செப்டெம்பர் 14 2006
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
தராசு : காவல் துறையின் கண்ணியம்
- மீனா [feedback@tamiloviam.com]
Save as PDF | Bookmark in Del.icio.us | | Printable version | URL |

சென்ற சில நாட்களாகவே தமிழகத்தை உலுக்கி வரும் ஆயுதக் கடத்தல் விவகாரம் தமிழக மக்களையும் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் அதிர்சிக்குள்ளாக்கியது. அமைதிப் பூங்கா தமிழகம் - ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான திறமை வாய்ந்தவர்கள் தமிழக காவல் துறையினர் என்ற கருத்துகள் எல்லாம் தவிடு பொடியாகியுள்ள நிலையில் "நடந்த கடத்தலுக்கு தற்போதைய ஆட்சியாளர்கள் மட்டுமே காரணம் என்பது சரியில்லை.. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலிருந்தே இந்த ஆயுதக்கடத்தல் துவங்கிவிட்டது.. அதனால் நடந்த இந்தக் கடத்தல் சம்பவத்திற்கு ஆளும் கட்சியை மட்டும் குறை கூறுவது சரியில்லை.." என்று கூறியுள்ளார் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி.

அரசியல்வாதிகள் கூட தோற்றுப்போகும் அளவிற்கு ஆளும் கட்சியின் மீது இவர் காட்டியுள்ள பக்தி ஆட்சியாளார்களை வேண்டுமானால் குளிர்விக்கலாம். ஆனால் ஒரு பொறுப்பான காவல் துறை அதிகாரி கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் போன்று இப்படி பேசலாமா? கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த மே மாதம் வரை நடந்த கடத்தலுக்கும் இந்த ஆட்சிக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மே மாதம் முதல் செப்டம்பர் வரை நடந்துவந்த கடத்தலுக்கு இந்த அரசு தானே பொறுப்பேற்க வேண்டும்? அப்படியிருக்க சிறு பிள்ளைத் தனமாக "நடந்ததற்கு நான் மட்டுமா பொறுப்பு? நீயும் தானே.." என்ற ரீதியில் காவல்துறை தலைவர் பேசுவது அபத்தம்..

அரசாங்கம் மாறலாம்.. ஆள்பவர்கள் மாறாலாம்... ஆனால் மாறாதவர்கள் அதிகாரிகள் மட்டுமே என்பதெல்லாம் அந்தக்காலம். ஒவ்வொரு அரசாங்கம் மாறும்போதும் ஆட்சியாளர்களால் அதிகாரிகள் பந்தாடப்படுகிறார்கள். எனவே ஓரளவாவது தங்களைக் காத்துக்கொள்ள ஆட்சியாளர்களை அனுசரித்துப்போகவேண்டும் என்று காவல் துறை தலைவர் மட்டுமல்லாமல் பல தரப்பட்ட அதிகாரிகளும் நினைக்கலாம்/ நினைக்கிறார்கள். ஆனாலும் நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு போன்ற எல்லாமே காற்றில் பறக்கவிடப்பட்ட நிலையில், ஏதோ குடிசைத் தொழில் செய்வதைப் போல சிலர் தலைநகரிலேயே ஒரு ஓரமாக இருந்து கொண்டு ராக்கெட் செய்து அண்டை மாநிலத்திற்கு கடத்தும் நிகழ்வை எப்படி முகர்ஜி அவர்களால் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொண்டு - தன் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரில் நடந்த மாபெரும் தவறுக்கு அடுத்தவர் மீது பழியைப் போட முடிகிறது?

நேர்மையான அதிகாரியாக எங்களால் இன்றைய அரசியல்வாதிகளை ஒரேயடியாக பகைத்துக்கொண்டு வாழமுடியாது என்ற உங்களது கூற்று ஏற்கத்தக்கதே.. ஆனாலும் ஒரேயடியாக அரசியல்வாதிகளின் (ஆள்பவர்களின்) ஊதுகுழல்களாகச் செயல்படாமல் ஓரளவிற்காவது உங்கள் சுய அறிவுடன் சிந்திக்க - செயலாற்ற முற்படுங்கள். ஏனெனில் அரசியல்வாதிகள் தாங்கள் செய்யும் தவறுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள நன்றாகத் தெரிந்தவர்கள். ஓட்டு கேட்டு வரும் போது ஒவ்வொரு அரசியல்வாதியும் தரும் வாக்குறுதியில் கால்வாசியைக் கூட நிறைவேற்ற மாட்டார்கள் என்பதை மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளார்கள். ஆகவே மக்கள் அவர்களை முழுமையாக நம்புவதும் கிடையாது.

ஆனால் அதிகாரிகளாகிய உங்களுடன் தான் மக்கள் தினமும் பழகுகிறார்கள். நீங்கள் அவர்களது தேவைகளைப் புரிந்து கொள்வீர்கள் - அவற்றை நிறைவேற்ற ஏதாவது முயற்சி செய்வீர்கள் என்று நினைக்கிறார்கள். எனவே இனியாவது ஓரளவிற்காவது மக்களுக்காக பாடுபட முன்வாருங்கள்.. ஆள்பவர்களின் ஊதுகுழல்களாக அவர்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்து முடிக்கும் பழக்கத்தை விட்டொழிக்க முற்படுங்கள். முக்கியமாக உங்கள் பதவிக்குரிய கண்ணியத்தையும் மாண்பினையும் கட்டிக்காப்பாற்றுங்கள்.

|
oooOooo
மீனா அவர்களின் இதர படைப்புகள்.   தராசு பகுதியில் வந்த இதர படைப்புகள்.
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2006 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |