செப்டம்பர் 22 2005
தராசு
வ..வ..வம்பு
முச்சந்தி
மனம் போன போக்கில் மனிதன் போகலாமா?
கட்டுரை
உள்ளங்கையில் உலகம்
உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
கேள்விக்கென்ன பதில் ?
கட்டுரை
தொடர்கள்
கவிதை
தொடர்கள்
திரைவிமர்சனம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
கட்டுரை : நம் கடமையைச் செய்கிறோமா?
- மீனா [feedback@tamiloviam.com]
| Printable version | URL |

இந்தக் கேள்வி மனதில் தோன்றக் காரணம் - ஒரு வங்கிக்குச் சென்றால் அங்கே வங்கி ஊழியர் பொறுப்பாக வேலை செய்யவில்லை என்று புகார் படிக்கிறோம். மின்சாரக் கட்டணம் செலுத்தும் இடத்தில், தொலைபேசி அலுவலகத்தில் என எல்லா நிறுவனங்களிலும், எல்லா அரசு அலுவலகங்களிலும் இதே கதைதான் தினமும் நடக்கிறது. தங்கள் கடமையைச் சரிவரச் செய்ய ஒருவரும் விரும்புவதில்லை. மெத்தனம் - அலட்சியம் இவற்றின் வெளிப்பாடே நாம் அன்றாடம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. தனியார் நிறுவனங்களில் இத்தகைய குறைபாடுகள் பொதுவில் இருப்பதே இல்லை.. அப்படி இருந்தாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் புகார்கள் கிளம்புகின்றன.

அரசு சார்ந்த நிறுவனங்களில் மட்டும் ஏன் இத்தகைய குறைபாடுகள்? தவறு யார் பேரில்? அரசு ஊழியர்களும் பொதுத் துறை ஊழியர்களும் மட்டுமா கடமை தவறுகிறார்கள்? சிந்துத்துப்பார்த்தால் அரசே அல்லவா கடமை தவறுகிறது? நாட்டின் அஸ்திவாரமாக விளங்கும் நாடாளுமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் பொறுப்பாக மக்களின் பிரச்சனைகளைக் குறித்து பேசி செயல்படவேண்டிய அரசியல்வாதிகள் தங்கள் கடமை தவறுவதில்லையா?

Dharmendra MPசென்ற ஆண்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பல மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்கள் கடந்த 11/2 வருடக் காலத்தில் ஒரு முறை கூட நாடாளுமன்றத்தில் வாயையேத் திறக்கவில்லை என்கிறது சமீபத்தில் எம்.பிக்கள் குறித்து எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு. இந்த ஆய்வில் இவர்கள் குறிப்பிட்டு கூறியிருக்கும் சில மக்கள்
பிரதிநிதிகள்: தர்மேந்திரா, கோவிந்தா, ஜெயப்பிரதா போன்றவர்கள் (இவர்கள் அனைவரும் லோக்சபாவிற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்) மேலும் ராஜ்யசபா உறுப்பினர்களான சோ ராமசாமி, லதா மங்கேஷ்கர் போன்றவர்கள் ராஜ்யசாபாவிற்கே வருவதில்லையாம். மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல்
பல லோக்சபா, ராஜ்யசபா எம்.பிக்களும் வருடக்கணக்கில் சபையில் நடைபெறும் ஒரு விவாதத்திலும் பங்கேற்பதே இல்லை.. பங்கேற்பதென்ன சபைக்கே வருவதில்லை என்பதே நிஜம்.

எம்.பி.க்கள் லட்சணம் இதுவென்றால் நம்மூர் எம்.எல்.க்கள் மட்டும் என்ன கடமை தவறாத கண்ணியவாண்களா? கடந்த 41/2 வருடக்காலமாக சட்டசபைக்குள் நுழையாமல் வெறுமனே வந்து கையெழுத்துப் போட்டுவிட்டு 5 நிமிடத்தில் ஆதரவாளர்கள் புடைசூழ கிளம்பும் தி.மு.க தலைவரைப் பற்றி என்னவென்று சொல்வது? பொறுப்பான ஒரு எதிர்கட்சியின் தலைவராக சட்டசபைக்குள் தன் தொகுதி மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் தன்னுடைய அடிப்படை உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள சும்மா ஒரு கையெழுத்தை மட்டும் போடும் இவர் உண்மையாக மக்களுக்காகப் பாடுபடுகிறாரா?

Jayapradhaஆக அரசே - அரசை நடத்தும் அரசியல்வாதிகளே தங்களது கடமைகளைச் சரிவரச் செய்வதில்லை. இவர்களது நிலையே இப்படி என்றால் இத்தகைய அரசியல்வாதிகள் எப்படி கடமைத் தவறும் அரசு அலுவலர்களை எப்படிக் கண்டிபார்கள்? நாமும் ஒவ்வொரு முறையும் இவர்களைப் பற்றியெல்லாம் ஆதங்கப்பட்டு அக்கம்பக்கத்தவரிடம் புலம்புகிறோமே தவிர உருப்படியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது கிடையாது. நமக்காக ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்ய வேண்டியவர் தனது கடமையிலிருந்து தவறும் போது புலம்பிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுமே செய்யாதவர்களாக இருக்கிறோமே - அவர்கள் கடமை தவறியவர்கள் என்றால் அவர்களது தவறைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்தவேண்டியது நமது கடமையல்லவா? அதை செய்ய நாம் தவறும் போது நாமும் கடமைத் தவறியவர்கள் தானே? தேர்தல் நாளன்று ஓட்டுப் போடுவதையே தவிர்க்கும் நாம் இப்படி இருந்தால் கடமைத் தவறியவர்களை நாம் எப்படி தண்டிப்பது?

புலம்பிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு கடமைத் தவறிய அரசியல்வாதிகளை மறுமுறைத் தேர்ந்தெடுக்காமல் அவர்களுக்கு எதிராக ஓட்டுப் போட்டு அவர்களைத் தோற்கடித்து பாடம் புகட்டுவோம். பிறகு அரசு அலுவலர்களைத் தண்டிக்கும் வழிகளைப் பார்ப்போம். நம்முடைய வேலையை முதலில் ஒழுங்காக நாம் செய்யத் துவங்கினாலே போதும்.. நாடு திருந்திவிடும்.

உங்கள் கருத்து  
Erai Nesan
9/26/2005 , 3:19:01 AM

 [Comment url]
கடந்த 58 வருட காலமாக நடந்து கொண்டிருப்பது தானே!
உடன்பிறப்புக்கு என்று தத்துவ மழை பொழிந்து மொத்த தமிழர்களையும் மடையர்களாகவே இருக்க வைத்து விட்டு மகளை இந்தியில் பட்டம் பெற வைத்தும், பொறுக்கி, ரவுடி மகன்களை அடுத்த தலைவர்களாக்கியும், மருமகன், பேரனை மத்தியில் அனுப்பியும் மொத்த குடும்பத்திற்காக கட்சி நடத்தும் தமிழை காக்க பிறந்த சிறுபான்மையினரின் பாதுகாவலனாக புழுகி கொண்டிருப்பவர்கள் ஒரு புறம். மொத்த தமிழ் நாடும் தன் குடும்ப சொத்தாக நினைக்கும் ஒரு காலத்தில் அவிழ்த்து போட்டு ஆடி காசு சம்பாதித்த செல்வி(??!!) - அம்மா, அவர் தோழிகள் மறு புறம். இடையில் தமிழ் நாட்டை ஜாதியின் பெயர் கூறி ஆழத் துடிக்கும் பேட்டை ரவுடிகள். புதிது புதிதாக நாற்காலி போதியில் கழைக் கூத்தாடிகள் வேறு. என்ன செய்ய தோழி(உடன்பிறப்பே ஸ்டைலில்).

//நாமும் ஒவ்வொரு முறையும் இவர்களைப் பற்றியெல்லாம் ஆதங்கப்பட்டு அக்கம்பக்கத்தவரிடம் புலம்புகிறோமே தவிர உருப்படியாக எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது கிடையாது//

//புலம்பிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு கடமைத் தவறிய அரசியல்வாதிகளை மறுமுறைத் தேர்ந்தெடுக்காமல் அவர்களுக்கு எதிராக ஓட்டுப் போட்டு அவர்களைத் தோற்கடித்து பாடம் புகட்டுவோம்.//

உருப்படியான ஏதாவது ஆலோசனை கூறுவீர்கள் என்று எதிர்பார்த்தால் காலம் காலமாக நாம் செய்வதையே மறுமொழிகிறீர்களே.

பேசாமல் அன்னியனிடம் கருட புராண தண்டனை கொடுக்க கூறி விடலாம். ஓ அவருக்கும் பிராமணர்களை கண்டால் வலிப்பு நோய் வராதே.

என்ன செய்ய சகோதரி (தற்பொழுது பெண்களை தோழி, சகோதரி என்று அழைக்கக் கூட முடிய வில்லை. பாழாய் போன அவர்கள் நினைவு தான் வருகிறது.) ஜனனாயகம் நமக்கு தந்த பரிசு இது.

ஒரு பேட்டியின் போது எழுத்தாளர் சாவித்திரிகண்ணன் அவர்கள் ஜனனாயகத்தைக் குறித்து பதிலளித்தது தான் நினைவு வருகிறது.

யார் நல்லவர் என்று பார்த்து தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக இரண்டு கெட்டவரில் யார் குறைந்த அளவு தீமை செய்யும் கெட்டவன் என்று பார்த்து தேர்ந்தெடுப்பது தான் ஜனனாயகம் என்றார். சரி தானோ?

வலை மதப் போருக்கிடையில் சிறிது நேரம் நல்ல சமூக சிந்தனையில் பயன்பட்டது. சிறந்த பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.



   
ragu
9/27/2005 , 11:54:09 AM

 [Comment url]
அடடா, சோ ராமசாமி கூட வரமாட்டாரா? எல்லோரைப் பற்றியும் பெரிதாகப்பீத்துவாரே. முக்கியமாக எதுவும் செய்யாமல் சும்மா பாராளுமன்றத்தில் குந்தியிருப்பவர்களைப் பற்றி! இதுபற்றி இவரைக் கேளுங்கள்
சும்மா இந்தப் பாராளுமன்றமே பம்மாத்து அது இது என்று கதை அளப்பார்.
துக்ளக் வாசிப்பதே பகவத்கீதை/பைபிள்/குரான் இற்குச்சமம் என்று இருக்கும் கூட்டம் அதற்கும் அமாம் சாமி போடுவார்கள்!
   
Ramya
9/27/2005 , 7:34:00 PM

 [Comment url]
திரு நேசன் அவர்கள் மிக சரியாக சொன்னார்கள். கட்டுரை விட அவரது கருத்து மிக நன்றாக உள்ளது
   
Krishnamachary.R
10/2/2005 , 1:12:55 AM

 [Comment url]
மீனா எழுதிய கட்டுரை படித்தேன் அதற்கு இறைனேசன் எழுதிய
கருத்துக்களைப் படித்தேன் 58 வருடங்களாக இதுதான் நடக்கிறது
ஆனால் அதற்கு தீர்வு ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார்
இது சரியான வாதம்
அதற்கு நான் எனக்குத் தெரிந்த வரையில் தீர்வு காண முயன்றிருக்கிறேன்

ஆமாம் சுதந்திரம் வாங்கி 58 ஆண்டுகள்
ஆகியும் இன்னும் நம்மால் நாட்டுக்கும் நமக்கும்
நல்லது செய்ய சரியானவர் யார் என்று
கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறோம்
என்பதுதான் உண்மை


பல வெளிநாடுகளுக்கு சென்று பார்த்த என்னுடைய
அனுபவத்தில் சொல்கிறேன் எல்ல நாடுகளிலும்
ஊழல் இருக்கிறது... இல்லையென்று சொல்லவில்லை
ஆனால் மக்களின் நலத்துக்காக பல நல்ல திட்டங்களையும்
றைவேற்றிவிட்டு அவர்களும் கொஞ்சம் சுருட்டிக் கொள்கிறார்கள்


ஆனால் நம் நாட்டில்தான் மக்களைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ
கொஞ்சமும் கவலைப் படாமல் தனக்கும் தன் தலைமுறைகளுக்கும்
சொத்து சேர்ப்பதையே குறிக்கோளாக மனதில் வைத்துக் கொண்டு
வார்த்தை ஜாலம் செய்து மக்களை எமாற்றும் கலையை
மட்டுமே.....தகுதியாகக் கொண்டு
கொலை, கொள்ளை, கற்ப்பழிப்பு மேலும் எல்லாவித குற்றங்களையும்
செய்துவிட்டு ,
அரசியல்வாதிகள் முதல் சாமியார்கள் வரை
தப்பித்தவறி எப்போதாவது நடைபெறும் அதிசயம் போல
கைது நாடகம் அரங்கேறும் போதும்
ஏதோ நாட்டுக்காக தியாகம் செய்யப் போகும்போது
அவர்களை கைது செய்தது போல,

கொஞ்ஜமும் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே
எப்படியும் நாலுநாட்களில் வெளியே வந்துவிடுவேன்
என்னும் திமிருடன் காவல்துறைவண்டியில் ஏறும்
இவர்களைப் பார்க்கும் போது உள்ளம் எரிகிறது




நம் நாடும் மக்களும் கொஞ்ஜமாவது நம்முடைய உரிமைகளை
சரியான விகிதத்தில் அனுபவிக்க வேண்டுமானால்
நாம் நம்முடைய தவறுகளையும் திருத்திக் கொண்டு
தவறு செய்பவர்களையும் திருத்தியாக வேண்டும்

மீண்டும் சுதந்திரம் என்று நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்

அதில்

அன்னியர் நம்மை ஆண்டு வந்தார்
அடிமைகளாய் நாம் மாண்டு வந்தோம்
அன்னியரிடமிருந்து மீண்டுவிட்டோம் அன்று
என்று மீள்வோம் நம்மவரிடமிருந்து ?

என்று எழுதி இருந்தேன்


ஆகவே இப்போது நாம் நம்மவரிடமிருந்தே மீளவேண்டிய
கட்டாயத்தில் இருக்கிறோம் இதற்க்கு என்னசெய்ய வேண்டும் ?

ஏதோ எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன்

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை கதாநாயகன் அழிப்பதுபோல
திரைப்படங்களை பார்த்துவிட்டே ஏதோ உண்மையாகவே
ஊழலை ஒழித்துவிட்ட கதாநாயகன் நம் நாட்டைக் காக்க
வந்துவிட்டதுபோல் நமக்கு ஏற்படும் போலியான எண்ணங்களை
மனதிலே இருந்து அழித்துவிட்டு

யதார்த்தமாக வெகு யதார்த்தமாக சிந்திக்கக் கற்றுக் கொள்ள
வேண்டும்
மாயையிலிருந்து விடுபட வேண்டும்
உண்மையை சொல்லப் போனால் எல்லா நாடுகளிலும்
உள்ள மக்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் கூட
நம் நாட்டு மக்களுக்கு கிடைப்பதில்லை -
இதுதான் தர்சனமான அப்பட்டமான கசக்கும் உண்மை

சட்டங்கள் கடுமையாக இருக்கும் சில நாடுகளில் கூட
ஊழல் நடக்கிறது இல்லை என்று சொல்லவில்லை
ஆனால் அங்கு அரசியல்வாதிகளூக்கு மனசாட்சி இருக்கிறதோ
இல்லையோ கொஞ்சம் பயம் இருக்கிறது
சட்டத்திடம் பயம் இருக்கிறது

ஆகவே நம் நாட்டிலும் சட்டங்கள் கடுமையாகவேண்டும்
அதுமட்டுமில்லை சட்டங்கள் மன்னனாக இருந்தாலும் மக்களாக
இருந்தாலும் பாரபட்ஷமின்றி நடைமு€றைப் படுத்தப் படவேண்டும்

தாராளமாக வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கும் அரசியல் வாதிகள்
அந்த வாக்குறுதிகளை ரைவேற்றாவிட்டால் அவருக்கு கடுமையான
தண்டனை மக்கள் முன்னால் ரைவேற்றப் படவேண்டும்

தலைகுனியாத நீதி , தலைகுனியாத நீதிபதிகள்,
தலைகுனியாத நீதிமன்றங்கள் எல்லாம் வேண்டும்

உண்மையாக சொன்னால்
பதவிக்கு வரவே எல்லாரும் பயப்படவேண்டும்
பதவி வாங்கிவிட்டு நல்லது செய்யாவிட்டால் தண்டிக்கப் படுவோம்
என்கிற உணர்வு இருந்தால் ஒழிய இது சாத்தியமில்லை
நேர்மை, நீதீ, யாயம் இவை எல்லாம் கவிதைகளிலும்
நாடகங்களிலும் திரைப் படங்களிலும் மட்டும் பேசப் படாமல்
உண்மையாக சத்தியமாக கடைபிடிக்கப் படவேண்டும்
அதை விட அதிகமாக நம் நாட்டுமக்களுக்கு நாம் சுதந்திரம்
வாங்குவதற்கு முன்னால் அடிமைப் பட்டிக் கிடந்த போது
இருந்த சுதந்திர உணர்வு சத்தியமான விடுதலை வேட்கை
உணமையான நாட்டுப்பற்று மனசாட்சியுடன் கூடிய நேர்மை
மீளவேண்டும்..... அப்போதுதான் நாம் மீள்வோம், நம் நாடு மீளும்
நம் சந்த்ததிகளாவது உண்மையான சுதந்திரத்தின்
முழு பலனை அனுபவிக்க முடியும்

தீயில் வெந்த்து மடிந்தாலும் மீண்டும் உயிரோடு
வெளிவரும் பீனிக்ஸ் பறவை என்று சொல்லுவார்களே
அதுபோல நாமும் தீயின் மலராய் மறுபடி பூத்து
இழந்த சுதந்திரத்தை நம்மவரிடமிருந்தும் மீட்ப்போம்

ஆகவே நமக்குத் தேவை
மீண்டும் சுதந்திரம்.. மீண்டும் சுதந்திரம்.. மீண்டும் சுதந்திரம்

வந்தேமாதரம்

இப்படிக்கு

தமிழ்த்தேனீ
என்கிற
ஆர்.கிருஷ்ணமாச்சாரி

   
Erai Nesan
10/2/2005 , 4:09:24 AM

 [Comment url]
------------------------------------------------------------------------
//பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் நந்தா.//

ம். நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.

இப்பொழுது உங்கள் "கடமையை" மிகச் சரியாக செய்திருக்கிறீர்கள்.

உங்களின் "னம் கடமையை செய்கிறோமா" கட்டுரைக்கு (இரண்டு மீனாக்களும் ஒன்றெனில்) பின்னூட்டம் இட்டதைக் குறித்து வெட்கப்படுகிறேன்.

ம். தமிழ் நாடு எங்கே உருப்பட!
---------------------------------------------------------------------------
மேலே காணப்படும் பின்னூட்டம் மீனா அவர்கள் எழுதிய திரை விமர்சனத்திற்கு பதில் எழுதியது. இரண்டு மீனாக்களும் ஒன்று எனில் இவருடைய மற்ற பதிவுகளை இனி படிக்கக் கூடாது என நினைத்திருந்தேன்.

இங்கு தமிழ் தேனீயின் கருத்தை படித்தபோது என்னையறியாமல் பதில் எழுத தோன்றியது. எனினும் முதலில் இரண்டு மீனாக்களும் ஒன்றெனில் மீனாவிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

//தர்மேந்திரா, கோவிந்தா, ஜெயப்பிரதா போன்றவர்கள் (இவர்கள் அனைவரும் லோக்சபாவிற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்)//

மேலே நீங்கள் எழுதியிருக்கும் வரிகள் உண்மையில் உங்கள் மனதிலிருந்து தோன்றியவைகள் எனில், பின் எதற்காக அதே கூட்டத்திற்கு வியாபார உத்திகளை கற்றுக் கொடுக்க(திரை விமர்சனம்) சென்றீர்கள். அன்றாடம் உழைத்து தன் குடும்பத்தை பாதுகாக்கும் ஏழை உழைப்பாழிகளின் ரத்தத்தை உறிஞ்சி கொழிக்கும், வளரும் இளம் தலைமுறைகளை நாட்டைப் பற்றியும் சமுதாயதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் ஒரு வித மயக்கத்தில் வைத்துக் கொண்டு, சிறிது பயத்துடன் நடக்கும் அப்பாவி இளைஞர்களையும் பெண்களின் முகத்தில் ஆசிட் அடிக்கத்தூண்டும் விதத்தில் சமுதாயத்தில் வக்கிரத்தை தூண்டும்(னீ பாத்துட்டு போனாலும் பார்க்காமல் போனாலும் நான் பார்த்துக் கொண்டே தான் இருப்பேன் - எழுதியவனின், பாடியவனின், இசை அமைத்தவனின், படம் எடுத்தவனின், நடித்தவனின்..... மகள், மனைவி, சகோதரியை பார்த்துக் கொண்டேயிருந்தால் சும்மா விடுவானா. என்ன அக்கிரமம் ஐயா இது) கலை என்ற பெயரில் தமிழ் பண்பாட்டையே குழி தோண்டி புதைக்கும், ஆபாசத்தின் இருப்பிடத்தை வளர விடுவது சரிதானா.

//ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை கதாநாயகன் அழிப்பதுபோல
திரைப்படங்களை பார்த்துவிட்டே ஏதோ உண்மையாகவே
ஊழலை ஒழித்துவிட்ட கதாநாயகன் நம் நாட்டைக் காக்க
வந்துவிட்டதுபோல் நமக்கு ஏற்படும் போலியான எண்ணங்களை//

இதனால் அல்லவோ இந்த கழிசடைகளை நீங்கள் ஆதங்கப்பட்டது போல் நாட்டை ஆளவும் அப்பாவி மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை மக்கள் முன் எடுத்துரைப்பதற்கு பதிலாக, அந்த காட்டுமிராண்டி கூட்டத்திற்கு போய் ஆலோசனை கூறுவது தான் விளங்கவில்லை. இது தான் உங்களின் சமுதாய அக்கறையா?

தமிழ் தேனீ கூறியது போல் //நம் நாடும் மக்களும் கொஞ்ஜமாவது நம்முடைய உரிமைகளை
சரியான விகிதத்தில் அனுபவிக்க வேண்டுமானால்
நாம் நம்முடைய தவறுகளையும் திருத்திக் கொண்டு
தவறு செய்பவர்களையும் திருத்தியாக வேண்டும்//

முதலில் நம்மை நாம் திருத்துவோம். அதுவரை இது போன்ற போலி சமுதாய அக்கறையை வெழிப்படுத்த வேண்டாமே!

இனி இரண்டு மீனாக்களும் ஒன்றில்லாத பட்சத்தில் மேலே கூறிய அனைத்தும் நான் திருப்பி எடுத்துக் கொள்கிறேன்.

அன்பின் தமிழ் தேனீ(இப்பெயர் என்னை மிகவும் கவர்ந்ததால் இவ்வாறே அழைப்பதில் ஆட்சேபணை ஒன்றும் இல்லையே) உங்கள் கருத்து மிகவும் நன்று. நிச்சயமாக நமக்கு //மீண்டும் சுதந்திரம்.. மீண்டும் சுதந்திரம்.. மீண்டும் சுதந்திரம்// வேண்டும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால் அதற்குரிய வழி என்ன?

//கொஞ்ஜமும் வெட்கமின்றி சிரித்துக் கொண்டே
எப்படியும் நாலுநாட்களில் வெளியே வந்துவிடுவேன்
என்னும் திமிருடன் காவல்துறைவண்டியில் ஏறும் //

இதற்குக் காரணம்,

//ஏதோ உண்மையாகவே
ஊழலை ஒழித்துவிட்ட கதாநாயகன் நம் நாட்டைக் காக்க
வந்துவிட்டதுபோல்//

அந்த ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி கொழிக்கும் (சூ(டூ)ப்பர் ஸ்டாரின் சம்பளம் 10 கோடி - எவன் அப்பன் வீட்டு பணம்) டப்பாக்களின் நடிப்பில் மயங்கி கிடப்பதும் தானே?

//ஆகவே நம் நாட்டிலும் சட்டங்கள் கடுமையாகவேண்டும்
அதுமட்டுமில்லை சட்டங்கள் மன்னனாக இருந்தாலும் மக்களாக
இருந்தாலும் பாரபட்ஷமின்றி நடைமு€றைப் படுத்தப் படவேண்டும்

தாராளமாக வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கும் அரசியல் வாதிகள்
அந்த வாக்குறுதிகளை ரைவேற்றாவிட்டால் அவருக்கு கடுமையான
தண்டனை மக்கள் முன்னால் ரைவேற்றப் படவேண்டும்

தலைகுனியாத நீதி , தலைகுனியாத நீதிபதிகள்,
தலைகுனியாத நீதிமன்றங்கள் எல்லாம் வேண்டும்//

இவை அனைத்தையும் யார் கொண்டு வருவார். வெறுமனே இவை எல்லாம் வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தால் தானே நடந்து விடுமா? இவற்றை நாம் யாரிடம் கேட்பது, இதே சாக்கடைகளிடம் தானே.

//தீயில் வெந்த்து மடிந்தாலும் மீண்டும் உயிரோடு
வெளிவரும் பீனிக்ஸ் பறவை என்று சொல்லுவார்களே
அதுபோல நாமும் தீயின் மலராய் மறுபடி பூத்து
இழந்த சுதந்திரத்தை நம்மவரிடமிருந்தும் மீட்ப்போம்//

தேவையை மட்டும் கடைசி வரை கூறிய நீங்களும் எப்படி அந்த தேவைகளை மீட்பது என்பதை சொல்லவே இல்லையே?

//இழந்த சுதந்திரத்தை நம்மவரிடமிருந்தும் மீட்ப்போம்//

எப்படி?

எழுத்து மட்டும் சதிக்கும் என்பதில் நிச்சயமாக எனக்கு நம்பிக்கை இல்லை. எனில் எதற்கு காந்தியும், போசும், பகத் சிங்கும், திப்புவும் - அவர்களுக்கும் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் மட்டும் இருந்திருக்க வேண்டியது தானே?

ஆமாம் //நமக்குத் தேவை
மீண்டும் சுதந்திரம்.. மீண்டும் சுதந்திரம்.. மீண்டும் சுதந்திரம்//

அதற்கு மக்களை அறியாமையில் இருந்து, நட்சத்திர கொள்ளைக் கூட்டத்திடமிருந்து முதலில் மீட்கப் பாடுபட வேண்டும். என்றாலே //நம் நாட்டுமக்களுக்கு நாம் சுதந்திரம்
வாங்குவதற்கு முன்னால் அடிமைப் பட்டிக் கிடந்த போது
இருந்த சுதந்திர உணர்வு சத்தியமான விடுதலை வேட்கை
உணமையான நாட்டுப்பற்று மனசாட்சியுடன் கூடிய நேர்மை// திரும்ப கிடைக்கும்.
   
Erai Nesan
10/2/2005 , 4:30:04 AM

 [Comment url]
பார்ப்பதும், படிப்பதும், பாராட்டுவதோடும் மட்டும் இருந்து விடாமல் அவற்றை நாமறிந்தவர்களுக்கும் எத்தி வைத்து நமது "கருத்தில்" ஒன்றிணைய வைக்கலாமே! (மீண்டும் சுதந்திரத்திற்கு மற்றொரு இந்திய தேசிய இராணுவம் அமைக்க அல்ல!!!!!!!!!!!!)

மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி (எவ்வாறு அழைப்பது - மீண்டும் அதே சங்கடம் - செல்வி, சகோதரி, தோழி, அம்மா, தாயே - பாவிகள் புனிதமான அந்த வார்த்தையைக் கூட விட்டு வைக்கவில்லை.) ரம்யா அவர்களே!
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2005 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |