செப்டம்பர் 16 2004
தராசு
கார்ட்டூன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
பேட்டி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
கட்டுரை
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    திரைவிமர்சனம் : சவுண்ட் பார்ட்டி
    - மீனா
    | Printable version |

    Sathyaraj, Prithiyushaலொள்ளுகளுடன் கூடிய டிபிகல் சத்யராஜின் மற்றொரு படம் சவுண்ட் பார்ட்டி.

    ஊரில் பெரிய பணக்காரரான - அம்மா அப்பாவை சிறு வயதிலேயே இழந்து ஒண்டிக்கட்டையாக வாழும் சத்யராஜ் தன்னுடைய சொந்தப் பணத்தைச் செலவழித்து மக்களுக்கு பல நல்ல காரியங்களைச் செய்கிறார். பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்த பிரதியூஷாவை மேற்கொண்டு படிக்க வைக்க வழியில்லாமல் அவரது அம்மா சபிதா திணறும் போது சத்யராஜ் தான் படிக்கவைப்பதாக வாக்கு கொடுக்கிறார். சொன்ன வாக்கை நிறைவேற்றும் வண்ணம் பிரதியூஷாவை டாக்டருக்கு படிக்கவைக்கிறார். பிரதியூஷா தனக்கு உதவிய சத்யராஜை தெய்வமாக நினைக்க, சத்யராஜ் கூட்டாளிகளான மணிவண்ணன், வடிவேலு மயில்சாமி போன்றவர்கள் பிரதியூஷா சத்யராஜை காதலிப்பதாகக் கூறி ஹீரோவை உசுப்பிவிடுகிறார்கள்.

    உண்மையை உணராமல், பிரதியூஷா தன்னைக் காதலிப்பதாகவே நினைத்துக்கொண்டு கனவுலகில் வாழத் தொடங்குகிறார் சத்யராஜ். படிப்பை முடித்ததும், தன் செலவிலேயே பிரதியூஷாவிற்கு ஒரு ஆஸ்பத்தரியும் வைத்துக் கொடுக்கிறார். ஆரம்பம் முதலே சத்யராஜை வெறுத்துவரும் பஞ்சாயத்து தலைவரான இளவரசு, பிரதியூஷாவின் குடிகாரத் தந்தை (ஜி.ஆர்) சத்யராஜிற்கு எதிராகத் தூண்டிவிடுகிறார். தன் மகனை பிரதியூஷாவிற்குத் திருமணம் செய்துவைக்க இளவரசுவும், ஜி.ஆரும் முடிவுசெய்கிறார்கள்.

    நடக்க இருக்கும் திருமணத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதிர்ந்து போகிறார் சத்யராஜ். அப்போதுதான் பிரதியூஷா தன்னைக் காதலிக்கவில்லை என்ற உண்மையை உணர்கிறார். இதற்கிடையே மகளின் திருமணத்தை நல்லபடியாக முடிக்கவேண்டுமே என்ற கவலையில் பிரதியூஷாவின் அம்மா சபிதா, மகளின் கல்யாணத்தை முன்னின்று நடத்திக் கொடுக்குமாறு சத்யராஜை கேட்டுக்கொள்ள - இவரும் கல்யாண வேலைகள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறார். பிரதியூஷா திருமணம் நல்லவிதமாக முடிந்ததா? சத்யராஜ் நிலை என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.

    மினிமம் கேரண்டி ஹீரோ சத்யராஜை நம்பி படமெடுத்திருக்கிறார்கள். அவரும் ஏமாற்றாமல் தன்னால் முடிந்ததைச் செய்திருக்கிறார். ஆனாலும் அவரது ஸ்டீரியோத் தனமான நடிப்பு சில நேரங்களில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. பிரதியூஷாவின் கடைசிப் படம் இது. இதில் கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். அவ்வளவே..

    மணிவண்ணன், மயில்சாமி, வடிவேலு - ரொம்பவுமே காமெடி என்ற பெயரில் போர் அடிக்கிறார்கள். அதிலும் வடிவேலு தான் போடும் காட்டுக்கூச்சலை மாற்றிக்கொண்டால் புண்ணியமாய் போகும். வழக்கமாக மணிவண்ணன் செய்யும் குடிகாரத் தகப்பன் ரோலை படத்தின் தயாரிப்பாளார் ஜி.ஆர் செய்திருக்கிறார். ஆனாலும் ஜி.ஆருக்கு ரோல் மாடல் மணிவண்ணன் தானோ என்று தோன்றுகிறது. அதே பாணி வில்லத்தனம்.

    ஒரு ஒன் லைன் கதையைச் சுற்றிச் சுற்றி படம் நகருகிறது. அதனாலோ என்னவோ படத்தில் பல ஓட்டைகள். கதையை வடிவமைப்பதில் இயக்குனர் ஆர்த்திகுமார் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். குறைந்த பட்ஜெட் படம் என்பது நன்றாகத் தெரிகிறது. அதற்காக கதையில் கவனமே செலுத்தக்கூடாது என்பது என்ன நியாயம்? (இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஆர்த்திகுமார் மற்றும் சத்யராஜ் கூட்டாக இணைந்து நிறையப் படங்கள் பண்ணும் ஐடியாவில் இருக்கிறார்களாம். அதிலாவது கதையில் கொஞ்சம் கவனம் செலுத்துவாரா இயக்குனர்?)  இசை தேவா. பாடல்கள் எதுவும் ஓஹோ என்று இல்லை. சவுண்ட் பார்ட்டியின் சத்தமே வெளியில் தெரியவில்லை.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |