செப்டம்பர் 16 2004
தராசு
கார்ட்டூன்
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
முத்தொள்ளாயிரம்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
பேட்டி
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
கட்டுரை
சமையல்
க. கண்டுக்கொண்டேன்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
- சத்யராஜ்குமார்
  • கங்கை இல்லாத காசி
  • - பாஸ்டன் பாலாஜி
  • வார்த்தையல்ல, வாக்கியம்
  • - என். சொக்கன்
  • என்னை எழுதியவர்கள்
  • - சத்யராஜ்குமார்
  • சுய சாசனம்
  • - பாஸ்டன் பாலாஜி
  • கோடிட்ட இடங்கள்
  • - சித்ரன்
  • களம்
  • - நாகூர் ரூமி
    யுனிகோடில் தேடல்
    சென்ற இதழ்கள்
    சமையல் : உளுந்து காரப்பூரி
    - மீனா
    | Printable version |

    உளுந்து காரப்பூரி

    தேவையானவை

    கோதுமை மாவு - 200 கிராம்
    உளுத்தம் பருப்பு - 50 கிராம்
    மிளகாய் வற்றல் - 4
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    உப்பு - தேவைக்கேற்ப
    பெருங்காயப் பவுடர் - 1 சிட்டிகை
    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை

    உளுத்தம்பருப்பைத் தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். உப்பு மிளகாய் பெருங்காயம் வெங்காயம் தக்காளி சேர்த்து கெட்டியாக நறநறவென அரைக்கவும். கோதுமைமாவைப் பிசைந்து, பூரி இட்டு, நடுவில் உளுந்து அரைத்ததை பேஸ்ட்போல் தடவி, பிறகு மூடி, பூரியாக இட்டு எண்ணெயில் பொரிக்கவும். சத்து மிகுந்த, சுவையான வித்தியாசமான பூரி ரெடி. தொட்டுக்கொள்ள ஒன்றுமே தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.



    மேதி சப்ஜி

    தேவையானவை

    வெந்தயம் 1 கப்
    கடுகு - 1/2 டீஸ்பூன்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    சோம்பு - 1/2 டீஸ்பூன்
    மஞ்சள்பொடி - 1 டீஸ்பூன்
    தனியாபொடி - 1 டீஸ்பூன்
    மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
    ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
    வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    வெந்தயத்தை முதல் நாள் இரவு, தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலை அதை நீரிலிருந்து வடிகட்டி, தனியாக எடுத்து வைக்கவும். அடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, மற்றும் சீரகம், சோம்பு தாளித்து, அதில் வெந்தயத்தைச் சேர்த்து, தேவையான உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து, தண்ணீர் தெளித்து, மற்ற காய்கறிகளை வேகவைப்பது போல், வதக்கிக்கொள்ளவும். வெந்தயம் நன்றாக வெந்தபிறகு, வெல்லம் மற்றும் தனியா பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து, அத்துடன் மாங்காய் பவுடரையும் சேர்த்து வதக்கி எடுக்கவும் (ஆம்சூர் பவுடருக்குப் பதிலாக, சிறிதளவு புளியை கரைத்து, அந்தத் தண்ணீரையும் சேர்த்து வதக்கலாம்).

    தேவையெனில், ருசிக்காக, இரண்டு டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பை (இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து) வெந்தயத்துடன் சேர்த்து வதக்கலாம். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு மட்டுமல்லாது அனைவருக்குமே வெந்தயக்கீரை நல்லது. இதைச் சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடலாம். சாதத்திலும் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

    PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=D:\Hosting\7909944\html\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
    உங்கள் கருத்து  
    (You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
    Copyright © 2004 Tamiloviam - Authors
    Best viewed with IE 4.x and above, Netscape 7.x , Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
    | Privacy |