செப்டம்பர் 15 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
உள்ளங்கையில் உலகம்
திரையோவியம்
கேள்விக்கென்ன பதில் ?
இந்து மதம் என்ன சொல்கிறது ?
திரைவிமர்சனம்
அடடே !!
அமெரிக்க மேட்டர்ஸ்
தொடர்கள்
தொடர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கேள்விக்கென்ன பதில் ? : தீபாவளி சிறப்பு போட்டி - 4
- [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

இந்த பகுதிக்கு வந்தமைக்கு நன்றி.

TO Girlஇதில் வாரம் 5 - 10 கேள்விகளாக அடுத்த 6  வாரங்களுக்கு கேட்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியது இந்த கேள்விக்கான சரியான பதிலை கீழே பின்னூட்டமாக இட வேண்டியதுதான்.

அனைத்துக்கும் / அதிகபடியான கேள்விகளுக்கு சரியான விடை எழுதுவோரின் பெயர் 'அறிவுஜீவி' பட்டத்தோடு அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

இந்த பத்து வாரங்களில் அதிக முறை 'அறிவுஜீவி' பட்டம் பெறுவோரில் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசு வீடு தேடி வரும்.

அட ! தீபாவளி பரிசு போல இருக்கே என்று வியப்பவர்களுக்கு ஒரு சபாஷ் ! 

இனி என்ன கலக்கிபோடுங்க..

சந்தேகம் 1 :  பின்னூட்டத்தில் மொதல்ல எழுதினவரை பார்த்து சரியான பதிலை எல்லாரும் எழுத்திட்டா.. ?

பதில் : மொதல்ல சரியான பதில் எழுதினவருதாங்க.. அறிவுஜீவி.

புனைப்பெயரில் பின்னூட்டம் இடுவோர் அதே பெயரில் தொடர்ந்து இடவும்னு கேட்டுக்கறோம்.


1. 'ஒரு போர்க்களமும், இரண்டு பூக்களும்' நாவலை எழுதியவர் யார்?

2. 'அன்று வேறு கிழமை' நூலின் ஆசிரியர் யார்?

3. 'நிரந்தர மனிதர்கள்' கவிதை நூலை எழுதியவர் யார்?

4. 'ஒளிப்பறவை' நூலின் ஆசிரியர் யார்?

5. 'பஞ்சாரம்' கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?

6. 'காமஞ்சரி' என்ற நூலை இயற்றியவர் யார்?

7. 'ஏர் எழுபது' நூலை இயற்றியவர் யார்?

8. 'உடைந்த நிலாக்கள்' யாருடைய கவிதைத்தொகுப்பு? 

9. 'இராவண காவியம்' எழுதியவர் யார்?

10. மூவருலா எழுதியவர் யார்?

சென்ற வார கேள்விகளுக்கான விடை

1. 'பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது, சிறுத்தையே வெளியே வா' என்று குரல் கொடுத்தவர் யார்?

(விடை:  பாரதிதாசன்)

2. 'பொழுது புலர்ந்தது, யாம் செய்த தவத்தால்' என்று பாடியவர் யார்? (விடை: பாரதியார்)

3. 'கணக்கு பிணக்கு, எனக்கு ஆமணக்கு' என்று எழுதியவர் யார்? (விடை: பாரதியார்)

4. 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' எனத் தொடங்கும்  நூல் எது?  (விடை: பெரிய புராணம்)

5. 'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள்' என்று பாடியவர் யார்? (விடை: இடைக்காடர்)

6. யாருக்கு இரங்கல்கவிதை பாடும்போது, 'சாவே, உனக்கொரு சாவு வந்து நேராதோ' என்று கண்ணதாசன் வருந்தினார்? (விடை: நேரு)

7. 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா' என எழுதியவர் யார்? (விடை: சுரதா)

8. 'தமிழச்சியைப்போல் இன்னொரு பெண் அழகாக இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை' என்று சொன்ன கவிஞர் யார்? (விடை: பாரதியார்)

9. எவரிடம் 'அற்றைத் திங்கள், அவ்வெண்ணிலவில் எந்தையோடு இருந்தோம்' என்று யார் பாடினார்கள்?
(விடை: ஔவையாரிடம் பாரிமகளிர் பாடினார்கள்)

10. 'இருப்பது ஒரு உயிர், அது போவதும் ஒருமுறை, அது தமிழுக்காக போகட்டும்' என்றவர் யார்? (விடை: அறிஞர் அண்ணா)


அதிக கேள்விகளுக்கு சரியான பதில் எழுதிய சென்ற வார அறிவுஜீவி : மீனாக்ஸ்  (m_meenaks@yahoo.com)

வாழ்த்துக்கள் மீனாக்ஸ் :) !!

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |