அல்வாவைப் போல கத்தியால் கட் செய்து பரிமாறவும். அரிசி தேங்காய் சேர்த்து செய்திருப்பதால் மீதமிருக்கும் அல்வாவை ப்ரிட்ஜினுள்ளே வைக்கவும். இல்லாவிட்டால் சீக்கிரம் கெட்டுவிடும்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |