செப்டம்பர் 9 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
காந்தீய விழுமியங்கள்
வேர்கள்
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
முத்தொள்ளாயிரம்
திரையோவியம்
சிறுகதை
கவிதை
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    கவிதை : அது ஒரு வசந்த காலம்
    - வந்தியத்தேவன்
    | Printable version |

     

    அண்டை வீட்டு வாசுகியுடன் கூட்டாக
    'பூப்பறிக்க வருகிறோமென்று' கைகோர்த்து ஆடியது
    அஞ்சாப்போடு நின்ற காரணம் தெரியாமல் திகைக்க
    பூப்படைந்த காரணம் புரியாமல் குழம்பும்

    பட்ஜெட் போட்டு வாங்கிய பட்டாசு
    பத்தாமல் போன ஏக்கத்தை
    பக்கத்து வீட்டு வெடிக்குப்பை நிறைக்கும்

    பத்து ரூபாய்க்கு நாலென வாங்கிய
    பனையோலை விசிறி கோடை வெப்பமுடன்
    'படிடா' என்னும் அப்பாவின் தாக்கமும் தணிக்கும்
    நாணிச்சிவந்த பெண்ணின் முகமாய் உள்ளங்கை வலிக்கும்

    நீரோட்டம் பார்த்து வாங்கிய வண்ணக் கோலிகள்
    ஆட்டத்தில் நொறுங்கும் கூடவே மனமும்
    'பேந்தா'வில் கெலித்து மாற்றானை புறங்கட்டி
    முட்டி தேய்த்து பெருமையில் விம்மும்

    கூர் சீவிய பம்பரம் ஆக்கர் குத்துப்படும்
    தென்னை மட்டை கிரிக்கெட் ஆட்டம்
    தோற்றுவிட்ட பக்கத்துசந்து பரந்தாமன் கையெழுத்து
    சாணித் தாளில் சரித்திரம் பேசும்

    கூடப்பிறந்தவரை பள்ளியில் அடைகாத்து
    சொல்பேச்சு தட்டினால் தலையிலே குட்டி
    தலைமைப் பிரகடனம் செய்யும்

    வருடா வருடம் வருமாமே வசந்தம்
    வாழ்க்கையில் மட்டுமேன் ஒரே ஓர்முறை?

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |